மருத்துவமனையில் ராமதாஸ் அட்மிட்.. பதறி ஓடிய அன்புமணி.. நலம் விசாரிப்பு!

Ramadoss Hospitalized : உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாமக நிறுவனர் ராமதாஸை, அக்கட்சி தலைவர் அன்புமணி நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராமதாஸை, அன்புமணி சந்தித்துள்ளார். மேலும், ராமதாசுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவரிடம் அன்புமணி கேட்டறிந்தார்.

மருத்துவமனையில் ராமதாஸ் அட்மிட்.. பதறி ஓடிய அன்புமணி.. நலம் விசாரிப்பு!

Anbumani Ramadoss (9)

Updated On: 

06 Oct 2025 09:27 AM

 IST

சென்னை, அக்டோபர் 06 : உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாமக நிறுவனர் ராமதாஸை, அக்கட்சி தலைவர் அன்புமணி நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராமதாஸை, அன்புமணி சந்தித்துள்ளார். பாமக நிறுவனராக இருப்பவர் ராமதாஸ். இவருக்கு வயது 86. இவர் கட்சி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், 2025 அக்டோபர் 5ஆம் தேதியான நேற்று இரவு திடீரென சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. வயது முதிர்வு காரணமாக அவ்வப்போது மருத்துவமனையில் ராமதாஸ் பரிசோதனை மேற்கொள்வார். அந்த வகையில், 2025 அக்டோபர் 5ஆம் தேதியான நேற்று அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ராமதாஸை சந்தித்து நலம் விசாரித்த அன்புமணி

இதய பிரச்னை காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து இதய பிரச்னை தொடர்பாக அவருக்கு முதற்கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, இன்று (அக்டோபர் 06) காலை ராமதாஸுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்படுகிறது. மருத்துவமனை செங்குட்டுவேல் தலைமையிலான குழு இந்த பரிசோதனையை மேற்கொள்கிறது.

Also Read : பாமக நிறுவனர் ராமதாஸ் திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி – என்ன நடந்தது?

இருப்பினும், மருத்துவர் ராமதாஸை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில், உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ள ராமதாஸை, பாமக தலைவரும், அவரது மகனுமான அன்புமணி ராமதாஸ் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், ராமதாசுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவரிடம் அன்புமணி கேட்டறிந்தார்.

ராமதாஸ் டிஸ்சார்ஜ் எப்போது?

ராமதாஸ் உடல்நிலை குறித்து பாமக தலைமை செய்தி தொடர்பாளர் அருள் எம்எல்ஏ தகவலை பகிர்ந்துள்ளார். பாமக தலைவர் ராமதாஸ் வழக்கமான முழு உடல் பரிசோதனைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் சென்றதாகவும், பரிசோதனை முடிந்து, இன்று (அக்டோபர் 06) வீடு திரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  இதற்கிடையில்,  ராமதாஸை அன்புமணி சந்தித்துள்ளார். தந்தை மகன் இருவருக்கும்  கருத்து மோதல் நிலவி வரும் நிலையில்,  அவரை நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார்.

Also Read: இது எனது நன்றிக்கடன்… பல நல்ல விஷயங்களை பண்றாங்க – தமிழக அரசுக்கு அஜித் குமார் பாராட்டு

அன்பமணி மற்றும் ராமதாஸ் இடையே கடந்த சில மாதங்களாக அதிகார போட்டி நிலவி வருகிறது.  நானே கட்சிக்கு தலைவர்,  நிறுவனர் என ராமதாஸ் கூறி வருகிறார். மேலும்,  கட்சியில் உள்ளவர்கள் ராமதாஸ் நீக்க, அன்புமணி சேர்த்து வருகிறார். இப்படியாக இருவருக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இவர்களது பிரச்னையை சரி  செய்ய மூத்த தலைவர்கள் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.