எழும்பூர் இல்ல.. இனி தாம்பரத்தில் இருந்து விரைவு ரயில்கள் இயக்கம்.. அலர்ட் பயணிகளே!

Tambaram Railway Station : எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதால், சோழன், சேது, பாண்டியன் உள்ளிட்ட 5 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஐந்து விரைவு ரயில்களும் 2025 செப்டம்பர் 10ஆம் தேதி முதல் தாம்பரத்தில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எழும்பூர் இல்ல.. இனி தாம்பரத்தில்  இருந்து  விரைவு ரயில்கள் இயக்கம்..  அலர்ட் பயணிகளே!

விரைவு ரயில்கள்

Updated On: 

05 Sep 2025 07:37 AM

 IST

சென்னை, செப்டம்பர் 05 : சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் காரணமாக, ஐந்து விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ஐந்து ரயில்களும் தாம்பரத்தில் இருந்து 2025 செப்டம்பர் 10ஆம் தேதி முதல் ஒருமாத காலத்திற்கு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பயணிகளின் முக்கிய போக்குவரத்து சேவையாக விரைவு ரயில்கள் இருந்து வருகின்றன. வெளி மாநிலங்கள், பல்வேறு மாவட்டங்களுக்கு செல்ல மக்கள் ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக பல மாதங்களுக்கு முன்பே டிக்கெட் புக் செய்து பயணித்து வருகின்றனர். ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர்.

குறிப்பாக, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும். இதற்கான ரயில்கள் எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. ஆனால், எழும்பூர் ரயில் நிலைத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளால் அவ்வப்போது விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் இருக்கும். அந்த வகையில், தற்போது எழும்பூர் ரயில் நிலைத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருவதால், 5 முக்கிய ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Also Read : தொடர் விடுமுறை.. ஆம்னி பேருந்துகளுக்கு பறந்த உத்தரவு.. போக்குவரத்து கழகம் நடவடிக்கை

விரைவு  ரயில் சேவையில் மாற்றம்


அதாவது, எழும்பூர் ரயில் நிலையத்தில் புதிய நடைமேம்பாலம், பயணிகளுக்கான வசதிகள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  ரூ.735 கோடியில் இந்த பணிகள் எழும்பூர் ரயில் நிலையத்தில் நடந்து வருகிறது. இதனால், எழும்பூரில் இருந்து செல்லும் விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Also Read : பூந்தமல்லி டூ சுங்குவார்சத்திரம் மெட்ரோ ரூட்… வந்தது கிரீன் சிக்னல்.. தமிழக அரசு நிதி ஒதுக்கீடு

2025 செப்டம்பர் 10ஆம் தேதி நவம்பர் 10ஆம் தேதி வரை 5 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, பாண்டியன், மலைகோட்டை ராக்போர்ட், சோழன், சேது, Boat Mail ஆகிய ஐந்து விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது, 2025 செப்டம்பர் 10ஆம் தேதி நவம்பர் 10ஆம் தேதி வரை இந்த ஐந்து விரைவு ரயில்களும் எழும்பூரில் இருந்து புறப்படாமல், தாம்பரத்தில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எழும்பூர் திருச்சி ராக்போர்ட் விரைவு ரயிலும், மதுரை – எழும்பூர் பாண்டியன் விரைவு ரயிலும், எழும்பூர் – திருச்சி சோழன் விரைவு ரயிலும், எழும்பூர் – ராமேஸ்வரம் சேது விரைவு ரயிலும், ராமேஸ்வரம் – எழும்பூர் விரைவு ரயிலும் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.