இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி, டிசம்பர் 3ஆம் தேதி நடைபெற்ற இந்தியா - தென் ஆப்ரிக்கா ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் தன்னுடைய இரண்டாவது தொடர்ச்சியான சதத்தை பதிவு செய்தார். இது அவருடைய 53வது ஒருநாள் சதம் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் 84வது சதம் ஆகும். இது இந்தியர்களை மட்டுமல்ல, அவருடைய மனைவியும், நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவையும் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதுகுறித்து அனுஷ்கா, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ராய்ப்பூர் மைதானத்தில், சதம் அடித்த பின்னர் விராட் கொண்டாடிய தருணத்தின் புகைப்படத்தை பகிர்ந்தார். அந்தப் படத்தில், நீல ஜெர்சியில், ஒரு கையில் பேட்டை உயர்த்தியபடியும், மறு கையில் ஹெல்மெட்டை பிடித்துக்கொண்டும் விராட் நிற்கிறார்.