பொங்கல் சிறப்பு ரயில்.. சொந்த ஊர் செல்வபவர்கள் கவனத்திற்கு.. வெளியானது ஸ்பெஷல் அறிவிப்பு..

Pongal Special Trains: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 150க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமென அறிவித்த தெற்கு ரயில்வே, அவை எந்தெந்த ஊரில் இருந்து எங்கு செல்கிறது என்ற விரிவான, அதிகாரப்பூர்வ கூடுதல் விபரங்களை அறிவிக்காமல் இருந்தது. இந்நிலையில், தற்போது தென் மாவட்டங்களுக்கான சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் சிறப்பு ரயில்.. சொந்த ஊர் செல்வபவர்கள் கவனத்திற்கு.. வெளியானது ஸ்பெஷல் அறிவிப்பு..

பொங்கல் சிறப்பு ரயில் அறிவிப்பு

Updated On: 

03 Jan 2026 09:07 AM

 IST

சென்னை, ஜனவரி 03: பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு, 60 நாள் முன்பாக, நவ. மாத இரண்டாவது வாரம் துவங்கியது. வழக்கம் போல், துவங்கிய சில நிமிடங்களில் முன்பதிவு முடிந்த நிலையில், முன்பதிவு செய்ய முயற்சிப்பவர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்படுகின்றனர். தற்போது, சென்னையில் இருந்து கோவை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட அதிக எண்ணிக்கையில், பயணிகள் பயணிக்கும் வழித்தடங்களில், காத்திருப்போர் பட்டியல் நீண்டு வருகிறது. இதனால், ரயில்களில் முன்பதிவு செய்யமுடியாத பொதுமக்கள், சிறப்பு ரயில்களை எதிர்பார்த்துக் காத்திருந்து வருகின்றனர்.

இதையும் படிக்க: அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கலுக்கு ரொக்கப்பரிசு உறுதி.. எவ்வளவு கிடைக்க வாய்ப்பு?

தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு:

இதனிடையே, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 150க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமென அறிவித்த தெற்கு ரயில்வே, அவை எந்தெந்த ஊரில் இருந்து எங்கு செல்கிறது என்ற விரிவான, அதிகாரப்பூர்வ கூடுதல் விபரங்களை அறிவிக்காமல் இருந்தது. இந்நிலையில், தற்போது தென் மாவட்டங்களுக்கான சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில் – தாம்பரம்:

அதன்படி, நாகர்கோவில் – தாம்பரம் இடையே சிறப்பு ரயில் (06012) ஜனவரி 11, 18 ஆகிய தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும்; தாம்பரம் – குமரி சிறப்பு ரயில் (06011) ஜன.12, 19 ஆகிய தேதிகளில் தாம்பரத்திலிருந்து மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03.30 மணிக்கு குமரி சென்றடையும்.

குமரி – தாம்பரம் – நாகர்கோவில்:

குமரி – தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு ரயில் (06054) ஜன.13, 20 ஆகிய தேதிகளில் குமரியில் இருந்து இரவு 8.30க்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும்; தாம்பரத்திலிருந்து (06053) ஜன.14, 21 ஆகிய தேதிகளில் மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்

நெல்லை – செங்கல்பட்டு ஜன.9, 16 :

நெல்லை – செங்கல்பட்டு சிறப்பு ரயில் (06156) ஜன.9, 16 ஆகிய தேதிகளில் நெல்லையில் இருந்து அதிகாலை 3.45க்கு புறப்பட்டு மதியம் 01.15 மணிக்கு செங்கல்பட்டு வந்தடையும்; செங்கல்பட்டில் இருந்து (06155) ஜன.9, 16 ஆகிய தேதிகளில் மதியம் 03.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 02.00 மணிக்கு நெல்லை சென்றடையும்.

இதையும் படிக்க: “எங்களிடம் 30 லட்சம் வாக்குகள் உள்ளது”.. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் கொதிப்பு!!

நெல்லை – செங்கல்பட்டு ஜன.10, 17:

நெல்லை – செங்கல்பட்டு சிறப்பு ரயில் (06158) ஜன.10, 17 ஆகிய தேதிகளில் நெல்லையில் இருந்து அதிகாலை 3.45க்கு புறப்பட்டு மதியம் 01.15 மணிக்கு செங்கல்பட்டு வந்தடையும்; செங்கல்பட்டில் இருந்து (06157) ஜன.10, 17 ஆகிய தேதிகளில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3 மணிக்கு நெல்லை சென்றடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, முன்பதிவில்லாத ரயில் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories
2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி யாருக்கு? விஜய்க்கு எந்த இடம்? வெளியானது புதிய கருத்துக் கணிப்பு முடிவுகள்
2026 தேர்தலில் திமுக கூட்டணியின் வெற்றி உறுதி…மார்க்சிஸ்ட் மாநில செயலர் சண்முகம்!
எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்க எதிர்ப்பு…செங்கோட்டையனுக்கு எதிராக அதிமுகவினர் போர்க்கொடி!
இனி 2 மணி நேரத்துக்கு முன்னதாகவே ராமேஸ்வரம் போகலாம் – பொங்கலுக்கு வருது வந்தே பாரத் ரயில் – எந்தெந்த ஸ்டேஷனில் நிற்கும்?
திமுக தேர்தல் அறிக்கை கருத்து கேட்கும் செயலி…முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்தார்!
ஜல்லிக்கட்டு பிரியர்களே தயாரா…மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான தேதிகள் அறிவிப்பு!
தொடங்கிய புத்தாண்டு கொண்டாட்டம்.. நடிகர்களின் ப்ளான் இதுதான்..
இந்த 6 விஷயங்கள் தான் உணவின் ரகசியம்.. ஃபிட்னஸ் கோச் ராஜ் கண்பத் பகிர்ந்த வீடியோ..
ஜிமெயில் பயனர்களுக்கு சூப்பர் அப்டேட்.. இனி “@gmail.com” என்பது கட்டாயமல்ல..
ஹனிமூனை போர்ச்சுகலில் செலவிட்ட சமந்தா - ராஜ் நிடிமோரு ஜோடி - வைரலாகும் புகைப்படங்கள்