மது குடிக்க பணம் தரார தாய்.. மண்ணெண்ணெய் ஊற்றி உயிருடன் எரித்த மகன்.. அதிர்ச்சி சம்பவம்!

Man Sets Fire on Alive Mother | செங்கல்பட்டில் வேலையை இழந்த மகன் மது குடிக்க பணம் இல்லாமல் தாயிடம் கேட்டுள்ளார். தாய் பணம் தர மறுத்த நிலையில், ஆத்திரத்தில் மண்ணெண்ணெய் எடுத்து அவர் மீது ஊற்றி உயிருடன் எரித்துள்ளார்.

மது குடிக்க பணம் தரார தாய்.. மண்ணெண்ணெய் ஊற்றி உயிருடன் எரித்த மகன்.. அதிர்ச்சி சம்பவம்!

கொலை செய்யப்பட்ட தாய் மற்றும் கொலை செய்த மகன்

Published: 

19 Sep 2025 11:02 AM

 IST

செங்கல்பட்டு, செப்டம்பர் 19 : சென்னையை அடுத்த செங்கல்பட்டில் (Chengalpattu) மது குடிக்க பணம் தராததால் ஆத்திரமடைந்த மகன், தாயை மண்ணெண்ணெய் ஊற்றி உயிருடன் எரித்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுபோதைக்கு அடிமையான அந்த நபர் தனக்கு குடிக்க பணம் கிடைக்கவில்லை என்ற ஆத்திரத்தில் இந்த கொடூர செயலை செய்துள்ளார். உயிருடன் எரிக்கப்பட்ட அந்த பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மது குடிக்க பணம் தராததால் தாயை உயிருடன் எரித்த மகன்

செங்கல்பட்டு மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்தவர் எஸ்தர். 65 வயதாகும் இவருக்கு 45 வயதில் ராஜேந்திரன் என்ற ஒரு மகன் உள்ளார். அவர் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சர்க்கரை ஆலையில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் நிர்வாகத்தால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால் செங்கல்பட்டில் வசித்து வந்த தனது தாயாருடன் விக்டர் வசித்து வந்துள்ளார்.

இதையும் படிங்க : சிறுமியின் கழுத்தில் கத்திரிக்கோல் வைத்து மிரட்டல் – செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பரபரப்பு

மது குடிக்க தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு

விக்டர் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் அவரிடம் பணம் இல்லமால் போயுள்ளது. தினசரி மது குடிக்கும் பழக்கத்தை கொண்டிருந்த விக்டருக்கு கையில் பணம் இல்லாமல் போனதும் குடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போயுள்ளது. மது பழக்கத்திற்கு அடைமையாகி இருந்த விக்டருக்கு அது மிகுந்த சவாலை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மது குடிப்பதற்காக பணம் கேட்டு தனது தாயை தொந்தரவு செய்துள்ளார். ஆனால், எஸ்தர் பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விக்டர் வீட்டில் இருந்த மண்ணெண்யையை எடுத்து தனது தாயின் மீது ஊற்றி அவரை உயிருடன் எரித்துள்ளார்.

இதையும் படிங்க : கொலையில் முடிந்த கூல் லிப் சண்டை.. சைதாப்பேட்டையில் அதிர்ச்சி சம்பவம்!

எஸ்தரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடு வந்த நிலையில், அவர் முழுவதும் எரிந்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்துள்ளார். இந்த நிலையில், அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், செப்டம்பர் 17, 2025 அன்று அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக விக்டரை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் ஆஜர்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.