காஞ்சிபுரத்தில் சமையல் எரிவாயு கசிவு: கர்ப்பிணி, அவருடைய மகளும் உயிரிழப்பு
Pregnant Woman and Daughter Die in Kanchipuram: காஞ்சிபுரத்தில் சமையல் எரிவாயு கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் கர்ப்பிணிப் பெண்ணும், அவரது மகளும் உயிரிழந்தனர். தீ விபத்து நேரத்தில் இருவரும் குளியலறையில் இருந்ததால் தீயில் சிக்கினர். சிகிச்சைக்கு பிறகும் உயிரிழந்த நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் ஜூலை 15: காஞ்சிபுரம் (Kanchipuram) பிள்ளையார்பாளையத்தில் (Pillaiyarpalayam) சமையல் எரிவாயு உருளையில் ஏற்பட்ட கசிவால் தீ விபத்து (Fire accident due to leakage in cooking gas cylinder) ஏற்பட்டது. இந்த விபத்தில் கர்ப்பிணியான மணிமேகலை (29) மற்றும் அவரது மகள் கிருபாஷினி (8) தீக்காயங்களால் உயிரிழந்தனர். தாயும் மகளும் குளித்துக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது. வீட்டிலிருந்த மற்றவர்கள் உடனடியாக வெளியேறி தப்பியதாக தெரிகிறது. தீக்காயங்களுடன் காஞ்சிபுரம் மற்றும் சென்னை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் பலனளிக்கவில்லை. சம்பவம் குறித்து சிவகாஞ்சி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமையல் எரிவாயு உருளையில் ஏற்பட்ட கசிவால் தீ விபத்து
காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளையார்பாளையம் பகுதியில் உள்ள லிங்கப்பாளையம் தெருவில் உள்ள வீட்டில் சமையல் எரிவாயு உருளையில் ஏற்பட்ட கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கர்ப்பிணியாக இருந்த மணிமேகலை (வயது 29) மற்றும் அவரது 8 வயது மகள் கிருபாஷினி, இருவரும் சிகிச்சை பலனின்றி தங்கள் உயிரை இழந்தனர்.
விளக்கொளிப் பெருமாள் கோயில் தோப்புத் தெருவைச் சேர்ந்த நெசவாளர் மோகன்ராஜின் மனைவியான மணிமேகலை, கருவுற்ற நிலையில், தந்தையின் வீட்டுக்கு மகளுடன் சென்றிருந்தார். சம்பவ நாளான 2015 ஜூலை 14 திங்கள்கிழமை, இருவரும் குளியலில் இருந்தபோது, சமையல் எரிவாயு கசிவால் திடீரென தீப்பற்றியது.




Also Read: அஜித்குமாரின் தம்பிக்கு மதுரை ஆவினில் வேலை – தமிழ்நாடு அரசு அறிவிப்பு
விபத்ததில் தாயும் சேயும் பலி
வீட்டிலிருந்த மற்றவர்கள் அவசரமாக வெளியேறி தப்பியதும், குளியலறையில் இருந்த தாய், மகளுக்கு விபத்தைப் பற்றிய தகவல் தெரியாமல் தீயில் சிக்கினர். அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.
இந்த சோகம் தரும் சம்பவம் குறித்து சிவகாஞ்சி போலீஸார் வழக்குப்பதிவு செய்து, மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமையல் எரிவாயு கசிவு என்ன செய்ய வேண்டும்?
மின்சாரம் பயன்படுத்த வேண்டாம்:
லைட் ஸ்விட்ச், பங்க் ஸ்விட்ச், மொபைல் போன் பயன்படுத்த வேண்டாம்.
தீப்பற்றி வெடிக்கும் அபாயம் உள்ளது.
கதவுகளை திறந்துவையுங்கள்:
ஜன்னல், கதவுகளை திறந்து வைக்கவும்.
கசிந்த எரிவாயு வெளியேறிவிடும்.
சிலிண்டரை அணைத்து விடுங்கள்:
ரெகுலேட்டரை ஆஃப் செய்யவும்.
வாயு வெளியேறுவதைத் தடுக்க உதவுகிறது.
மின்னணு சாதனங்களை அணைத்து வையுங்கள்:
ஃபிரிட்ஜ், பம்ப் மோட்டார், பேன் போன்ற சாதனங்களைப் பயன்படுத்த வேண்டாம்.
தீயணைப்பு மற்றும் போலீஸ் எண்களுக்கு தகவல் அளிக்கவும்:
அருகிலுள்ள தீயணைப்பு நிலையத்தையும், போலீசையும் உடனே தொடர்பு கொள்ளவும்.
எண்: 101 (தீயணைப்பு), 100 (போலீஸ்)
தீப்பற்றினால்:
நவீன சிறு தீயணைப்பானால் (fire extinguisher) தீயை அணைக்க முயற்சிக்கவும்.
நிலைமையை கட்டுப்படுத்த முடியவில்லையெனில் உடனே வெளியேறி உதவிக்குரல் கொடுக்கவும்.