கோவையில் ரூ.2.5 கோடியில் மின்விசை படிக்கட்டுடன் கூடிய நடைமேம்பாலம்…என்ன வசதிகள்..எங்கு அமைகிறது!

Electric Stairs At Avinashi: கோவை மாவட்டத்தில் அவிநாசி மேம்பாலம் பகுதியில் ரூ.2.5 கோடியில் மின்விசை படிக்கட்டுகளுடன் கூடிய நடைமேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இந்த மேம்பாலத்தில் என்னென்ன அம்சங்கள் உள்ளன. எப்போது அமைக்கப்படும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

கோவையில் ரூ.2.5 கோடியில் மின்விசை படிக்கட்டுடன் கூடிய நடைமேம்பாலம்...என்ன வசதிகள்..எங்கு அமைகிறது!

அவிநாசியில் மின்விசை படிக்கட்டுடன் நடை மேம்பாலம்

Published: 

21 Jan 2026 06:35 AM

 IST

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இந்த போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் உயர் மட்ட மேம்பாலம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு வருகிறது. இதனால், முக்கியமான இடங்களில் உள்ள 4 முனை சந்திப்பு, 3 முனை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைந்துள்ளது. அதன்படி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கோயம்புத்தூர் அவிநாசி சாலையில் ரூ.1.79 கோடியில் சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேம்பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது. இந்த நிலையில், அவினாசி மேம்பாலம் பகுதியில் சில இடங்களில் சிக்னல்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால், பொது மக்கள் சாலையை எளிதில் கடந்து சென்று வந்தனர். தற்போது, மேம்பாலம் கட்டப்பட்டதையடுத்து சாலையின் நடுவில் தடுப்புகள் அமைக்கப்பட்டதால் சாலையை கடந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது.

ரூ.2.5 கோடியில் மின்விசை படிக்கட்டுடன் நடைமேம்பாலம்

மேலும், அந்தப் பகுதியில் யூ-டர்ன் அமைக்கப்பட்டாலும் நடந்து செல்பவர்கள் சாலையை கடந்து செல்ல முடிவதில்லை. இதனால், லட்சுமி ஆலை சந்திப்பு, அரசு சிறுவர்கள் கூர்நோக்கு இல்லம் அருகே நடை மேம்பாலம் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, தனியார் மருத்துவமனை பங்களிப்பு உதவியுடன் ரூ.2.5 கோடியில் நடை மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நடை மேம்பாலத்தில் மின்விசை படிக்கட்டு, நடை மேம்பாலத்தில் இருபுறமும் இணைப்பை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட உள்ளது.

மேலும் படிக்க: ஒரு பதவிக்கு ரூ.1 கோடி? தமிழ்நாட்டில் ரூ.365 கோடி இடமாற்ற ஊழல்.. அமைச்சருக்கு தொடர்பா?

மேலும் 4 இடங்களில் நடைமேம்பாலம்

இந்த நடை மேம்பாலத்துக்கான திட்ட வரையை நெடுஞ்சாலை துறை தயாரித்த பின்னர் அரசின் ஒப்புதல் பெறப்பட்டு பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது. இந்த பாலம் முழுமையாக கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில், சாலை விபத்துக்கள் நடைபெறுவது தடுக்கப்படுவதுடன், பொது மக்கள் சாலையை எளிதில் கடந்து செல்ல முடியும். இதே போல, ஹோப் கல்லூரி, நவ இந்தியா, கே. எம். சி. ஹெச், அண்ணா சிலை ஆகிய 4 பகுதிகளிலும் மின்விசை படிக்கட்டுடன் நடை மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசல்- விபத்து குறையும்

லட்சுமி ஆலை சந்திப்பு பகுதியில் முதலில் மின்விசை படிக்கட்டுகளுடன் கூடிய நடை மேம்பாலம் கட்டப்படும். இதைத் தொடர்ந்து, மற்ற பகுதிகளில் நடை மேம்பாலங்கள் கட்டப்படும். இதனால், இந்தப் பகுதிகளில் சாலை விபத்துக்கள், போக்குவரத்து நெரிசல் குறையும். இந்தப் பணிகளை மேற்கொள்வதற்காக கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், போக்குவரத்து துணை கமிஷனர் அசோக்குமார், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சமுத்திரக்கனி ஆகியோர் அந்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் படிக்க: தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. அப்போ பனிமூட்டம் இருக்குமா?

ஈரானில் அதிரடியாக உயர்ந்த சமையல் எண்ணெய்.. கடும் அவதியில் மக்கள்..
புஷ்பானா ஃபயர்! புஷ்பா 2 புரமோஷனுக்காக ஜப்பானில் அல்லு அர்ஜுன்
உரிமையாளரை காப்பாற்ற புலியுடன் போராடி உயிர் தியாகம் செய்த நாய்.. நெகிழ்ச்சி சம்பவம்..
3 நாகப் பாம்புகள் உடன் மருத்துவமனைக்கு வந்த நபர்.. பீகாரில் நடந்த பரபரப்பு சம்பவம்..