Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

எகிறி அடிக்கும் டாஸ்மாக் வருமானம்.. இத்தனை கோடியா? வெளியான ரிப்போர்ட்!

Tasmac Revenue : தமிழகத்தில் டாஸ்மாக் வருமானம் 2024-25ஆம் ஆண்டில் 5.42 சதவீதம் உயர்ந்து ரூ.46,344 கோடியாக உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில், டாஸ்மாக்கின் வருவாய் கிட்டத்தட்ட ரூ.12,000 கோடி அதிகரித்துள்ளதாக தெரிகிறது. குறிப்பாக, 2023-24ஆம் நிதியாண்டை விட, தற்போது 2,488.30 கோடி ரூபாய் வருவாய் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எகிறி அடிக்கும் டாஸ்மாக் வருமானம்.. இத்தனை கோடியா? வெளியான ரிப்போர்ட்!
டாஸ்மாக் வருமானம்Image Source: X
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 23 Apr 2025 07:30 AM

சென்னை, ஏப்ரல் 23: 2024-25ஆம் நிதியாண்டில் டாஸ்மாக் வருமானம் (Tasmac Revenue)  தடலாடியாக உயர்ந்துள்ளது. கடந்த 2023-24ஆம் நிதியாண்டை விட பல மடங்கு அதிகரித்துள்ளது. அதன்படி, 2024-25ஆம் நிதியாண்டில் டாஸ்மாக் வருமானம் 48,344 ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் மதுவிலக்கு ஆயத்தீர்வு துறையின் கீழ டாஸ்மாக் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த துறையின் அமைச்சராக செந்தில் பாலாஜி செயல்பட்டு வருகிறார்.  தமிழகம் முழுவதும் சுமார் 2000க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது.

எகிறி அடிக்கும் டாஸ்மாக் வருமானம்

டாஸ்மாக் கடைகள் மூலம் ஒருநாளைக்கு 100 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கும் என்று தெரிகிறது. அதே நேரத்தில், புத்தாண்டு, தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் இன்னும் அதிகரிக்கலாம் என தெரிகிறது. இந்த நிலையில், டாஸ்மாக் வருவாய் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது.

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழ்நாடு மதுவிலக்கு ஆயத்த தீர்வை துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த விவரங்களின்படி, 2024-25 நிதியாண்டில் ரூ.45,855.70 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது 2023-24ஆம் நிதியாண்டை விட 2,488.30 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. 2023-24ஆம் நிதியாண்டில் 45,855.70 கோடி வருவாய் கிடைத்தது. டாஸ்மாக் நிறுவனத்தின் வருமானம் தொடர்ந்து  அதிகரித்து வருகிறது.

அதன்படி, 2021-22 ஆம் ஆண்டில் ரூ.36,050.65 கோடியாக இருந்த வருவாய், 2022-23ஆம் நிதியாண்டில் ரூ.44,121.13 கோடியாக உயர்ந்தது. மேலும், 2023-24 ஆம் ஆண்டில் ரூ.45,855.70 கோடியாகவும், இப்போது 2024-25 ஆம் ஆண்டில் ரூ48,344 கோடியாகவும் உயர்ந்துள்ளது.

2025 ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த சட்டப்பேரவையில், திமுக மீது கடுமையாக குற்றச்சாட்டை முன்வைத்தார். அதாவது, ”திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து டாஸ்மாக் நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ 10 கூடுதலாக விற்பதால் நாளொன்றுக்கு ரூ 15 கோடியும்,ஆண்டுக்கு ரூ 5000 கோடி வரையிலும் ஊழல் நடைபெறுகிறது” என்று கூறியுள்ளார்.

இத்தனை கோடியா?

இதற்கிடையில், அண்மையில் சென்னை டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய அமலாக்கத்துறை, டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி வரை ஊழல் நடந்துள்ளதாக கூறியிருந்தது.

இந்த மாநிலத்தையே உலுக்கியது. இதனை அடுத்து, டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது சட்டவிரோதமானது என்றும் விசாரணை நிறுத்த கோரி தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை நீதிபதிகள் சுப்பிரமணியன், ராஜசேகர் அமர்வில் விசாரணை நடந்து வந்த நிலையில், 2025 ஏப்ரல் 23ஆம் தேதியான இன்று தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது. இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டால், செந்தில் பாலாஜிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.  இந்த நிலையில் தான், டாஸ்மாக் வருமானம் 2024-25ஆம் நிதியாண்டில் பல மடங்கு உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ஜெய்யின் அடுத்தப் படத்தின் டைட்டில் இதுதான்...
நடிகர் ஜெய்யின் அடுத்தப் படத்தின் டைட்டில் இதுதான்......
முருகனை நாடும் இளம் வயதினர்.. பாடகர் வேல்முருகனின் ஆன்மிக அனுபவம்
முருகனை நாடும் இளம் வயதினர்.. பாடகர் வேல்முருகனின் ஆன்மிக அனுபவம்...
கோவில்களில் ரீல்ஸ் சர்ச்சை: மரியாதை மீறலா அல்லது சுதந்திரமா?
கோவில்களில் ரீல்ஸ் சர்ச்சை: மரியாதை மீறலா அல்லது சுதந்திரமா?...
நரசிம்ம ஜெயந்தி எப்போது? - இப்படி வழிபட்டால் இவ்வளவு பலன்களா?
நரசிம்ம ஜெயந்தி எப்போது? - இப்படி வழிபட்டால் இவ்வளவு பலன்களா?...
இனி மார்க் குறைந்தால் பெயில்.. அமலுக்கு வந்த புதிய நடைமுறை!
இனி மார்க் குறைந்தால் பெயில்.. அமலுக்கு வந்த புதிய நடைமுறை!...
அரசியலில் ஈடுபட 100 சதவீதம் தைரியம் வேண்டும்...
அரசியலில் ஈடுபட 100 சதவீதம் தைரியம் வேண்டும்......
இன்று முதல் பெங்களூருவில் 'ஹைவே ஹீரோஸ்' பிரச்சாரம்!
இன்று முதல் பெங்களூருவில் 'ஹைவே ஹீரோஸ்' பிரச்சாரம்!...
டெல்லியை புரட்டி போட்ட மழை.. 4 பேர் பலி.. விமான சேவை பாதிப்பு!
டெல்லியை புரட்டி போட்ட மழை.. 4 பேர் பலி.. விமான சேவை பாதிப்பு!...
புகழ் பெற்ற கேதார்நாத் கோவில் நடை இன்று திறப்பு...
புகழ் பெற்ற கேதார்நாத் கோவில் நடை இன்று திறப்பு......
பாம்பன் பாலத்தில் பயணம்.. வரப்போகும் வந்தே பாரத் ரயில் சேவை!
பாம்பன் பாலத்தில் பயணம்.. வரப்போகும் வந்தே பாரத் ரயில் சேவை!...
ஈரோட்டில் தனியாக வசித்து வந்த தம்பதி கொலை... நடந்தது என்ன?
ஈரோட்டில் தனியாக வசித்து வந்த தம்பதி கொலை... நடந்தது என்ன?...