திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு.. சிறப்பு ரயில்கள் இயக்கம்.. எங்கிருந்து, எப்போது? முழு விவரம்

Tiruchendur Murugan Temple Kumbabishekam : தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயிலில் 2025 ஜூலை 7ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனால், பக்தர்களின் வசதிக்காக அன்றைய தினம், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு.. சிறப்பு ரயில்கள் இயக்கம்.. எங்கிருந்து, எப்போது? முழு விவரம்

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு

Updated On: 

01 Jul 2025 06:30 AM

சென்னை, ஜூலை 01 : திருச்செந்தூர் முருகன் கோயில் 2025 ஜூலை 7ஆம் தேதி குடமுழுக்கு (Tiruchendur Murugan Temple Kumbabishekam) விழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, பக்தர்கள் வசதிக்காக தெற்கு ரயில்வே (Southern Railway) பல்வேறு இடங்களில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் (Special Trains) இயக்கப்படும் என அறிவித்துள்ளது. முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா 15 ஆண்டுகளுக்கு பிறகு 2025 ஜூலை 7ஆம் தேதி கோலாகலமாக நடைபெறுகிறது. இதற்காக ரூ.300 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது, குடமுழுக்கு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது. 2025 ஜூலை 7ஆம் தேதி காலை 6.15 முதல் 6.50 மணிக்குள் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு

இதற்காக ராஜகோபுரத்திற்கு அருகில் பிரம்மாண்டமாக 8 ஆயிரம் சுதுர அடி பரப்பளவில் 76 குண்டங்களுடன் யாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. 2025 ஜூலை 1ஆம் தேதியான இன்று யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது. 2025 ஜூலை 7ஆம் தேதி நடைபெறும் குடமுழுக்கிறகு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக கோயிலில் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  பயணிகளின் சிரமத்தை போக்க தெற்கு ரயில்வே இரண்டு சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

சிறப்பு ரயில்கள்


அதன்படி, 2025 ஜூலை 7ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து காலை 9.15 மணிக்கு புறப்படும் ரயிலானது, திருச்செந்தூருக்கு காலை 10.50 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கத்தில் திருசெந்தூரில் இருந்து காலை 11.20 மணிக்கு ரயில், திருநெல்வேலிக்கு மதியம் 12.55 மணிக்கு சென்றடைகிறது. இந்த ரயில் பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம், நாசரேத், குரும்பூர், ஆறுமுகநேரி உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

முன்னதாக, பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. அதன்படி, திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கையொட்டி, 2025 ஜூலை 4ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், மதுரைடியல் இருந்து 400 சிறப்பு பேருந்துகளும், தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து கோயில் வாசல் வரை 30 கட்டணமில்லா சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.