திருச்செந்தூரில் 2- ஆவது நாளாக நடந்த திடீர் மாற்றம்.. அதிர்ச்சியில் உறைந்த பக்தர்கள்.. என்ன காரணம்!

Tiruchendur Sea Water Absorbed; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் எதிரே அமைந்துள்ள கடல் 2- ஆவது நாளாக திடீரென உள் வாங்கியது. இதனால், கடற்கரை பகுதியில் இருந்த பக்தர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர். அந்தப் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்செந்தூரில் 2- ஆவது நாளாக நடந்த திடீர் மாற்றம்.. அதிர்ச்சியில் உறைந்த பக்தர்கள்.. என்ன காரணம்!

உள்வாங்கியது திருச்செந்தூர் கடல் நீர்

Published: 

03 May 2026 16:06 PM

 IST

ஆறுபடை வீடுகளில் 2- ஆம் படை வீடான தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பகுதியில் கடல் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு, தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். அவ்வாறு வருகை தரும் பக்தர்கள் திருச்செந்தூர் கடலில் புனித நீராடி விட்டு முருகனை தரிசனம் செய்வது வழக்கம் ஆகும். இதனால், திருச்செந்தூர் கோவிலுக்கு எதிரே அமைந்துள்ள கடல் மிகவும் முக்கிய இடமாக விளங்கி வருகிறது. மேலும், கந்த சஷ்டி விழாவின் போது திருச்செந்தூர் கடற்கரையில் தான் முருகப் பெருமான் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிலையில், திருச்செந்தூர் கடல் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உள்வாங்கியது. இதனால், கடல் பகுதியில் உள்ள பாறைகள், கடல் பாசிகள், உள்ளிட்டவை வெளியே தெரிய ஆரம்பித்தது. இந்த நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை ( மே 3) 2- ஆவது நாளாக மீண்டும் திருச்செந்தூர் கடல் உள் வாங்கியது.

திருச்செந்தூரில் 2- ஆவது நாளாக உள்வாங்கிய கடல்

சுமார் 50 அடி தூரத்துக்கு கடல் நீர் உள்வாங்கியதால் பாசிகள் படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. இதனால், கடற்கரை பகுதியில் திரண்டு இருந்த பக்தர்கள் சற்று அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், வழக்கம் போல பக்தர்கள் கடலில் நீராடுவது மற்றும் செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டனர். திருச்செந்தூர் கடல் திடீரென உள்வாங்கிய காரணத்தால் அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திடீரென கடல் நிலை மாற்றம் அடையும் காரணத்தால், ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படாத வகையில் போலீசார் கண்காணிப்பு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: பைக் ஓட்டி மீது விழுந்த ராட்சத விளம்பர பேனர்.. நொடிப் பொழுதில் நடந்த பயங்கரம்!!

ஒவ்வொரு மாதமும் திருச்செந்தூர் கடலில் நிகழும் மாற்றம்

திருச்செந்தூர் கடலில் பொதுவாக ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி நாட்கள் மற்றும் அதற்கு முந்தைய தினம், மறு தினங்களில் காலை வேளையில் திடீரென கடல் உள்வாங்குவதும், பின்னர், மாலை வேளையில் மீண்டும் கடல் இயல்பு நிலையே அடைவதும் வழக்கமாக நடைபெற்று வருகிறது. தற்போது, மே 1- ஆம் தேதி சித்ரா பௌர்ணமி விழா கொண்டாடப்பட்ட நிலையில், திருச்செந்தூர் கடல் திடீரென உள் வாங்கியது.

கடல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு

பின்னர், கடல் மீண்டும் இயல்பு நிலையை அடைந்தது. தற்போது. 2- ஆவது நாளாக திருச்செந்தூர் கடல் மீண்டும் உள்வாங்கி உள்ளது. இதனிடையே, திடீரென திருச்செந்தூர் கடல் நீர் உள் வாங்குவதும், கடல் நீர் திடீரென பச்சை நிறத்தில் மாறுவதும் அவ்வப்போது நிகழ்ந்து வருவது வழக்கமாகும். இது தொடர்பாக, கடல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து அதற்கான விளக்கங்களை முந்தைய காலங்களில் அளித்துள்ளனர்.

மேலும் படிக்க: விமானத்தில் இருந்து திடீரென குதித்த பயணி – சென்னையில் பரபரப்பு

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..