சாத்தான்குளம் வழக்கு தீர்ப்பு… இனிமேல் வேறு எந்த குடும்பத்துக்கும்… ஜெயராஜ் மகள் கண்ணீர் மல்க பரபரப்பு பேட்டி!

Sathankulam Case Verdict : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தந்தை- மகன் லாக்அப் மரண வழக்கில் மதுரை மாவட்ட அமர்வு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து படுகொலை செய்யப்பட்ட ஜெயராஜின் மகள் பெர்சிஸ் கண்ணீர் மல்க செய்தியாளர்களிடம் பரபரப்பு பேட்டி அளித்தார்.

சாத்தான்குளம் வழக்கு தீர்ப்பு... இனிமேல் வேறு எந்த குடும்பத்துக்கும்... ஜெயராஜ் மகள் கண்ணீர் மல்க பரபரப்பு பேட்டி!

சாத்தான்குளம் தீர்ப்பை குறிப்பிட்டு ஜெயராஜ் மகள் கண்ணீர் மல்க பேட்டி

Updated On: 

06 Apr 2026 19:41 PM

 IST

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை சாத்தான்குளம் போலீசார் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று கொடூரமான முறையில் தாக்கி கொலை செய்திருந்தனர். இந்த சம்பவத்தில், 9 போலீசாரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், குற்றம் சாட்டப்பட்ட 9 போலீசாருக்கும் இரட்டை தூக்கு தண்டனையை மாவட்ட நீதிபதி முத்துக்குமரன் வழங்கி இன்று தீர்ப்பளித்தார். இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து படுகொலை செய்யப்பட்ட ஜெயராஜின் மகள் பெர்சிஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 2020- ஆம் ஆண்டு சாத்தான்குளம் போலீசார் எனது தந்தை ஜெயராஜ் மற்றும் எனது சகோதரர் பென்னிக்ஸ் ஆகியோரை விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

நியாயமான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம்

அங்கு, அவர்களை போலீசார் கொடூரமான முறையில் தாக்கி படுகொலை செய்தனர். இந்த சம்பவம் நடைபெற்று 6 ஆண்டுகள் ஆன நிலையில், நீதிமன்றம் எங்களுக்கான நியாயமான தீர்ப்பை வழங்கும் என்று நம்பி இருந்தோம். அதன்படி, எங்களுக்கான நீதியை நீதிமன்றம் வழங்கி உள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த அனைத்து தரப்பினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். காவல்துறையால் எங்களைப் போன்ற குடும்பம் மீண்டும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இந்த வழக்கை எடுத்து நடத்தினோம். இந்த தீர்ப்பின் மூலம் வேறு எந்த குடும்பமும் பாதிக்கப்படாது என்று நம்புகிறோம்.

மேலும் படிக்க: அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி- தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா வேட்பு மனு தாக்கல்..!

காவல் துறையால் வேறு குடும்பங்கள் பாதிக்கப்படக்கூடாது

இந்த வழக்கில் சிபிஐ சிறப்பான முறையில் விசாரணை மேற்கொண்டு அதனை நீதிமன்றமும் சிறப்பான தீர்ப்பை வழங்கி உள்ளது. குற்றவாளிகள் மேல்முறையீட்டுக்காக நீதிமன்றங்களுக்கு சென்றால் நாங்களும் அந்த நீதிமன்றங்களை நாடுவோம். எங்களை போல வேறு எந்த குடும்பங்களுக்கும் இது போன்ற சம்பவங்கள் நடக்க கூடாது. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்கக்கூடாது எனவும், அதற்கான கடைசி தீர்ப்பாக இருக்கும் எனவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

சாத்தான்குளம் லாக்அப் மரணத்தின் பின்னணி

கடந்த 2020- ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரிடம் கடையை மூடுமாறு போலீசார் தெரிவித்தனர். அப்போது, அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில், இருவரையும் போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். ஒரு கட்டத்தில் தந்தை, மகன் இருவரையும் ஆடைகள் இன்றி கொடூரமான முறையில் தாக்கினர். இதில், பலத்த காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக 9 போலீசார் கைது செய்யப்பட்டு தற்போது தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: சிதம்பரம் அருகே திடீரென உள்வாங்கிய மேம்பாலம்.. நள்ளிரவில் பொது மக்கள் பதறியடித்து ஓட்டம்!

Follow Us
2 அணுகுண்டு தாக்குதல்களுக்கு பிறகும் உயிர் பிழைத்த மனிதர் - எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள்
காசாவில் போர் எதிரொலி - பொம்மைக்கு இறுதி ஊர்வலம் நடத்தும் குழந்தைகள் - மனதை உலுக்கும் காட்சி
ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நான் நடிக்க மாட்டேன் - ஆண்ட்ரியா அதிர்ச்சி தகவல்
நண்பரை கொலை செய்த நபர் - பேய் பயம் காரணமாக போலீசில் சரண்