கடும் குளிர் நிலவும் அதிகாலை நேரம், மேற்கு வங்கத்தின் நபத்வீப் நகரில், ரயில் பணியாளர்கள் வசிக்கும் ஒரு காலனியின் பின்புறம், குழந்தை ஒன்று காயங்களுடன், எந்தத் துணியும் இல்லாமல், குளிர் தரையில் தனியாக கிடந்தது. ஆனால் அந்த குழந்தை, உண்மையில் தனியாக இல்லை. நம்ப முடியாத ஒரு அதிசயம் அங்கே நடந்தது.