ஈரோடு மக்களுக்கு குட் நியூஸ்… வருகிறது அம்ரித் பாரத் ரயில்.. இனி ஈஸியா போகலாம்!

Bihar - Erode Amrit Bharat Train : ஈரோடு - பீகார் ஜோதிவானிக்கு இடையே அம்ரித் பாரத் விரைவு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தெற்கு ரயில்வே சார்பில் இயக்கப்படும் முதல் அம்ரித் பாரத் ரயிலாகும். இந்த ரயில் சேவை 2025 செப்டம்பர் 15ல் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மக்களுக்கு குட் நியூஸ்...  வருகிறது அம்ரித் பாரத் ரயில்.. இனி ஈஸியா போகலாம்!

அம்ரித் பாரத் ரயில்

Updated On: 

11 Sep 2025 07:02 AM

 IST

ஈரோடு, செப்டம்பர் 11 : ஈரோடு – பீகார் மாநிலம் ஜோத்பானிக்கும் இடையே அம்ரித் பாரத் விரைவு ரயில் (Amrit Bharat Express) இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த ரயில் சேவையை 2025 செப்டம்பர் 15ஆம் தேதி முதல் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதான் தெற்கு ரயில்வேயின் (Southern Railway) முதல் அம்ரித் பாரத் விரைவு ரயிலாகும். நாட்டில் முக்கிய போக்குவரத்தாக இந்தியன் ரயில்வே செயல்பட்டு வருகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான  பயணிகள் ரயில்களில் பயணித்து வருகின்றனர். மிக நீண்ட தூர பயணங்களுக்கு ரயில்தான் முக்கியமான போக்குவரத்தாக உள்ளது. மிக அதிகமான தொலைவையும், பேருந்தை விட குறைந்த நேரத்தில் குறைந்த கட்டணத்தில் செல்லலாம் என்பதால்  பயணிகள் ரயில் போக்குவரத்தை விரும்புகின்றனர்.

இதற்காக இந்தியன் ரயில்வே துறையை நவீனப்படுத்தும் நோக்கில், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், புதிய புதிய ரயில்களை அறிமுகப்படுத்தி வருகிறது.  நாட்டிலேயே அதிவேக ரயிலாக வந்தே பாரத் ரயில் உள்ளது. இந்த ரயில் நாட்டில் அனைத்து பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலுக்கு இணையான வேகம் அம்ரித் பாரத் ரயிலுக்கு உண்டு.  இந்த ரயில் மணிக்கு 130 கி.மீ வேகத்தில் செல்லும் தன்மை கொண்டது. இது ஏசி வசதி இல்லாத நீண்ட தூர ரயிலாகும். இந்த அம்ரித் பாரத் ரயில் வட மாநிலங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், முதல்முறையாக தெற்கு ரயில்வே சார்பில் தமிழகத்தில் அம்ரித் பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது.

Also Read : 2 நாள் விடுமுறை… போக்குவரத்து கழகம் சொன்ன குட் நியூஸ்.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

ஈரோட்டிற்கு அம்ரித் பாரத் விரைவு ரயில்


ஈரோடு – பீகார் மாநிலம் ஜோக்பனிக்கு அம்ரித் பாரத் ரயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலை பிரதமர் மோடி 2025 செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். இந்த ரயில் 8 மண்டலங்கள் வழியாக கடந்த செல்ல உள்ளது. மேலும், இந்த ரயில் வாராந்திர சேவையாக 3,300 கி.மீ தூரம் பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரயில்வே வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், அம்ரித் பாரத் ரயில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் காலை 7 மணிக்கு ஈரோட்டில் இருந்து புறப்பட்டு, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 7.30 மணிக்கு ஜோக்பானியில் இருந்து திரும்பும். இந்த ரயில் சேலம், காட்பாடி, பெரம்பூர், விஜயவாடா, நாக்பூர், ஜபல்பூர், பாட்னா மற்றும் கதிஹார் போன்ற 50க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

Also Read : பயணிகளுக்கு குட் நியூஸ்.. மதுரை – பெங்களூரு வந்தே பாரத் ரயிலில் புதிய மாற்றம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு

இந்த ரயிலில் 22 பெட்டிகள் உள்ளன.  அவற்றில் 8 இரண்டாம் வகுப்பு சிட்டிங்-கம்-லக்கேஜ் பெட்டிகள், 11 இரண்டாம் வகுப்பு சிட்டிங் பெட்டிகள், இரண்டு பிரேக்-கம்-லக்கேஜ் பெட்டிகள் மற்றும் ஊழியர்கள் மற்றும் கருவிகளுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு பெட்டி ஆகியவை அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலரும் உள்ளனர்.  இந்த ரயில் பீகார் டூ ஈரோடுக்கான பயணத்தை எளிதாக்கும். மேலும், ஏசி வசதி இல்லாத ரயில் என்பதால் நடுத்தர மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.