ரமலான் பண்டிகை… தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை!

Ramadan Festival: தமிழகம் முழுவதும் இன்று இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். மசூதி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற தொழுகையில் இஸ்லாமியர்கள் பங்கேற்று தொழுகை நடத்தியதுடன், ஒருவருக்கொருவர் ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். தொழுகை நடைபெற்ற பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ரமலான் பண்டிகை... தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை!

இஸ்லாமியர்கள் ரமலான் சிறப்பு தொழுகை

Published: 

21 Mar 2026 10:46 AM

 IST

இஸ்லாமிய சமுதாயத்தில் மிக முக்கியமான பண்டிகைகள் ஒன்றாக ஈகைத் திருநாள் எனப்படும் ரம்ஜான் பண்டிகை தமிழகம் முழுவதும் இன்று சனிக்கிழமை ( மார்ச் 21 ) கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், சென்னை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, தென்காசி, மதுரை, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அதிகாலையில் ஏராளமான சிறுவர், சிறுமிகள் முதல் பெரியவர்களை இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து மசூதிகள் மற்றும் திறந்தவெளி ஈத்கா மைதானங்களில்  சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர், ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஒரு மாத காலம் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து, அதனை நிறைவு செய்யும் விதமாக ஷவ்வால் மாதத்தின் முதல் பிறை தென்பட்டதை தொடர்ந்து ரம்ஜான் பண்டிகை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதே போல, கோவை உக்கடம் பகுதியில் உள்ள இஸ்லாமிய மெட்ரிக் பள்ளியில் சிறப்பு ரம்ஜான் தொழுகை நடைபெற்றது.

கோவையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள்

இதில், சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இந்த சிறப்பு தொழுகையில் ஆண்கள் மற்றும் பெண்கள் தனித்தனியாக தொழுகை மேற்கொள்ளும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதில், அதிகாலையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் தொழுகையில் பங்கேற்றனர். இதை தொடர்ந்து, அனைவரும் ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். தமிழகம் முழுவதும் நடைபெற்ற ரம்ஜான் சிறப்பு தொழுகையையொட்டி, போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க: பறவை காய்ச்சல் பாதிப்பு.. பொதுமக்கள் அச்சப்படவேண்டாம் என சுகாதாரத்துறை அறிவுறுத்தல்..

9- ஆவது மாதமான ரமலான் மாதம்

இஸ்லாமியர்கள் மாதங்களில் 9- ஆவது மாதமான ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருக்கக்கூடிய இஸ்லாமியர்கள் அந்த ரமலான் மாதம் நிறைவடைந்து செவ்வாய் மாதம் தொடங்கக்கூடிய நாளை ரமலான் பண்டிகைகள் கொண்டாடி வருகின்றனர். இந்த மாதத்தில் தான் குர்ஆன் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டதாக நம்பிக்கை உள்ளது. அதன் அடிப்படையில் தான் ஆண்டுதோறும் ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு தொழுகை நிகழ்ச்சிக்கு பின்னர், ஏழை எளியோருக்கு உதவிகள் வழங்கப்பட்டது.

ரமலான் மாதத்தில் நரக வாசல் மூடி சொர்க்க வாசல் திறக்கும்

இந்த மாதமானது இறைவனை நெருங்கும் மாதமாகவும், நரக வாசல் மூடி, சொர்க்கவாசல் திறக்கும் மாதமாகவும், நன்மைகள் கிடைக்கும் மாதமாகவும் உள்ளது. இதேபோல கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் பள்ளிவாசலில் 1000- க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை ஈடுபட்டனர். இங்கும், அதிகாலையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிறப்பு தொழுகையில் பங்கேற்றதுடன், ஒருவருக்கொருவர் இனிப்புகள் பரிமாறி ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இதே போல, தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

மேலும் படிக்க: பக்தர்களே கவனிங்க… பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை ரத்து.. எப்போது தெரியுமா?

Follow Us
வங்கி லாக்கரில் வைக்கப்படும் நகைகளுக்கு பாதுகாப்பு இல்லையா? உண்மை என்ன?
ஹார்முஸ் கடல் பகுதியில் சிக்கிய இந்திய கேப்டன் பயணித்த கப்பல் - குடும்பத்தினர் கவலை
போர் பதற்றம் - வெறிச்சோடி காணப்படும் துபாய் நகரங்கள்
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு என்பது உண்மையா? மத்திய அரசு விளக்கம்