அரசு பள்ளி சுவர் இடிந்து விழுந்து மாணவர் பலி – குடும்பத்தினர் போராட்டத்தால் பரபரப்பு

School Tragedy in Tiruvallur: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியின் சுவர் இடிந்து 7 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பிரேத பரிசோதனைக்கு மாணவரின் உடலை தரமாட்டோம் என குடும்பத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அரசு பள்ளி சுவர் இடிந்து விழுந்து மாணவர் பலி - குடும்பத்தினர் போராட்டத்தால் பரபரப்பு

பள்ளி சுவர் இடிந்து விழுந்து மாணவன் பலி

Updated On: 

16 Dec 2025 15:26 PM

 IST

திருவள்ளூர், டிசம்பர் 16:  திருவள்ளூர் (Tiruvallur) மாவட்டம் திருத்தணி அருகே கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியின் சுவர் இடிந்து 7 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  பள்ளியின் நடைமேடையில் அமர்ந்து மதிய உணவு (Lunch) சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததில் மாணவன் மோகித்தின் தலையில் பலத்த காயமடைந்தது. இந்த நிலையில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.  இந்த நிலையில் மாணவரின் மரணம் குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் உடனடியாக பள்ளிக்கு வந்து மாணவனின் உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் காண்போரை கலங்க வைத்தது.

சுவர் இடிந்து விழுந்து மாணவர் பலி

இந்த நிலையில் பிரேத பரிசோதனைக்கு மாணவரின் உடலை தரமாட்டோம் என குடும்பத்தினர் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.  பள்ளி வளாகம் முறையாக பராமரிக்கப்படாததே இந்த சம்பவத்து காரணம் எனவும், பள்ளி நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறையினர் இந்த சம்பவததுக்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும் பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிக்க : தருமபுரியில் கொடூர விபத்து…சாலையில் சிதறிய மனித உறுப்புகள்…இடுபாடுகளில் சிக்கி உயிரிழந்த 4 பேர்!

இந்த நிலையில் காவல்துறையினர் குடும்பத்தினரை சமாதானப்படுத்த முயன்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளின் தரம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. இதுபோன்ற சம்பவம் இனி நடைபெறக் கூடாது எனவும் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு உடனடியாக மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கவிடுத்து வருகின்றனர்.

முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள கரட்டாங்காடு பகுதியில் உள்ள அரசு பள்ளி செயல்படுகிறது.  இங்கு  பத்தாம் வகுப்பு வரை செயல்படும் நிலையில்,  நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.  இந்நிலையில் பள்ளிக்கு கூடுதல் கட்டிடங்கள் கட்டும் பணி நடைபெற்று வரும் நிலையில், கட்டுமான பணிகளுக்கான பொருட்கள் பள்ளி வளாகத்தில் வைத்துள்ளனர்.
இந்நிலையில் தொடர்ந்து பெய்த மழை பெய்து வந்த நிலையில், பள்ளி சுவரின் ஓரம் மண் இருந்த நிலையில், அதனை ஜேசிபி மூலம் அகற்றும்போது  காரணமாக   மழை நீரில் ஊறி இருந்த சுற்றுச்சுவரின் ஒரு பகுதி திடீரென சரிந்து கீழே விழுந்தது. பள்ளி வளாகத்தில் மாணவர்கள் இல்லாத நிலையில், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
எச்1பி விசாதாரர்களின் கணவன், மனைவிகளை பாதிக்கும் அமெரிக்க அரசின் புதிய விதி - செனட்டர்கள் எதிர்ப்பு
சீன எல்லையில் விபத்துக்குள்ளான லாரி - 21 பேர் பலி
பீகாரில் ரயிலில் பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்
பெங்களூரு ஆட்டோ ஓட்டுநரின் செயலால் நெகிழ்ந்த பெண்