சேலத்தில் என்ன நடந்தது? பந்தல் போடலையா? வேலூர் பொதுக்கூட்டம் – தவெகவினரிடம் எஸ்பி கேள்வி

TVK Vijay visits Vellore : தவெக தலைவர் விஜய் வருகிற பிப்ரவரி 23, 2026 அன்று வேலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவிருக்கும் நிலையில், தவெகவினரிடம் பந்தல் போடவில்லையா? சேலத்தில் என்ன நடந்தது தெரியுமா? என எஸ்பி கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சேலத்தில் என்ன நடந்தது? பந்தல் போடலையா? வேலூர் பொதுக்கூட்டம்  - தவெகவினரிடம் எஸ்பி கேள்வி

விஜய்

Published: 

17 Feb 2026 16:55 PM

 IST

சென்னை, பிப்ரவரி 17 : சேலத்தை (Salem) தொடர்ந்து வேலூரில் வருகிற பிப்ரவரி 23, 2026 அன்று நடைபெறவிருக்கும் தவகெ தலைவர் விஜய்யின் (Vijay) பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பா நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த பொதுக்கூட்டத்தில் வயதனாவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் ஆகியோர் பாதுகாப்பு நலன் கருதி பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதை தவிர்க்குமாறு அக்கட்சியின் வேலூர் மாவட்ட செயலாளர் வேல்முருகன் அறிவுறுத்தியுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் பரபரப்பாகி வரும் நிலையில், தவெக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வருகிறார். அ்த வகையில் வருகிற பிப்ரவரி 23, 2026 அன்று தவெக தலைவர் விஜய் வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவிருக்கிறார்.

வேலூர் மாவட்டத்தில் தவகெ பொதுக்கூட்டம்

தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டம் வேலூருக்கு அருகில் பள்ளிக்கொண்ட அகரம் சேரி என்ற பகுதியில் நடைபெறவிருக்கிறது. இதற்காக அந்த பகுதியில் அமைந்துள்ள திடலை நிர்வாகிகள் சீர் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கேட்டு, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமனிடம் தவெக சார்பில் பிப்ரவரி 17, 2026 அன்று கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : காங்கிரஸ் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. கே.சி வேணுகோபால் தலைமையில் முக்கிய ஆலோசனை..

இந்த நிலையில், திடலை ஆய்வு செய்த எஸ்பி சிவராமன், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து தவெகவினரிடம் கேள்வி எழுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக சேலத்தில் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் வெயிலினால் என்ன நடந்தது தெரியுமா? மைதானத்தில் பந்தல் போடவில்லையா? என கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலளித்த தவெகவினர், மதியம் 12 முதல் 1 மணிக்குள் நிகழ்வு முடிந்து விடும் என்பதால் பந்தல் அமைக்கவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ குழு அமைக்கிறோம் என பதிலளித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வேலூர் மாவட்ட செயலாளர், விஜய்யின் பொதுக்கூட்டத்திற்கு விரைவில் அனுமதி கிடைத்துவிடும். காவல்துறையின் விதிமுறைகளை 100 சதவிகிதம் கடைபிடிப்போம் என உறுதியளித்துள்ளோம். மக்களின் பாதுகாப்புக்கு அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டு வருகின்றன. 5 சட்டமன்ற தொகுதிகளுக்காக நடைபெறும் இந்த மக்கள் சந்திப்புக்கு 33 ஏக்கர் பரப்பளவில் மேடை அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுயிலும் 5,000 பேர் வீதம் மொத்தம் 25,000 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

இதையும் படிக்க : 9 நியோ டைடல் பார்க்.. 25 ஆயிரம் பேருக்கு வேலை.. பட்ஜெட்டில் அறிவிப்பு.. லிஸ்டில் உங்க ஊர் இருக்கா!

மினி மருத்துவமனை

மேலும் திடலில் குடிநீர் தொட்டில்கள், ஒரு லட்சம் தண்ணீர் பாட்டில்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் மக்கள் நலனை கருத்தில் கொண்டு 50 மருத்துவர்கள், 100 செவிலியர்கள் கொண்ட மினி மருத்துவமனை அமைக்கப்படும். மேலும் 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் இருக்கும். குழந்தைகள், வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள் கூட்டத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும்

Related Stories
சென்னையின் மர்ம பங்களா – அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு என்ன நடந்தது?
இடைக்கால பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இடம் பெறாதது ஏன்? தமிழக அரசு அளித்த விளக்கம்!
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் 20-ஆம் தேதி வரை நடைபெறும்… சபாநாயகர் மு. அப்பாவு அறிவிப்பு!
இடைக்கால பட்ஜெட் 2026 – தூய்மை பணியாளர்களுக்கு 33,000 வீடுகள்… ஐடி பார்க்.. பட்ஜெட்டில் ஸ்பெஷல் அறிவிப்புகள் எவை?
Tamil Nadu Interim Budget Reaction: இடைக்கால நிதிநிலை அறிக்கை குறித்து எடப்பாடி கடும் விமர்சனம்… பட்ஜெட்டை குறிப்பிட்டு அவர் கூறிய வார்த்தை!
Tamil Nadu Interim Budget Analysis 2026-27: தமிழக அரசின் கடன் சுமை ரூ.10.61 லட்சம் கோடியாக உயர்வு.. முழு நிதிநிலை விவரம்!!
திரைப்பட விருது விழா.. சூர்யாவுக்கு மாற்றி கொடுக்கப்பட்ட ரஹ்மானின் விருது.. மேடையில் சிரிப்பலை
மோகன்லாலின் ‘த்ரிஷ்யம் 3’.. வெளியீட்டு தேதி & முக்கிய அப்டேட்!!
வானில் வெடித்த விமான எஞ்சின்.. பயத்தில் உறைந்த பயணிகள்.. ஷாக் சம்பவம்!!
தங்கத்துக்கு நிகரான மதிப்பை தரும் அரிய மரம்.. அதிசயம்!!