Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சபரிமலைக்கு தமிழகம் வழியாக 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Sabarimala Special Trains | சபரிமலைக்கு ஆண்டுதோரும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில், சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு வசதியாக தமிழகம் வழியாக 7 சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சபரிமலைக்கு தமிழகம் வழியாக 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 17 Nov 2025 12:48 PM IST

சென்னை, நவம்பர் 17 : சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக மொத்தம் 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே (Southern Railway) அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் சபரிமலைக்கு செல்லும் நிலையில், இந்த ஆண்டும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தெற்கு ரயில்வே இந்த அசத்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், எந்த எந்த தேதியில், எந்த நேரத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட உள்ளன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சபரிமலைக்கு தமிழகம் வழியாக 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்

சமரிமலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே தமிழகம் வழியாக 7 சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

சார்லபள்ளியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில்

தெலங்கானா மாநிலம் சார்லபள்ளியில் இருந்து நவம்பர் 24, 2025 அன்று காலை 10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், நவம்பர் 25, 2025 மாலை 5.30 மணிக்கு கோட்டயம் சென்றடையும். பிறகு மறுமார்க்கமாக கோட்டயத்தில் இருந்து நவம்பர் 25, 2025 அன்று இரவு 8.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் நவம்பர் 26, 2025 அன்று அதிகாலை 2.30 மணிக்கு மீண்டும் சார்லபள்ளி சென்றடையும்.

வியாழக்கிழமைகளில் மட்டும் இயங்கும் சிறப்பு ரயில்

தெலங்கானா மாநிலம் சார்லபள்ளியில் இருந்து நாளை (நவம்பர் 18, 2025) முதல் ஜனவரி 13, 2025 வரை செவ்வாய் கிழமைகளில் மட்டும் காலை 11. 20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் இரவு 10 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கமாக கொல்லத்தில் இருந்து நவம்பர் 20, 2025 முதல் ஜனவரி 15, 2025 வரையில் வியாழக்கிழமைகளில் மட்டும் அதிகாலை 2.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் மதியம் 12.30 மணிக்கு சார்லபள்ளி சென்றடையும்.

இதையும் படிங்க : சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறப்பு – அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

புதன் கிழமைகளில் மட்டும் இயங்கும் சிறப்பு ரயில்

தெலங்கானா மாநிலம் சார்லபள்ளியில் இருந்து இன்று (நவம்பர் 17, 2025) முதல் ஜனவரி வரை திங்கட்கிழமைகளில் மட்டும் மதியம் 12 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் இரவு 10 மணிக்கு கொல்லம் சென்றடையும். பிறகு மறுமார்க்கமாக கொல்லத்தில் இருந்து நவம்பர் 19, 2025 முதல் ஜனவரி 21, 2025 வரை புதன் கிழமைகளில் மட்டும் அதிகாலை 2.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 10.30 மணிக்கு சார்லபள்ளி சென்றடையும்.

காக்கிநாடா டவுனில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில்

ஆந்திர மாநிலம் காக்கிநாடா டவுனில் இருந்து இன்று (நவம்பர் 17, 2025), டிசம்பர் 1, 08, 15, 22, 29 ஆகிய தேதிகளிலும், ஜனவரி 5, 12, 19 ஆகிய தேதிகளிலும் மதியம் 1 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் மாலை 5.30 மணிக்கு கோட்டயம் சென்றடையும். பிறகு கோட்டயத்தில் இருந்து நாளை (நவம்பர் 18, 2025), டிசம்பர் 2, 9, 16, 23, 30 மற்றும் ஜனவரி 6, 13, 20 ஆகிய தேதிகளில் இரவு 8.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் இரவு 11 மணிக்கு காக்கிநாடா டவுன் சென்றடையும்.

இதையும் படிங்க : வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஆத்திரம்.. வீதியையே இருட்டாக்கிய இளைஞர்

மச்சிலிப்பட்டினத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில்கள்

ஆந்திர மாநிலம் மச்சிலிப்பட்டினத்தில் இருந்து நவம்பர் 21, 28, டிசம்பர் 26, ஜனவரி 2 ஆகிய தேதிகளில் மாலை 4.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் இரவு 10 மணிக்கு கொல்லம் சென்றடையும். பிறகு மறுமார்க்கமாக கொல்லத்தில் இருந்து நவம்பர் 23, 20, டிசம்பர் 28, ஜனவரி 4 ஆகிய தேதிகளில் அதிகாலை 2.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 8 மணிக்கு மச்சிலிப்பட்டினம் சென்றடையும்.

ஆந்திர மாநிலம் மச்சிலிப்பட்டினத்தில் இருந்து டிசம்பர் 5, 12, 19, ஜனவரி 9, 16 ஆகிய தேதிகளில் காலை 11 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் இரவு 10 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கமாக கொல்லத்தில் இருந்து டிசம்பர் 7, 14, 21, ஜனவரி 11, 18 ஆகிய தேதிகளில் அதிகாலை 2.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் மதியம் 12.30 மணிக்கு மச்சிலிப்பட்டினம் சென்றடையும்.

இதையும் படிங்க : குடிசை வீடுகளை தீக்கிரையாக்கிய காகம்.. ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்

நரசாபூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில்கள்

ஆந்திர மாநிலம் நரசாபூரில் இருந்து நவம்பர் 23, 2025 முதல் ஜனவரி 18, 2025 வரையில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் மாலை 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் இரவு 10 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கமாக கொல்லத்தில் இருந்து நாளை (நவம்பர் 18, 2025) முதல் ஜனவரி 20, 2025 வரை செவ்வாய் கிழகமைகளில் மட்டும் அதிகாலை 2.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 7 மணிக்கு நரசாபூர் சென்றடையும்.