திருடப்போன இடத்தில் அசந்து தூங்கிய கொள்ளையன்.. ‘லேடீஸ் ஜீன்ஸ்’ அணிந்து தப்பியோடிய விநோதம்..

ஆரோக்கிய பிரவின் சம்பவத்தன்று அதிகாலை கோடிமுனை மீனவ கிராமத்தில் புகுந்து வீடுகளின் முன்பு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கருவாடுகளை திருடி தின்றுள்ளார். பின்னர் ஆள் இல்லாததை நோட்டமிட்ட அவர் பிராங்கிளின் வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து மின் விசிறியை போட்டுள்ளார். அங்கு மெத்தையைப் பார்த்ததும் அசந்து தூங்கியுள்ளார்.

திருடப்போன இடத்தில் அசந்து தூங்கிய கொள்ளையன்.. லேடீஸ் ஜீன்ஸ் அணிந்து தப்பியோடிய விநோதம்..

மாதிரிப் புகைப்படம் (AI)

Updated On: 

07 Mar 2026 12:14 PM

 IST

கன்னியாகுமரி, மார்ச் 07: மெத்தையைப் பார்த்ததும் திருட வந்ததை மறந்து ஆளில்லாத வீட்டில் அசந்து தூங்கிய கொள்ளையன், போலீசாரிடம் சிக்கிய சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கோடிமுனை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் பிராங்கிளின் (60). இவர் கேரளாவில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இதனால் வீட்டை பூட்டி விட்டு அவரது மனைவி மணவாளக்குறிச்சி பகுதியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்று விடுவது வழக்கமாம். இந்த நிலையில் பிராங்கிளின் வீட்டின் மாடியில் இருந்த குடிநீர் தொட்டி நிரம்பி உபரி நீர் பக்கத்து வீட்டின் முன்பு விழுந்து கொண்டிருந்தது. மேலும் வீட்டின் அறைகளில் மின் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன.

இதையும் படிக்க: சிசிடிவியில் சிக்குவார்களா கொள்ளையர்கள்? வியாபாரிடம் 3 கிலோ தங்கம் வழிபறி

பணம், பட்டு புடவைகள் திருட்டு:

இதனால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டினர் இது குறித்து மணவாளக்குறிச்சி பகுதியில் வசித்துவரும் பிராங்கிளின் மகள் ஸ்டெபி கிராப்புக்கு தகவல் கொடுத்தனர். உடனே அவர் விரைந்து வந்து பார்த்தார். அப்போது வீட்டின் கதவுகள் திறந்து கிடந்தன. குடிநீர் தொட்டிக்கான மின்மோட்டாரும் ஓடிக்கொண்டிருந்தது. மேலும் பீரோவில் இருந்த ரூ.3,000 மதிப்புள்ள 2 பட்டுப்புடவைகள், ரூ.1,000 ரொக்கம் ஆகியவற்றை மர்மஆசாமி திருடிச்சென்றதும் தெரியவந்தது.

உடனே சிக்கிய கொள்ளையன்:

பின்னர் இது குறித்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது திருடிய மர்மஆசாமியின் உருவம் பதிவாகியிருந்தது. அதன்படி விசாரித்த போது, பிராங்கிளின் வீட்டில் புகுந்து பணம், பட்டு புடவைகளை திருடியது குளச்சல் துறைமுகத்தெரு பகுதியைச் சேர்ந்த ஆரோக்கிய பிரவின் (38) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்திய போது பரபரப்பு தகவல்கள் வெளியானது.

மெத்தையில் அசந்து தூங்கிய திருடன்:

அதாவது ஆரோக்கிய பிரவின் சம்பவத்தன்று அதிகாலை கோடிமுனை மீனவ கிராமத்தில் புகுந்து வீடுகளின் முன்பு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கருவாடுகளை திருடி தின்றுள்ளார். பின்னர் ஆள் இல்லாததை நோட்டமிட்ட அவர் பிராங்கிளின் வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து மின் விசிறியை போட்டுள்ளார். அங்கு மெத்தையைப் பார்த்ததும் அசந்து தூங்கியுள்ளார்.

மோட்டர் சுவிட்சை மாற்றி போட்டதால் சிக்கல்:

அதே சமயத்தில் மின் விசிறிக்கான சுவிட்சை போட்டபோது, குடிநீர் தொட்டிக்கான மோட்டார் சுவிட்சையும் போட்டுள்ளார். இது தான் ஒரு கட்டத்தில், குடிநீர் தொட்டி நிரம்பி உபரி தண்ணீர் பக்கத்து வீட்டின் வளாகத்தில் பாய்ந்துள்ளது. இந்த சத்தத்தை கேட்டு திடுக்கிட்டு எழுந்த ஆரோக்கிய பிரவின், திருட வந்த இடத்தில் அதை மறந்து தூங்கி விட்டோமே என நினைத்தார்.

இதையும் படிக்க: திருநெல்வேலி இரட்டை கொலை சம்பவம்… சிறையில் இருந்து திட்டம் தீட்டியல் கும்பல்… பரபரப்பு பின்னணி!

‘லேடீஸ் ஜீன்ஸ்’ அணிந்து தப்பியோட்டம்:

பின்னர் வீட்டின் பீரோவில் இருந்த 2 பட்டு புடவைகள், ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை திருடி விட்டு, தான் அணிந்து வந்த பேண்ட்டை கழற்றி போட்டு விட்டு வீட்டில் இருந்த லேடீஸ் ஜீன்ஸ் பேண்ட்டையும் எடுத்து அணிந்தபடி கட்டப் பையுடன் தப்பியுள்ளது விசாரணையில் அம்பலமானது. இதனையொட்டி ஆரோக்கிய பிரபினை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 2 பட்டு புடவைகளையும் பறிமுதல் செய்தனர்.

Follow Us
Related Stories
மே மாதம் மகளிர் உரிமைத் தொகை வருமா? பெண்கள் மத்தியில் எழும் கேள்வி… பதில் இதோ!
நாளை முதல் தமிழகத்தில் கொட்டப்போகும் மழை.. வெயிலின் தாக்கம் எப்படி இருக்கும்? வானிலை ரிப்போர்ட் இதோ..
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை… 1,000 அரசு ஊழியர்களுக்குத் தீவிர பயிற்சி!
திமுகவிடம் ஆட்சி அதிகாரத்தில் பங்கு… மீண்டும் போர்க்கொடி தூக்கிய காங்கிரஸ்.. கிரிஷ் ஜோடங்கர் எய்த அம்பு!
“சாதி வெறியால் சீரழியும் இளைஞர்களின் வாழ்க்கை”.. புதுக்கோட்டை ஹரிஹரன் மரணத்திற்கு செல்வப்பெருந்தகை கடும் கண்டனம்!
வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் தீவிரம்.. மே 2ல் தமிழகம் வரும் வெளிமாநில ஐஏஎஸ் அதிகாரிகள்!!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..