கோவையில் கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து சம்பவம்…கைதான மாணவர் பரபரப்பு வாக்குமூலம்!

Coimbatore Crime: கோயம்புத்தூர் மாவட்டத்தில் தனியார் கல்லூரியின் வகுப்பறையில் மாணவியை கத்தியால் குத்திய மாணவரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவத்துக்கான காரணம் குறித்து அந்த மாணவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார். மாணவரின் இந்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து சம்பவம்...கைதான மாணவர் பரபரப்பு வாக்குமூலம்!

கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய மாணவர் கைது

Published: 

23 Jan 2026 12:03 PM

 IST

கோயம்புத்தூர் மாவட்டம், சரவணம்பட்டியில் ஒரு தனியார் தொழில்நுட்ப கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில், பி.டெக். ஐ.டி. முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவியும், அவருடன் ஒரே வகுப்பில் படித்து வந்த 18 வயது மாணவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அதன் அடிப்படையில், இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். இதன் பின்னர், அவர்களின் நட்பு காதலாக மாறியது. இந்த நிலையில், திடீரென நேற்று வியாழக்கிழமை ( ஜனவரி 22) கல்லூரியின் வகுப்பறையில் இருந்த மாணவியை, அந்த மாணவன் திடீரென கத்தியால் குத்தினார். இதில், பலத்த வெட்டுக்காயம் அடைந்த மாணவியை ஆசிரியர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட 18 வயது மாணவனை கைது செய்தனர்.

மாணவியிடம் காதலிப்பதாக கூறிய மாணவர்

இதைத் தொடர்ந்து, அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்களை தெரிவித்தார். இதில், நானும், அந்த மாணவியும் வெகு நாட்களாக காதலித்து வந்தோம். இதனிடையே, எங்களுடன் படித்து வந்த மற்றொரு மாணவர், அந்த மாணவியை காதலிப்பதாக தெரிவித்தார். ஆனால், அந்த மாணவரை, அந்த மாணவி காதலிக்கவில்லை என்று நிராகரித்து விட்டார். இருந்தாலும், அந்த மாணவனிடம், எனது காதலி தொடர்ந்து பேசி வந்தார். இது எனக்கு பிடிக்கவில்லை.

மேலும் படிக்க: இன்ஸ்டாகிராம் ரூபத்தில் வந்த எமன்…திருமணமான மகளை கொலை செய்த தந்தை…நிர்கதியான 2 வயது பெண் குழந்தை!

மாணவரிடம் பேசி வந்த மாணவி

அப்போது, எனது காதலியிடம் இனிமேல் நீ அந்த மாணவருடன் பேசக்கூடாது என்று கண்டித்தேன். ஆனால், நான் சொல்வதை மதிக்காமல் தொடர்ந்து அந்த மாணவரிடம், எனது காதலில் நட்பு ரீதியாக பேசி வந்தார். இதனால், நான் கடும் ஆத்திரமடைந்தேன். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில், நேற்று காலை வகுப்பறையில் அந்த மாணவரிடம், எனது காதலி பேசிக் கொண்டிருந்தார். இதை பார்த்ததும் எனக்கு கூடுதல் கோபம் ஏற்பட்டது. அப்போது, அவளிடம் ஏன் என் பேச்சை கேட்காமல் அந்த மாணவரிடம் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டேன்.

பையில் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தினேன்

இதனால், மீண்டும் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது, நான் எனது பையில் மறைத்து வைத்திருந்த காய்கறிகள் வெட்டும் கத்தியால் மாணவியின் முகம் மற்றும் கையில் பலமாக வெட்டினேன். அவள் ரத்த வெள்ளத்தில் கதறி அழுதார். உடனே, மற்ற மாணவர்கள் என்னை பிடிக்க முயன்றனர். இதனால், பயத்தில் நான் அங்கிருந்து தப்பி ஓடி விட்டேன் என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: தாயுடன் தவறான உறவு…4 வயது குழந்தை மீது விழுந்த ஆபாச பார்வை..அடுத்து நடந்த விபரீதம்!

வனப்பகுதியைச் சுற்றிப் பார்த்து ரசித்த இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள்..
பொது சொத்துக்களை மதிக்கும் பயணிகள் மட்டுமே பயணம் செய்ய வேண்டும்.. வந்தே பாரத் ரயில் குறித்த வைரல் போஸ்ட்..
ஐசிசி உலகக் கோப்பை 2026.. ஐசிசியின் எச்சரிக்கை.. வங்கதேசத்தின் இறுதி பதில்
குட்டியை காப்பாற்ற தாய் குரங்கு செய்த செயல்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..