பிரியாணியோடு திருப்பரங்குன்றம் மலையேற முயன்ற கேரள முஸ்லீம்கள்- தடுத்து நிறுத்திய போலீசார் – பரபரப்பு தகவல்
Thiruparankundram: பிரியாணியோடு தர்கா செல்ல திருப்பரங்குன்றம் மலையேற முயன்றபோது, 60க்கும் மேற்பட்ட கேரள இஸ்லாமியர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். மலை மீது அசைவ உணவு சாப்பிட தடை விதித்திருப்பதாக கூறி இஸ்லாமியர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பரங்குன்றத்தில் பிரியாணியோடு மலையேற முயன்ற இஸ்லாமியர்களால் பரபரப்பு
மதுரை, டிசம்பர் 26 : திருப்பரங்குன்றம் (Thiruparankundram) மலை மீது உள்ள சிக்கந்தர் தர்காவில் வருகிற ஜனவரி 6, 2026 அன்று சந்தனக்கூடு கந்தூரி விழா நடைபெறவிருக்கிறது. இதனையடுத்து கடந்த டிசம்பர் 21, 2025 அன்று சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.இந்த நிலையில் அங்கு இஸ்லாமியர்கள் வழிபட்டு வருகின்றனர். அங்கு மாமிச உணவுகள் சாப்பிட தடை விதிக்கப்பட்டதால் அங்கு வரும் இஸ்லாமியர்களை காவல்துறையினர் உரிய சோதனையுடன் அனுமதிக்கின்றனர். இந்த நிலையில் தான் பிரியாணியோடு வந்த கேரள முஸ்லீம்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரியாணியோடு வந்த கேரள முஸ்லீம்களுக்கு தடை
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற சர்சை உருவான நிலையில், மலை மீது பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கடந்த டிசம்பர் 21, 2025 அன்று திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தினமும் தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் மலையில் உள்ள தர்காவில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதையும் படிக்க : கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வந்த ரவுடிக்கு நேர்ந்த கதி…பீர் பாட்டிலால் தாக்கி கொடூர கொலை!
திருப்பரங்குன்றம் மலையில் அசைவ உணவுகள் சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பம் உட்பட 60 பேர் டிசம்பர் 26, 2025 சிக்கந்தர் தர்காவிற்கு செல்ல திருப்பரங்குன்றம் வந்துள்ளனர். அவர்கள் பிரியாணியோடு வந்ததால் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்களிடம் அசைவ உணவு சாப்பிட தடைவிதிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி அவர்கள் செல்ல காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் தர்காவில், வரும் ஜனவரி 6, 2025 அன்று சந்தனக்கூடு, கந்தூரி விழா நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த கந்தூரி விழாவிற்கு தடை விதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் தடை விதிக்காமல், விசாரணையை ஜனவரி, 2025 அன்று தள்ளிவைத்துள்ளது. அதுவரை திருப்பரங்குன்றம் மலைக்கு பக்தர்கள் செல்லலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு பாதையாத்திரை சென்ற 3 பெண் பக்தர்கள் – கார் மோதி பலி
திருப்பரங்குன்றம் தர்காவுக்கு அருகில் உள்ள கல் தூணில்தான் தீபம் ஏற்ற வேண்டும் என்று இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நடைபெற்றுவருகிறது. சட்ட ஒழுங்கு பிரச்னையைக் காரணம் காட்டி தமிழக அரசு அதற்கு அனுமதியளிக்கவில்லை. இந்த நிலையில் தான் சிக்கந்தர் தர்கா விவகாரம் பெரிதாக பேசப்பட்டு வருகிறது.