முடி மாற்று சிகிச்சையா.. புதிய விதிகளை மறந்துவிடாதீர்கள்.. மீறினால் சுகாதாரத்துறை விடுத்த எச்சரிக்கை!

Hair Transplant Treatment Centers: தமிழகத்தில் முடி மாற்று சிகிச்சை மேற்கொள்ளும் மையங்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை முக்கியமான புதிய விதிகளை வகுத்து வெளியிட்டுள்ளது. இந்த விதிகளை மீறும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

முடி மாற்று சிகிச்சையா.. புதிய விதிகளை மறந்துவிடாதீர்கள்.. மீறினால் சுகாதாரத்துறை விடுத்த எச்சரிக்கை!

முடி மாற்று சிகிச்சை மையங்களுக்கு புதிய விதிகள்

Updated On: 

23 Feb 2026 08:39 AM

 IST

சென்னை அண்ணா நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிளஸ் 2 படித்துவிட்டு முடி மாற்று சிகிச்சை மையம் நடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. பொதுவாக முடி மாற்று அறுவை சிகிச்சையில் தகுதியான மருத்துவர்கள் அதற்கான மயக்க மருந்துகளை செலுத்தி இந்த சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இதற்கான சிகிச்சை மையம் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உரிய மருத்துவ விதிகளின்படி பராமரிக்கப்படுவது அவசியம் ஆகும். இதற்கான வழி முறைகளை அந்த சிகிச்சை மையம் மேற்கொள்ளாமல் இருந்தது தெரிய வந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் முடி மாற்று சிகிச்சை மையங்களுக்கு புதிய விதிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை விதித்துள்ளது. இதற்காக தமிழக மருத்துவ நிறுவன சட்டத்தில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் வராத முடி மாற்று சிகிச்சை மையம்

தமிழ்நாட்டில் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள், கிளினிக்குகள், சிறிய அளவிலான மருத்துவ மையங்கள் ஆகியவை செயல்பட்டு வருகிறது. இதற்கு முறையான உரிமம் பெறுவதும், அதனை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிப்பதும் நடைமுறையாகும். இதில், ஹோமியோபதி, சித்தா ஆயுர்வேதம், யுனானி ஆகிய மருத்துவமனைகளும் பதிவு செய்ய வேண்டும். இதில், முடி மாற்று சிகிச்சை மையங்களை பதிவு செய்வதில் சில சிக்கல்கள் நீடித்து வருகின்றன. இந்த மையங்கள் அழகு நிலையங்கள் என்ற பெயரிலும், சரும பொலிவு மையங்கள் என்ற பெயரிலும் செயல்படுவதால் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கட்டுப்பாட்டில் வருவதில்லை.

மேலும் படிக்க: திசை மாறும் காற்றழுத்தம்.. தமிழகத்தில் இன்று கொட்டப்போகுது மழை.. வானிலை நிலவரம் இதோ..

முடி மாற்று சிகிச்சை மையங்களுக்கு புதிய விதிகள்

இதனால், இந்த மையங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை. நடவடிக்கையும் எடுக்க முடிவதில்லை. இதனை தவறாக பயன்படுத்திய நபர்கள் முடி மாற்று சிகிச்சையை மேற்கொண்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து மருத்துவ நிறுவன பதிவு நடவடிக்கைகளை ஆன்லைன் வழியாக எளிதாக மேற்கொள்வதற்கான புதிய நடைமுறைகள் வெளியிடப்பட்டன. இதில், முடி மாற்று சிகிச்சை மையங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முடிமாற்று சிகிச்சை மற்றும் லேசர் நுட்பத்திலான தோல் சிகிச்சைகளை அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்கள் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.

சிகிச்சை பெறும் நபர்களின் ஒப்புதல்

இதே போல, மருத்துவ நிறுவனங்கள் பதிவு சட்டத்தின் கீழ், உரிமம் பெற்ற மையங்களில் மட்டுமே முடி மாற்று சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். இதிலும், அவசர கால சிகிச்சையின் போது, அதற்கான கட்டமைப்பு வசதிகள் முக்கியமாக இருத்தல் வேண்டும். இது மட்டும் இன்றி உரிய பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றி, சிகிச்சை பெறும் நபர்களின் ஒப்புதலையும் பெற வேண்டும். ஒவ்வொரு சிகிச்சைகளுக்கான ஆவணங்களையும் முறையாக பராமரிப்பதுடன், மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் மூலமாக அந்த சிகிச்சை மையங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். இதனை மீறும் நபர் மற்றும் நிறுவனம் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: தூக்க மாத்திரை சாப்பிட்டதால் மயங்கிய இளம் பெண்.. அத்துமீறிய கள்ளக்காதலன்.. பெற்ற தாயின் வக்கிர செயல்!

Follow Us
Related Stories
பொதுமக்களுக்கு எச்சரிக்கை: 40 டிகிரி செல்சியஸைத் தொடும் வெப்பம்… பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்!
ரூ.10,000 ‘போலி செக்’.. தேர்தல் களத்தில் வெடிக்கும் பணப் புகார்களும், சட்டப் போராட்டங்களும்!!
ராகுல் காந்தி – மு.க.ஸ்டாலின் இணைந்து பிரசாரம் மேற்கொள்ள வாய்ப்பில்லை.. ஆர்.எஸ்.பாரதி வைத்த அதிரடி ட்விஸ்ட்!
கேஸ் தட்டுபாடால் ஆட்டோ ஓட்டுநர்கள் அவதி.. பெரம்பூர் வேட்பாளர் திலகபாமா கொடுத்த வாக்குறுதி..
கரூரில் பரபரப்பு.. செந்தில் பாலாஜி நண்பர் வீடு – அலுவலகத்தில் திடீர் சோதனை.. அதிரடியாக களமிறங்கிய வருமான வரித்துறை!
வாக்காளர்களுக்கு ரூ.10,000 போலி செக்.. வீடு வீடாக விநியோகம்.. நிலக்கோட்டையில் பரபரப்பு!
கோஸ்ட் டெலிவரி மோசடி: LPG சிலிண்டர் புக்கிங்கில் புதிய சிக்கல்..
கும்பமேளா வைரல் மோனாலிசா போஸ்லே காணவில்லை .. ஃபர்மான் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..
ஆண்ட்டி என அழைத்ததால் மன உளைச்சல் - நீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு
சாலையில் குட்காவை துப்பிய இந்திய சுற்றுலா பயணிகள் - சுத்தம் செய்ய வைத்த நேபாளி