Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இ ரேஷன் கார்டு.. அட்டைதாரரின் புகைப்படத்திற்கு பதில் இருந்த மதுபாட்டில். குடும்பத்தினர் அதிர்ச்ச்சி!

Madurai e-Ration Card Error | மதுரையை சேர்ந்த நபர் ஒருவர் தனது இ ரேஷன் கார்டை பதிவிறக்கம் செய்துள்ளார். ஆனால், அந்த ரேஷன் கார்டில் தனது மனைவின் புகைப்படத்திற்கு பதில் மதுபாட்டில் புகைப்படம் இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் புகார் அளித்துள்ளார்.

இ ரேஷன் கார்டு.. அட்டைதாரரின் புகைப்படத்திற்கு பதில் இருந்த மதுபாட்டில். குடும்பத்தினர் அதிர்ச்ச்சி!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 27 Aug 2025 20:30 PM

மதுரை, ஆகஸ்ட் 27 : மதுரையில் (Madurai)ரேஷன் கார்டு (e Ration Card) பதிவிறக்கம் செய்த குடும்பம் அதில் மது பாட்டிலின் புகைப்படம் இருந்ததை கண்டு கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. குடும்ப அட்டை வைத்திருக்கும் நபரின் புகைப்படம் இருக்க வேண்டிய இடத்தில் மதுபாட்டிலின் புகைப்படம் இருந்ததால் அதிர்ச்சியடைந்த அந்த குடும்பம் அது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளது. இது தொடர்பாக  உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்துள்ள நிலையில், அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இ ரேஷன் கார்டில் மதுபாட்டில் புகைப்படம் – ஷாக் ஆன குடும்பம்

மதுரை மாவட்டம், சின்னபூலாம்பட்டியை சேர்ந்தவர் தங்கவேலு. 56 வயதாகும் இவரது மகளுக்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதன் காரணமாக மகளின் பெயரை ரேஷன் கார்டில் இருந்து நீக்கிவிட்டு, தனது மனைவியை பயனாளராக மாற்றியுள்ளார். தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பயன்பெற அவர் இவ்வாறு செய்துள்ளார். அதற்கு விண்ணப்பம் செய்ய அவர் முயற்சி செய்தபோது, இ ரேஷன் கார்டை பதிவிறக்கம் செய்ய கோரப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் இ ரேஷன் கார்டை பதிவிறக்கம் செய்துள்ளார். ஆனால், அந்த ரேஷன் கார்டில் அட்டை வைத்திருக்கும் நபரின் புகைப்படம் இருப்பதற்கு பதிலாக மதுபாட்டில் புகைப்படம் இருந்ததை கண்டு கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்.

இதையும் படிங்க : இதயம் வரை சென்று குத்திய ஊசி.. நாகையில் பெண்ணுக்கு நேர்ந்த கதி!

இ ரேஷன் கார்டில் மட்டும் இருக்கும் மதுபாட்டில் புகைப்படம்

அது குறித்து கூறியுள்ள குடும்பத்தினர் நாங்கள் ரேஷன் கார்டை பார்த்தோம். அதில் அத்தகைய மதுபாட்டில் புகைப்படம் இல்லை. ஆனால் இ ரேஷன் கார்டை பதிவிறக்கம் செய்து பார்த்தபோது அதில் மதுபாட்டில் புகைப்படம் இடம்பெற்றுள்ளது என்று கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக உள்ளூர் அதிகாரிகள், குடிமைப் பொருள் வழங்கல் துறை உறுப்பினர்களுடன் சேர்ந்து இ ரேஷன் அட்டையின் விவரங்களை அனுகியுள்ளனர். அப்போது அந்த இ ரேஷன் அட்டையில் 2018 ஆம் ஆண்டு மதுபாட்டில் புகைப்படம் இணைகப்பட்டுள்ளது அவர்களுக்கு தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க : Gummidipoondi School Incident: தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறிய நச்சுப் புகை.. துடித்துப்போன பள்ளி மாணவிகள்.. என்ன நடந்தது..?

இது குறித்து கூறியுள்ள துறை அதிகாரிகள், இத்தகைய சிக்கல்களை இதுவரை எதிர்க்கொண்டது இல்லை என்றும், விரைவில் இந்த தவறு சரிசெய்யப்படும் என்றும் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.