Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கமல்ஹாசன் டூ கவிஞர் சல்மா.. ராஜ்யசபா தேர்தல்.. வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட திமுக!

Rajya Sabha election 2025 : மாநிலங்களவை தேர்தல் 2025 ஜூன் 19ஆம் தேதி நடக்கிறது. இந்த நிலையில், திமுக தனது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக சார்பில் பி.வில்சனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், கவிஞர் சல்மா, எஸ்.ஆர். சிவலிங்கம் என புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் டூ கவிஞர் சல்மா.. ராஜ்யசபா தேர்தல்.. வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட திமுக!
கமல்ஹான் - சல்மா - பி.வில்சன்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 28 May 2025 12:06 PM

சென்னை, மே 28 : மாநிலங்களவை தேர்தல் (rajya sabha election) 2025 ஜூன் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக வேட்பாளர்கள் (DMK Candidates) பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோர் மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்களாக அறிவிக்கபட்டுள்ளது. அதோடு, மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசனும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.  2025 ஜூன் 19ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஆலோசனைகளும் சில மாதங்களாக நடந்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை 6 மாநிலங்களவை இடங்களில் பதவிக் காலம் 2025 ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.

வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட திமுக

அதாவது, திமுகவைச் சேர்ந்த பி.வில்சன், எம்.சண்முகம், முகமது அப்துல்லா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி, அதிமுகவைச் சேர்ந்த சந்திரசேகரன் ஆகியோர் பதவிக் காலம் முடிவடைய உள்ளது. இந்த இடங்களை நிரப்ப, 2025 ஜூன் 19ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் 2025 ஜூன் 9ஆம் தேதி தொடங்கும் நிலையில், மனுவை திரும்ப பெற ஜூன் 12ஆம் தேதி கடைசி நாளாகும். 6 இடங்களில் திமுக 4 இடங்களிலும், அதிமுக 2 இடங்களிலும் நிற்கிறது. இந்த நிலையில், திமுக தனது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதன்படி, திமுக சார்பில் பி.வில்சனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  மேலும், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகிய புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர்கள் விவரம்

யார் இந்த சல்மா?

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் கவிஞர் சல்மா. இவர் எழுத்தாளர், கவிஞர், அரசியல்வாதி பல முகங்களை கொண்டவர். இவர் தனது எழுத்து மூலம் பெண் உரிமை, சமூக நிதி, பெண்ணிய கருத்துகளை வெளிப்படுத்தி உள்ளார். ஏராளமான புத்தகங்களை எழுதி இருக்கிறார். சல்மா பொன்னம்பட்டி பேரூராட்சி தலைவராகவும் இருந்துள்ளார். 2006ஆம் ஆண்டு மருங்காபுரி தொகுதியில் போட்டியிட்டு சல்மா, வெற்றி வாய்ப்பை இழந்தார். அதன்பிறகு, தமிழ்நாடு சமூக நல வாரிய தலைவராக அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், திமுகவில் மகளிர் அணி பிரச்சார குழு செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.

யார் இந்த எஸ்.ஆர்.சிவலிங்கம்?

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எஸ்.ஆர்.சிவலிங்கம். இவர் தமிழ்நாடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் திமுக சார்பில் 1989 மற்றும் 1996ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் பனமரத்துப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சேலத்தில் திமுகவின் முக்கிய பிரநிதிதியாக  இவர் திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசனுக்கு எம்.பி சீட் 

மக்கள் மய்யம் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு மாநிலங்களவை சீட் ஒன்றை திமுக ஒதுக்கியுள்ளது.  2024ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலின்போதே, கமல்ஹாசனுக்கு மாநிலங்களை சீட் தரப்படும் என திமுக  கூறியது. இதற்கான ஒப்பந்தமும் போடப்பட்டது.  அதன்படியே, திமுக நான்காவது வேட்பாளராக கமல்ஹாசனை அறிவித்துள்ளது. இதன் மூலம், முதல்முறையாக கமல்ஹாசன் நாடாளுமன்றத்தில் செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்தியாவில் 1,300 ஐ கடந்த கொரோனா பாதிப்பு.. WHO எச்சரிக்கை..!
இந்தியாவில் 1,300 ஐ கடந்த கொரோனா பாதிப்பு.. WHO எச்சரிக்கை..!...
RBI விதிகள் கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது: பெரிய கருப்பன்
RBI விதிகள் கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது: பெரிய கருப்பன்...
ஆபரேஷன் சிந்தூர் முடியவில்லை.. பாகிஸ்தானுக்கு PM மோடி எச்சரிக்கை!
ஆபரேஷன் சிந்தூர் முடியவில்லை.. பாகிஸ்தானுக்கு PM மோடி எச்சரிக்கை!...
கமல் ஹாசனின் பேச்சால் நெகிழ்ந்த நடிகர் நானி... வைரலாகும் வீடியோ!
கமல் ஹாசனின் பேச்சால் நெகிழ்ந்த நடிகர் நானி... வைரலாகும் வீடியோ!...
கவுன்சிலர்கள் மோதல்.. தேசிய கீதம் பாடி நிறுத்த முயன்ற அதிகாரிகள்!
கவுன்சிலர்கள் மோதல்.. தேசிய கீதம் பாடி நிறுத்த முயன்ற அதிகாரிகள்!...
உலகின் மிக சிறிய கார் - டிரைவர் எப்படி இந்த காரை ஓட்டுவார்?
உலகின் மிக சிறிய கார் - டிரைவர் எப்படி இந்த காரை ஓட்டுவார்?...
உச்ச நீதிமன்றத்திற்கு 3 புதிய நீதிபதிகள் நியமனம்..!
உச்ச நீதிமன்றத்திற்கு 3 புதிய நீதிபதிகள் நியமனம்..!...
மலரே நின்னை காணாதிருந்நால்... 10 ஆண்டுகளை நிறைவு செய்தது பிரேமம்!
மலரே நின்னை காணாதிருந்நால்... 10 ஆண்டுகளை நிறைவு செய்தது பிரேமம்!...
இறுதிக்கு செல்லும் அணி எது..? குவாலிபையர் 1ல் மோதும் RCB vs PBKS!
இறுதிக்கு செல்லும் அணி எது..? குவாலிபையர் 1ல் மோதும் RCB vs PBKS!...
வங்கிகள் கடனுக்கு கூடுதல் தொகை வசூலிக்கும் முறைகள்
வங்கிகள் கடனுக்கு கூடுதல் தொகை வசூலிக்கும் முறைகள்...
பாமக இளைஞர் சங்க தலைவர் பதவியில் இருந்து விலகிய முகுந்தன்..!
பாமக இளைஞர் சங்க தலைவர் பதவியில் இருந்து விலகிய முகுந்தன்..!...