மீம்ஸ் புகழ் வெண்மதி.. சசிகலாவுக்கு டாட்டா.. அடுத்து எந்த கட்சி தெரியுமா?

Social Media Fame Venmathi : சசிகலாவின் தீவிர ஆதரவாளராக கருதப்படும் வெண்மதி, அவரது அணியில் இருந்து விலகியதாக அறிவித்துள்ளார். சசிகலாவின் செய்தியாளர்கள் சந்திப்பில் தனது முக பாவனைகள் மூலம் வெண்மதி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். எப்போது, சசிகலாவுடன் இருக்கும் அவர், அவரது அணியில் இருந்து விலகியுள்ளார்.

மீம்ஸ் புகழ் வெண்மதி..  சசிகலாவுக்கு டாட்டா.. அடுத்து எந்த கட்சி தெரியுமா?

வெண்மதி

Updated On: 

23 Sep 2025 11:52 AM

 IST

 சென்னை, செப்டம்பர் 23 : தனது முக பாவனைகள் மூலம் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டான சசிகலாவின் தீவிர ஆதரவாளர் வெண்மதி அவரது அணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், சசிகலாவின் அணியில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார். முன்னாள் முதல்வல்ர ஜெலலிதாவின் மறைவுக்கு பிறகு, அதிமுக பல அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. சசிகலா தனி அணியாகவும், தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாகவும், டிடிவி தினகரன் தனி அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். அதிமுகவை ஒன்றிணைக்க முயற்சியில் அதிமுகவில் உள்ள மூத்த தலைவர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். அவர்களது நடவடிக்கைக்கு டிடிவி தினகரன், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்  ஆதரவு அளித்துள்ளனர்.

ஆனால், எடப்பாடி பழனிசாமியோ இவர்கள் மூன்று பேரை கட்சியில் இணைப்பதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறார். இதனால், அதிமுகவில் குழப்பம் நீடித்து வருகிறது. இப்படியான சூழலில், சசிகலா அணியில் இருந்து வெண்மதி விலகுவதாக அறிவித்துள்ளார். இவர் நெல்லை மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் முன்னாள் இணை செயலாளராக இருந்தார். வெண்மதி சசிகலாவின் தீவிர ஆதரவாளராக இருந்தார். சசிகலா எங்கு சென்றாலும், அவருடன் எப்போதும் இருக்கக் கூடிய நபர் வெண்மதி. மேலும், சசிகலா சுற்றுப் பயணத்திலும் அவர் உடன் இருப்பார்.

Also Read : என்டிஏ கூட்டணியில் மீண்டும் டிடிவி தினகரன்? உள்ளே வந்த ரஜினி.. அண்ணாமலை பளீச்!

சசிகலா அணியில் இருந்து வெண்மதி விலகல்

அப்படி தான் சசிகலாவின் செய்தியாளர்கள் சந்திப்பில் வெண்மதி கொடுத்த ரியாக்ஷனால் அவர் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டானார். 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் சசிகலா செய்தியாளர்களை சந்தித்தபோது, அவரது ஆதரவாளர் வெண்மதி கொடுத்த ரியாக்ஷான் வைரலானது. சசிகலாவின் செய்தியாளர்களின் சந்திப்பை தாண்டி, வெண்மதியின் முக பாவனைகள்  அனைவரின் கவனத்தை ஈர்த்தது.

இப்படி சசிகலாவுக்கு நெருக்கமான வெண்மதி கடந்த சில மாதங்களாக அவருடன் வெளியே செல்வதை தவிர்த்து வந்ததாக தெரிகிறது. இந்தநிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த வெண்மதி, சசிகலா அணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதிமுகவை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இருந்து சசிகலா பின்வாங்குவதால், அதிருப்தியில் அவரது அணியில் இருந்து விலகுவதாக வெண்மதி தெரிவித்துள்ளார்.

Also Read : நீலகிரிக்கு டூர் செல்ல பிளானா? யானைகள் முகாம் 4 நாட்கள் மூடல்.. வெளியான அறிவிப்பு

2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை சசகிலா சரியான பாதையில் சென்றுக் கொண்டிருந்ததாகவும், அதன்பிறகு, அந்த முடிவில் இருந்து விலகியதால், இந்த முடிவை எடுத்ததாக வெண்மதி கூறியுள்ளார். சசிகலா அதிமுக ஒன்றிணைப்பார் என தொண்டர்கள் நம்பிக்கை வைத்தும், அதனை அவர் காப்பாற்றாமல் விட்டுவிட்டதாகவும் வெண்மதி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். சசிகலா அணியில் இருந்து விலகிய அவர், அடுத்த தவெகவுக்கு செல்ல இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.