“நீக்கப்பட்ட 97 லட்சம் வாக்காளர்களும் திமுக வாக்குகளே” பகீர் கிளப்பிய நயினார் நாகேந்திரன்
Nainar Nagendrans shocking claim: வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மூலம் நீக்கப்பட்ட 97 லட்சம் வாக்காளர்களையும் திமுக வாக்குகள் என்றே நாம் கருத வேண்டும். இறந்தவர்களுக்கூட வாக்காளர் பட்டியலில் இடம் கிடைத்திருந்தது; இப்போது அவர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இது பாராட்டத்தக்க நடைமுறை என்று அவர் கூறியுள்ளார்.

நயினார் நாகேந்திரன்
சென்னை, டிசம்பர் 21: சுமார் ஒரு கோடி வாக்காளர்கள் வரைவு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதும், திமுக நாடகமாடும் என்று எடப்பாடி பழனிசாமி சொல்வது சரிதான் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பாஜக தேசிய செயல் தலைவராக பொறுப்பேற்ற நிதின் நபின், முதன்முறையாக புதுச்சேரி செல்ல டெல்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் நிதின் நபினை மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம், முன்னாள் தலைவர்கள் தமிழிசை சௌந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த நிதின் நபின், பீகார் தேர்தல் முடிவுகள் தமிழகத்திலும் எதிரொலிக்கும் என்றார்.
இதையும் படிக்க : தமிழக மக்களை எந்த சக்தியாலும் பிளவு படுத்த முடியாது…அமைச்சர் சேகர்பாபு!
திமுக சேர்த்து வைத்த கள்ள வாக்குகள் மட்டுமே நீக்கம்:
தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த பணிக்கு பிறகு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்களின் பெயர்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளது. உயிருடன் இருப்பவர்களின் பெயர்கள் நீக்கப்படவில்லை. ஏற்கெனவே திமுகவினர் சேர்த்து வைத்திருந்த கள்ள வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன.
கொளத்தூரில் 1 லட்சம் தவறான வாக்குகள் நீக்கம்:
எஸ்ஐஆர் பணியை எதிர்த்து திமுக பயப்பட வேண்டும். நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டும். இறந்தவர்கள் பெயர்களை நீக்கவும், இடம்பெயர்ந்தவர்களின் பெயர்களை நீக்குவதில் என்ன தவறு இருக்கிறது என முதல்வரிடம் கேள்வி கேட்பதில்லை. கொளத்தூர் தொகுதியில் 1 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது என்பது, 1 லட்சம் தவறான வாக்குகளால் முதல்வர் ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார் என்பது தெரிய வருகிறது.
97 லட்சம் வாக்காளர்களும் திமுக வாக்குகளே:
ஆரம்பத்திலிருந்தே திமுக சிறப்பு திருத்தப்பணியை எதிர்க்கிறது. நீக்கப்பட்ட 97 லட்சம் வாக்காளர்களையும் திமுக வாக்குகள் என்றே நாம் கருத வேண்டும். இறந்தவர்களுக்கூட வாக்காளர் பட்டியலில் இடம் கிடைத்திருந்தது; இப்போது அவர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இது பாராட்டத்தக்க நடைமுறை.
இதையும் படிக்க : திமுகவை விமர்சிக்காமல் எந்த கட்சியும் அரசியலில் இருக்க முடியாது…செந்தில் பாலாஜி!
எடப்பாடி பழனிசாமி சொல்வது சரிதான்:
சுமார் ஒரு கோடி வாக்காளர்கள் வரைவு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதும், திமுக நாடகமாடும் என்று எடப்பாடி பழனிசாமி சொல்வது சரிதான். வாக்குத் திருட்டு என்பது திமுகவுக்கு பழக்கம். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெறும். பாஜக தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து வருகிறது என்றார்.