தமிழகத்திற்கு ரெட் அலர்ட்: அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தயார் நிலையில் இருக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

சில மாவட்டங்களில் நவம்பர் 29 மற்றும் 30 தேதிகளில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளதை முதல்வர் குறிப்பிட்டார். இதனால், அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் பேரிடர் நடவடிக்கைகளுக்கு தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்திற்கு ரெட் அலர்ட்:  அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தயார் நிலையில் இருக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

Updated On: 

28 Nov 2025 07:42 AM

 IST

சென்னை, நவம்பர் 28: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து, மாநில பேரிடர் மேலாண்மை ஆணை​யக் கூட்​ட​மும் நடை​பெற்​றது. இந்த கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாதூர் ராமச்சந்திரன், தலைமைச் செயலர் நா. முருகானந்தம், வருவாய் ஆணையர் சாய் குமார் மற்றும் பல துறைச் செயலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில், மாநில அளவிலான பல்வேறு கண்காணிப்பு மற்றும் அவசர மேலாண்மை அமைப்புகளின் செயல்திறன் ஆய்வு செய்யப்பட்டது. குறிப்பாக நிகழ்நேர பேரிடர் கண்காணிப்பு கருவிகள், புயல் கணிப்பு மாதிரி முறை, மாநகரங்களுக்கு வெப்பஅலை எதிரொலி திட்டங்கள், சென்னை நகரின் நிகழ்நேர வெள்ள எச்சரிக்கை முறை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இதையும் படிக்க: “செங்கோட்டையன் பின்னால் பாஜக இல்லை”.. நயினார் நாகேந்திரன் பளீர்!

அதோடு, தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமைக்கான ஒருங்கிணைந்த வெள்ள கண்காணிப்பு மையம், அவசர கால செயல்பாட்டு மையம், பொதுமக்களுக்கான TN Alert செயலி, அதிகாரிகளுக்கான TN Smart 2.0 இணைய தளம் உள்ளிட்டவற்றின் முன்னேற்றம் குறித்து பரிசீலிக்கப்பட்டது. மேலும், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை திட்டம் 2025க்கு ஆணையத்தின் ஒப்புதலும் வழங்கப்பட்டது.

மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய ரூ.826 கோடி:

இந்த ஆய்வுக்கூட்டத்தில் முதல்வரிடம் பேசிய அதிகாரிகள், 2021 முதல் நடப்பாண்டு வரை மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு,மத்திய அரசு ரூ.5351 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அதேசமயம், தமிழக அரசு ரூ.9,170 கோடி ஒதுக்கியுள்ளது. நடப்பு நிதியாண்டிற்கான இரண்டாவது தவணை பேரிடர் நிவாரண நிதியாக ரூ.826 கோடி மத்திய அரசிடம் இருந்து வர வேண்டியுள்ளது என்றும் தெரிவித்தனர்.

சிரமத்துக்கு உள்ளாகும் ஏழை, எளிய மக்கள்:

தொடர்ந்து, கூட்டத்தில் பேசிய முதல்வர் மழை சீற்றம் மற்றும் இயற்கை பேரிடர் நேரங்களில் ஏழை, எளிய மக்களே அதிக சிரமத்துக்கு உள்ளாகிறார்கள் என்பதால், பேரிடர் மேலாண்மையில் அதிக கவனம் செலுத்தி, பாதிப்புகளை குறைக்கும் முயற்சிகளில் அரசு தொடர்ந்து செயல்படுவதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் முதல்முறையாக மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பேரிடர் மேலாண்மை துறையின் செயல்பாடுகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன என்றும், கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.1,740 கோடி மதிப்பிலான பணிகள் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். மத்திய அரசை விட பேரிடர் நிவாரணத்துக்கு மாநில அரசு அதிக நிதி ஒதுக்கி வருகிறது என்றும் கூறினார்.

இதையும் படிக்க : அதிமுகவை விட இரண்டரை மடங்கு முதலீடுகளை ஈர்த்துள்ளோம் – முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..

ரெட் அலர்ட் – தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தல்:

சில மாவட்டங்களில் நவம்பர் 29 மற்றும் 30 தேதிகளில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளதை முதல்வர் குறிப்பிட்டார். இதனை முன்னிட்டு வருவாய், காவல், தீயணைப்பு, மீன்வளத்துறை, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், தேவையான மாவட்டங்களுக்கு உடனடியாக கண்காணிப்பு அதிகாரிகளை அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

மீட்பு மற்றும் நிவாரண மையங்கள் தயாராக இருக்க வேண்டும்; மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் தடையின்றி வழங்கப்பட வேண்டும்; அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் முழு துணிச்சலுடன் தயார் நிலையிலிருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். 

திருமணம் குறித்து ஸ்மிருதி மந்தனா எடுத்த முக்கிய முடிவு
இந்திய அரசாங்கத்தின் CNAP அமைப்பு.. இதன் நோக்கம் என்ன?
குளிர் காலத்தில் அதிகளவில் டீ, காபி குடிப்பீர்களா? அப்போ உங்களுக்கு தான் இந்த எச்சரிக்கை!
லோன் வாங்கியோருக்கு குட்நியூஸ்.. ரெப்போ வட்டி விகிதம் குறைய வாய்ப்பு!