நிவாரணம் அறிவிப்பு… விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் – தமிழக அரசு அறிவிப்பு

Government Relief Announcement: தமிழ்நாட்டில் கடந்த 2025 ஆம் ஆண்டு தித்வா புயல் மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக சேதமடைந்த பயிர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் அறிவித்துள்ளது. உழவர் திருநாளான பொங்கல் அன்று இந்த அறிவிப்பு வெளியானது மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிவாரணம் அறிவிப்பு... விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் - தமிழக அரசு அறிவிப்பு

தித்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவிப்பு

Published: 

15 Jan 2026 19:24 PM

 IST

சென்னை,ஜனவரி 15 : வடகிழக்கு பருவமழை (Northeast Monsoon) மற்றும் தித்வா புயல் காரணமாக விவசாய நிலங்களில் நீர் தேங்கி பயிர்கள் நாசமாகின. இதனால் விவசாயிகள் மிகுந்த கவலையடைந்தனர்.இந்த நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பாக ரூ.111.96 கோடி நிவாரணத் தொகை வழங்க தமிக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிவாரணத் தொகை, 84,848 விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. உழவர் திருநாளான பொங்கல் (Pongal) அன்று இந்த அறிவிப்பு வெளியானது விசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தித்வா புயலால் சேதமடைந்த பயிர்கள்

2025 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்திலும், தித்வா புயல் தாக்கத்தாலும், தமிழகத்தின் பல மாவட்டங்களில் 1.39 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட வேளாண்மை மற்றும் தோட்டப் பயிர்கள் கடுமையாக சேதமடைந்தன. இதனால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்புகளை ஈடு செய்யும் வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பரில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது, பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வருவாய் மற்றும் வேளாண் துறையினர் உடனடியாக பாதிக்கப்பட்டநிலங்கள் குறித்து கணக்கெடுப்பு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில், 33 சதவீதத்திற்கும் மேல் சேதமடைந்த பயிர்கள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து முன்மொழிவுகள் பெறப்பட்டன.

இதையும் படிக்க : தைப்பொங்கல் பண்டிகை.. தமிழர் வாழ்வு செழித்திட முதல்வர் ஸ்டாலின் உட்பட தலைவர்கள் வாழ்த்து!!

அதன்படி, நெல் உள்ளிட்ட சேதமடைந்த பயிர்களுக்கு உள்ளிட்டவற்றுக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000 வீதம் நிவாரணம் வழங்க முடிவு செய்யப்பட்டு, மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.111.96 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொகையை அனுமதித்து, ஜனவரி 15, 2026 அன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

எந்தெந்த மாவட்ட விவாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும்?

தற்போது தமிழக அரசு அளித்துள்ள நிவாரணம், அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், கோயம்புத்தூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், தேனி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, திருப்பூர், திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, வேலூர், விழுப்புரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 84,848 விவசாயிகளுக்கு நேரடியாக வழங்கப்பட உள்ளது.

இதையும் படிக்க : ஆர்வம் காட்டாத பயணிகள்: 5 பொங்கல் சிறப்பு ரயில்கள் முழுமையாக ரத்து

இயற்கை பேரிடர்களால் விவசாயிகள் பாதிக்கப்படும் போது தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக உழவர் திருநாளான பொங்கல் அன்று இந்த நிவாரணம் அறிவிக்க்பட்டிருப்பது விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிவாரண தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் முடிக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோயில்.. எங்கே இருக்கு தெரியுமா?
வாகன ஓட்டியை தாக்கிய போக்குவரத்து காவலர் - வீடியோ வெளியாகி அதிர்ச்சி
அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட நபர்.... 50 சதவிகித வாய்ப்பு - துரிதமாக செயல்பட்டு உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்கள்
திருடப்பட்ட செல்போனை தொழில்நுட்ப உதவியுடன் கண்டறிந்த இளம்பெண்