இரண்டு மாவட்டங்களை இணைக்கும் பாலம் – மதுரையில் புதிய பாலத்துக்கு வேலுநாச்சியார் பெயர் – தமிழக அரசு அறிவிப்பு
Madurai Flyover named Velu Nachiyar: மதுரை மாவட்டம் கே.கே.நகர் - மேலமடை சந்திப்பில் ரூ.150.28 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 7, 2025 அன்று திறந்து வைக்கிறார். இந்த பாலத்துக்கு வீரமங்கை வேலு நாச்சியாரின் பெயர் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின்
மதுரை, டிசம்பர் 6: மதுரையில் (Madurai) கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்திற்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் வைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) அறிவித்துள்ளார். மதுரையில் கே.கே.நகர் மற்றும் மேலமடை சந்திப்பில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 7, 2025 அன்று திறந்து வைக்கவிருக்கிறார். இந்த புதிய பாலம் மதுரை மக்கள் சந்தித்து வரும் போக்குவரத்து நெரிசலை பெருமளவில் குறைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த புதிய பாலத்திற்கு சுதந்திர போராட்ட வீராங்கணை வேலுநாச்சியார மேம்பாலம் என அழைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மேம்பாலம் ரூ.150 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
இரண்டு மாவட்டங்களை இணைக்கும் மேம்பாலம்
மதுரையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலம் மதுரை மற்றும் சிவகங்கை ஆகிய 2 மாவட்டங்களை இணைக்கும் வகையில், அண்ணா பேருந்து நிலைய சந்திப்பில் தொடங்கி, ஆவின் சந்திப்பு, மேலமடை சந்திப்பு வழியாக மதுரை சுற்றுச்சாலையில் இணைந்து சிவகங்கை மாவட்டம் பூபந்தியில் முடிவடைகிறது. இது இரண்டு மாவட்டங்களையும் இணைக்கும் பாலமாக உள்ளது.
இதையும் படிக்க : தமிழகத்தில் மதக் கலவரத்தை ஏற்படுத்த முடியாது…அமைச்சர் சேகர்பாபு!
மதுரை மேம்பாலம் குறித்து முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு
வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்: மதுரை மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுகிறது!
மதுரை – சிவகங்கை மாவட்டங்களை இணைக்கும் மேலமடை சந்திப்பு சாலை மேம்பாலத்தைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, நாளை நான் திறந்து வைக்கிறேன்.
இந்த முக்கிய மேம்பாலத்துக்கு, இம்மண்ணின் மக்களை… pic.twitter.com/Tizm453txd
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) December 6, 2025
இந்த சாலையில் பள்ளி, கல்லூரிகள் அதிகம் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருந்து வந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்த நிலையில் தற்போது 950 மீட்டள புதிய பாலம் பயணிகள் சிக்கலின்றி விரைவாக பயணம் செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள மேம்பாலம்
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மாவட்டங்களின் வளர்ச்சிக்கு உதவும் வகையில், மதுரை மாவட்டம் கே.கே.நகர் – மேலமடை சந்திப்பில் ரூ.150.28 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 7, 2025 அன்று திறந்து வைக்கிறார். இந்த மேம்பாலத்திற்கு ‘வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்’ என்று பெயர் சூட்டப்படும் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க : புதுச்சேரியில் டிச.9ல் தவெக பொதுக்கூட்டம்.. 5000 பேருக்கு அனுமதி.. நோ ரோடு ஷோ!!
முதல்வர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 7, 2025 அன்று பாலத்தை திறந்து வைக்கவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, புதிதாக திறக்கப்படவுள்ள மேம்பாலம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மேலும் பாலம் முழுவதும் விதவிதமான ஓவியங்கள் வரையப்பட்டுள்ள நிலையில், அது பொது மக்களின் கவனத்தையும் ஈரத்துள்ளது.