‘ரீல்ஸ்’ மோகம்.. அரசுப் பேருந்துக்கு அடியில் சிக்கிய பைக்.. உயிர்தப்பிய மாணவர்கள்!!

bike trapped under a bus: மாணவர்களிடம் போலீசார் விசாரித்ததில், ரீல்ஸ் எடுப்பதற்காக ஆபத்தை உணராமல் விளையாட்டாக வீடியோ எடுத்ததும், அதனால் விபத்து நிகழ்ந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து, அவர்கள் போனை சோதித்ததில் இதுபோன்று விபரீதமாக அவர்கள் பல்வேறு வீடியோக்களை பதிவு செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது தெரியவந்தது.

‘ரீல்ஸ்’ மோகம்.. அரசுப் பேருந்துக்கு அடியில் சிக்கிய பைக்.. உயிர்தப்பிய மாணவர்கள்!!

மாதிரிப் புகைப்படம்

Updated On: 

03 Feb 2026 07:53 AM

 IST

நீலகிரி, பிப்ரவரி 03: ரீல்ஸ் வீடியோ எடுக்கும் மோகத்தால் அதிவேகமாக ஓட்டிச் செல்லப்பட்ட இருசக்கர வாகனம் ஒன்று அரசுப் பேருந்தின் அடியில் சிக்கியதில் விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக, மூன்று மாணவர்கள் உயிர் தப்பினர். சமூக வலைதளத்தில் கவனம் பெறுவதற்காக இன்று பள்ளி மாணவர்களும், இளைஞர்களும் செய்யாத விபரீத முயற்சிகள் கிடையாது. அந்தளவுக்கு அவர்களுக்கு எதிலும் ரீல்ஸ் மோகம் தான். குறிப்பாக இரு சக்கர வாகனத்தில் தங்களது சாகசத்தை காட்டி, அதனை சமூக வலைதளத்தில் ரீல்ஸாக வெளியிடுவது இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக மாறிவிட்டது. அவ்வாறு, கவனம் பெற அதிவேகமாக செல்வது, வீலிங் அடிப்பது, பட்டாசு வெடித்தபடி செல்வது என விதவிதமாக ஆப்பாத்தான முயற்சிகளில் ஈடுபட்டு ரீல்ஸ் வெளியிடுகின்றனர். அவ்வாறு, ரீல்ஸ் மோகத்தில் விபத்தில் உயிரை விட இருந்த பள்ளி மாணவர்கள் குறித்து பார்க்கலாம்.

இதையும் படிக்க : தைப்பூசத் திருவிழாவில் நடந்த சோகம்.. தேர் சக்கரத்தில் சிக்கி ஒருவர் பலி..

அரசுப் பேருந்து மீது மோதிய பள்ளி மாணவர்கள்:

நீலகிரி மாவட்டம், குன்னூரிலிருந்து கோத்தகிரி செல்லும் சாலையில், நேற்று முன்தினம் சிம்ஸ் பூங்கா அருகே, ஒரு தனியார் பள்ளியைச் சேர்ந்த ஆறு மாணவர்கள் இரண்டு இருசக்கர வாகனங்களில் தங்களது செல்போன்களில் ரீல்ஸ் வீடியோக்களைப் பதிவு செய்தவாறு பயணம் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் எதிரே வந்த அரசுப் பேருந்தை கவனிக்காமல் இருசக்கர வாகனங்களை அதிவேகமாக ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது. திடீரென பேருந்து வருவதைக் கண்டதும், ஒரு இருசக்கர வாகனத்தில் சென்ற மாணவர்கள் எதிர்பாராதவிதமாக அரசுப் பேருந்து மீது மோதினர்.

தூக்கி வீசப்பட்ட மாணவர்கள்:

இந்தச் சம்பவத்தில், அந்த மூன்று மாணவர்களும் வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்டனர். இருசக்கர வாகனம் மட்டும் அரசுப் பேருந்தின் அடியில் சிக்கியது. இந்த விபத்தில், அந்த மூன்று மாணவர்களும் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த அப்பர் குன்னூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற மாணவரின் பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க: மனைவிக்கு ஏற்பட்ட பாதிப்பு… அரசு ஊழியர் குடும்பத்துடன் தற்கொலை – அதிர்ச்சி சம்பவம்

ரீல்ஸ் மோகமே காரணம்:

தொடர்ந்து, மாணவர்களிடம் போலீசார் விசாரித்ததில் ரீல்ஸ் எடுப்பதற்காக ஆபத்தை உணராமல் விளையாட்டாக வீடியோ எடுத்ததும், அதனால் விபத்து நிகழ்ந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து, அவர்கள் போனை சோதித்ததில் இதுபோன்று விபரீதமாக அவர்கள் பல்வேறு வீடியோக்களை பதிவு செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது தெரியவந்தது. ரீல்ஸ் பதிவு செய்வதற்காகப் பள்ளி மாணவர்கள் அதிவேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்று, விபத்தில் சிக்கி நூலிழையில் உயிர் தப்பிய இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.15 லட்சம் செலவுசெய்து வளரப்பு நாயை ஆஸ்திரேலியா கொண்டு சென்ற இந்திய தம்பதி
அசாமில் 80 மீட்டர் பாலத்தை உருவாக்கிய அசாம் இளைஞர்
மரணத்திற்குப் பின்னும் வாழ்க்கை உண்டா? மரணத்தை வெல்ல நிபுணர்கள் முயற்சி
உருவாகிறது ரஜினிகாந்தின் பயோபிக்.. இணையும் தனுஷ் - ஐஸ்வர்யா?.. வந்தது குட்நியூஸ்!!