Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

உருவாகுகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி – மீண்டும் புயல் உருவாகுமா?

Weather Alert : வங்கக்கடலின் மத்திய பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் எனவும் இது அடுத்த 24 மணி நேரத்தில்,  குறைந்த காற்றழுத்தமாக மண்டலமாக மாறும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

உருவாகுகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி – மீண்டும் புயல் உருவாகுமா?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 01 Nov 2025 21:00 PM IST

சென்னை, நவம்பர் 1 : மீண்டும் வங்கக்கடலில் புயல் உருவாகும் சாத்தியம் குறித்து வானிலை ஆய்வு மையம் நவம்பர் 1, 2025 அன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த வாரம் மோன்தா புயல் (Cyclone Montha) உருவாகி, தமிழ்நாடு மற்றும் ஆந்திரா, ஒடிசா ஆகிய பகுதிகளில் கனமழை (Heavy Rain) பெய்த நிலையில்,  தற்போது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளது. இதனையடுத்து நவம்பர் 4, 2025 வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கடந்த அக்டோபர் 16, 2025 அன்று வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், பல்வேறு இடங்களில் கனமை பெய்து வருகிறது. இந்த நிலையில் தான் தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி 

இந்நிலையில், தமிழ்நாட்டில் நவம்பர் 4, 2025 வரை மழை தொடரும் எனவும், சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சென்னை வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே தெரிவித்திருந்தது.  மேலும், சென்னை, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதையும் படிக்க : வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. மழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் கொடுத்த அப்டேட்!!

புயலாக மாறுமா?

சென்னை வானிலை ஆய்வு மையம் நவம்பர் 1, 2025 அன்று வெளியிட்ட சமீபத்திய அறிவிப்பில், வங்கக்கடலின் மத்திய பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும். இது அடுத்த 24 மணி நேரத்தில்,  குறைந்த காற்றழுத்தமாக மண்டலமாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அக்டோபர் 30, 2025 அன்று  அரேபிக் கடலின் கிழக்கு மத்திய பகுதியில் இருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அக்டோபர் 31, 2025 வரை அதே இடத்தில் நிலைத்திருந்தது என்றும், அது தற்போது மியான்மர் தெற்கு மற்றும் அந்தமான் கடல் வடபகுதி வரை மேல் வளிமண்டல சுழற்சி உருவாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த புதிய தாழ்வுப் பகுதி வங்கக்கடலில் வலுப்பெற்று முழுமையான புயலாக மாறும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். அடுத்த சில நாட்களில் இந்த மண்டலம் வலுப்பெற்று, தமிழ்நாடு மற்றும் ஆந்திரா கடலோர பகுதிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சாத்தியம் குறித்து
கண்காணிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : வலுவான புயல் உருவாக வாய்ப்பு.. அடுத்த 2 மாதமும் செம மழை இருக்கு!!

இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16, 2025 அன்று தொடங்கிய நிலையில், வங்கக் கடலில் மான்தா புயல் உருவானது. இந்த நிலையில தமிழ்நாட்டை பாதிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  ஆனால் பின்னர் திசை மாறி, கடந்த அக்டோபர் 28, 2025 அன்று இரவு,  ஆந்திரா மாநிலத்தின் மாசுலிபட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே, காக்கிநாடா அருகே கடற்கரையை கடந்தது. இந்த புயல் ஆந்திரா, மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களை கடுமையாக பாதித்த நிலையில் சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது.