ஆங்கில புத்தாண்டுக்கு பொதுமக்கள் ஈஸியா ஊருக்கு செல்லலாம்…TNSTC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Tnstc Operate New Year Special Buses : ஆங்கில புத்தாண்டையொட்டி, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த பேருந்துகள் இன்று (டிசம்பர் 30) முதல் இயக்கப்படுகின்றன. இதற்காக சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் .

ஆங்கில புத்தாண்டுக்கு பொதுமக்கள் ஈஸியா ஊருக்கு செல்லலாம்...TNSTC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

புத்தாண்டுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Updated On: 

30 Dec 2025 10:49 AM

 IST

ஆங்கில புத்தாண்டையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு ஏராளமான பொதுமக்கள் படையெடுப்பார்கள். தற்போது, பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை என்பதால் ஏராளமான வெளியூர் வாசிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக திட்டமிட்டிருப்பார்கள். அதன்படி, இவர்களின் வசதிக்காக தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இது தொடர்பாக தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் மேலாண் இயக்குனர் மோகன் கூறியதாவது: ஆங்கில புத்தாண்டையொட்டி, இன்று செவ்வாய்க்கிழமை ( டிசம்பர் 30) முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை ஏராளமான பொதுமக்கள் சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வருவார்கள். அவர்களின் வசதிக்காக சுமார் 570 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

கிளாம்பாக்கத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு…

அதன்படி, வழக்கமாக இயக்கப்பட்டு வரும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இருந்து, திருவண்ணாமலை, கும்பகோணம், திருச்சி, மதுரை, நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சேலம், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு ஆகிய ஊர்களுக்கு இன்று சனிக்கிழமை 240 பேருந்துகளும், நாளை புதன்கிழமை (டிசம்பர் 31) 255 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

மேலும் படிக்க: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை எப்படி இருக்கும்? பனிமூட்டம் இருக்குமா? வானிலை சொல்வது என்ன?

கோயம்பேடு-மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து…

இதே போல, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து நாகப்பட்டினம், ஓசூர், வேளாங்கண்ணி, திருவண்ணாமலை, பெங்களூர் ஆகிய ஊர்களுக்கு இன்றும், நாளையும் ( டிசம்பர் 30, 31) என மொத்தமாக 55 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதே போல, மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து இன்று மற்றும் நாளை 20 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

போட்டிபோட்டு முன்பதிவு செய்த மக்கள்

இதே போல, சொந்த ஊர்களில் இருந்து பெங்களூர் மற்றும் சென்னை திரும்புவதற்கு வசதியாக பயணிகளின் தேவையின் அடிப்படையில் ஜனவரி 3- ஆம் தேதி (சனிக்கிழமை) 525 பேருந்துகளும், ஜனவரி 4- ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 765 பேருந்துகளும் இயக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளன. இந்த பேருந்துகளில் பயணிப்பதற்காக, நாளை புதன்கிழமை ( டிசம்பர் 31) 11,502 பயணிகளும், வியாழக்கிழமை ( ஜனவரி 1) 11,135 பயணிகளும், வெள்ளிக்கிழமை ( ஜனவரி 2) 7,501 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர்.

பேருந்து இயக்கத்தை கண்காணிக்க அலுவலர்கள்

இதே போல, சனிக்கிழமை ( ஜனவரி 3) 10,794 பயணிகளும், ஞாயிற்றுக்கிழமை ( ஜனவரி 4) 19, 216 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கத்தை கண்காணிப்பதற்காக அனைத்து பேருந்து நிலையங்களிலும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த சிறப்பு பேருந்துகளை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

மேலும் படிக்க: சென்னை – விழுப்புரம் வழித்தட ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் ரயில் பகுதி நேர ரத்து.. முழு விவரம்..

இன்று முதல் உயரும் ரயில் கட்டணம் - யாருக்கு பாதிப்பு?
டொரண்டோவில் நடந்த துப்பாக்கி சூட்டில் இந்திய மாணவர் பலி
இனி சம்பள அடிப்படையில் தேர்வு - அமெரிக்காவின் முடிவால் இந்தியர்களுக்கு அதிர்ச்சி
இனி ஆதாருடன் APAAR ஐடியும் கட்டாயம்.. CET தேர்வகர்களுக்கு மகாராஷ்டிரா அரசு உத்தரவு