தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு; அடுத்த 7 நாட்களில் வெப்பம் குறையும்

Tamil Nadu Rain Alert: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பதிவாகி, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. அடுத்த 7 நாட்களில் தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. 2026 மார்ச் 19 முதல் 21 வரை அதிகபட்ச வெப்பநிலை 2-3°C வரை குறையக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு; அடுத்த 7 நாட்களில் வெப்பம் குறையும்

கோப்புப் புகைப்படம்

Published: 

17 Mar 2026 14:45 PM

 IST

சென்னை வானிலை மையம் 17-03-2026, மதியம் 1 மணி நிலவரப்படி வெளியிடப்பட்ட தகவலின்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் மற்றும் நீலகிரி மாவட்டம் சாந்தி விஜயா பள்ளி பகுதிகளில் தலா 3 செ.மீ மழை பெய்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தின் ஊத்து மற்றும் நாலுமுக்கு பகுதிகளில் தலா 2 செ.மீ, மதுரை மாவட்டம் பேரையூர் மற்றும் நீலகிரி பார்வூட் பகுதிகளில் தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இதே நேரத்தில் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவியது.

வெப்பநிலை மாற்றங்கள்

தமிழகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் இல்லை. சில இடங்களில் இயல்பை விட 2°C வரை அதிகரித்திருந்தாலும், பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை இயல்பை ஒட்டி காணப்பட்டது. கரூர் பரமத்தியில் அதிகபட்சமாக 38.2°C பதிவாகியுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலையும் சில இடங்களில் 2-3°C வரை உயர்ந்துள்ளது. திருத்தணியில் சமவெளிப் பகுதிகளில் 22.0°C குறைந்தபட்சமாகவும், மலைப்பகுதியான உதகமண்டலத்தில் 8.8°C குறைந்தபட்சமாகவும் பதிவாகியுள்ளது.

அடுத்த 7 நாட்களுக்கு மழை முன்னறிவிப்பு

தமிழக கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், வரும் நாட்களில் மழை வாய்ப்பு அதிகரித்துள்ளது. இன்று (17-03-2026) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். 18-03-2026 அன்று மாநிலத்தின் பல பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 19 முதல் 21 வரை டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் இடியுடன் மழை தொடரும். 2026 மார்ச் 22 மற்றும் 23 தேதிகளில் தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் நிலையில், மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நீடிக்கும்.

வெப்பநிலை முன்னறிவிப்பு

2026 மார்ச் 17 மற்றும் 18 மார்ச் தேதிகளில் வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது. ஆனால் 2026 மார்ச்
19 முதல் 21 வரை சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3°C வரை குறையக்கூடும். இதனால் வெப்பம் சற்றே தணியும் வாய்ப்பு உள்ளது. அதேசமயம் குறைந்தபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்காது என்றும், அது இயல்பை ஒட்டி இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Also Read: இடி, மின்னலுடன் மழை கொட்டும்.. வெயிலும் கொளுத்தும்..

சென்னை வானிலை நிலவரம்

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33°C மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25°C அளவில் இருக்கும். நாளை (18-03-2026) நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனால் நகரில் சற்று குளிர்ச்சியான நிலை நிலவக்கூடும்.

மீனவர்களுக்கு அறிவிப்பு

தமிழக கடலோர பகுதிகள், வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் 17-03-2026 முதல் 21-03-2026 வரை எந்தவிதமான கடல் எச்சரிக்கையும் விடப்படவில்லை. எனவே மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்கு செல்லலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow Us
அமெரிக்க உலகப்போர் நினைவு சின்னம் முன்பு நடனமாடிய இந்தியர் - சர்ச்சையாகும் வீடியோ
ஈரானின் புதிய தலைவர் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.92 கோடி பரிசு - அமெரிக்க அறிவிப்பு
கேஸ் தட்டுப்பாடு - புதிதாக ஒரு இணையதளத்தையே உருவாக்கிய இளைஞர்கள்
மஹாராஜா 2 அறிவிப்பை வெளியிட்ட விஜய் சேதுபதி - மகிழ்ச்சியில் ரசிகர்கள்