Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சிவகங்கை பேருந்து விபத்து.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 ல்சட்சம்.. பிரதமர் மோடி அறிவிப்பு!

PM Relief For Sivagangai Accident | சிவகங்கையில் நேற்று (நவம்பர் 30, 2025) இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இந்திய பிரதமர் மோடி தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

சிவகங்கை பேருந்து விபத்து.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 ல்சட்சம்.. பிரதமர் மோடி அறிவிப்பு!
பிரதமர் மோடி
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 01 Dec 2025 12:11 PM IST

டெல்லி, டிசம்பர் 01 : சிவகங்கையில் (Sivagangai) நேற்று (நவம்பர் 30, 2025) அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Indian Prime Minister Narendra Modi) நிவாரணம் அறிவித்துள்ளார். இந்த நிலையில், பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி எவ்வளவு நிவாரணம் அறிவித்துள்ளார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் மற்றும் பிள்ளையார் பாட்டி சாலை நேற்று (நவம்பர் 30,2025) இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கடும் விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் 11 பேர் பலியான நிலையில், பலர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பல அரசியல் கட்சி தலைவர்கள் இந்த சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்தனர். இந்த நிலையில், இந்த விபத்து குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு  நிவாரணம் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க : கனமழை எதிரொலி… புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

சிவகங்கை பேருந்து – உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம்

சிவகங்கை பேருந்து விபத்து சம்பவம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, சிவகங்கையில் ஏற்பட்ட துயர சம்பவத்தில் உயிரிழப்புகள் நிகழ்ந்தது மிகுந்த வருத்தமளிக்கிறது. தனது அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் துயரத்தில் என் எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய நான் பிராத்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : எடப்பாடி பழனிசாமியின் அதிமுக கூட்டத்தில் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

பிரதமரின் தேசிய நிவாரண நிதி மூலம் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.