பயணிகளுக்கு குட் நியூஸ்.. மதுரை – பெங்களூரு வந்தே பாரத் ரயிலில் புதிய மாற்றம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு

Madurai Bengaluru Vande Bharat Train : சேலம் வழியாக செல்லும் மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயிலில் 2025 செப்டம்பர் 11ஆம் தேதி முதல் 16 பெட்டிகளுடன் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுவரை 8 பெட்கள் மட்டுமே இருந்த நிலையில், பயணிகளின் வருகை அதிகரிப்பை தொடர்ந்து, இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பயணிகளுக்கு குட் நியூஸ்.. மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயிலில் புதிய மாற்றம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு

வந்தே பாரத் ரயில்கள்

Updated On: 

10 Sep 2025 13:43 PM

 IST

சென்னை,  செப்டம்பர் 10 : மதுரை – பெங்களூரு வந்தே பாரத் ரயிலில் (Madurai Bengaluru Vande Bharat) 2025 செப்டம்பர் 11ஆம் தேதி முதல் 16 பெட்டிகளுடன் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது பயணிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய ரயில்வே துறையை நவீனப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்காக பல்வேறு ரயில்களையும் மத்திய அரசு இயக்கி வருகிறது. அந்த வகையில், நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்கள் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. விரைவாக செல்வதால் பயணிகள் இந்த ரயிலை பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றனர்.  தமிழகத்தைச் பொறுத்தவரை சென்னை – நெல்லை, கோவை – சென்னை, கோவை – பெங்களூரு, பெங்களூரு – மதுரை உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக, சேலம் வழியாக பெங்களூரு – மதுரை வந்தே பாரத் ரயிலில் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர்.

மதுரையில் இருந்து பெங்களூருவுக்கு 10 முதல் 12 மணி நேரம் ஆகும். ஆனால், வந்தே பாரத் ரயிலில் சென்றார். 7 மணி 45 நிமிடங்களில் பெங்களூரு சென்றடையலாம். இதில், சேர் காரில் 1,585 ரூபாயும், எக்ஸிக்யூடிவ் சேர் காரில் ரூ.2875-ம் வசூலிக்கப்பட்டு வருகிறது. பொருளாதார ரீதியாக பார்த்தால், உயர் நடுத்தர வர்க்க மக்களே இதில் பயணிக்க முடியும். இருப்பினும், வந்தே பாரத் ரயிலில் பயணிக்க பொதுமக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, பண்டிகை காலம், தொடர் விடுமுறை நாட்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

Also Read : பரோட்டாவால் வந்த வினை.. இளைஞர் கொடூர கொலை.. தேனியில் பயங்கரம்!

இந்த ரயில் காலை 5.15 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு, மதியம் 1.00 மணியளவில் பெங்களூரு சென்றடைகிறது. இந்த ரயில் மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. இந்த நிலையில், மதுரை பெங்களூரு வந்தே பாரத் ரயில் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மதுரை – பெங்களூரு வந்தே பாரத் ரயிலில் புதிய மாற்றம்


அதன்படி, மதுரை – பெங்களூரு வந்தே பாரத் ரயிலில் 2025 செப்டம்பர் 11ஆம் தேதி முதல் 16 பெட்டிகளுடன் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தற்போது 8 பெட்டிகள் உடன் இந்த ரயில் இயக்கப்படுகிறது. அதில் 7 ஏசி சேர் கார்கள், ஒரு எக்ஸிக்யூடிவ் சேர் கார் உள்ளது. இது போதுமானதாக இல்லை என பயணிகள் கூறி வந்தனர்.

Also Read : காதலனுடன் ஹோட்டலில் இருந்த பெண்.. இறுதியில் எடுத்த விபரீத முடிவு.. சென்னையில் அதிர்ச்சி

இதனை கருத்தி கொண்ட ஐஆர்சிடிசி மதுரை பெங்களூரு வந்தே பாரத் ரயிலில் 16 பெட்டிகளாக மாற்றுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன் மூலம், 2025 செப்டம்பர் 11ஆம் தேதியான நாளை முதல் 16 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வந்தே பாரத் ரயிலில் கூடுதல் இருக்கைகள் இருக்கும். ஏசி சேர் காரில் 863 டிக்கெட்டுகளும், எக்ஸிக்யூடிவ் சேர் காரில் 74 டிக்கெட்டுகள் இருக்கும் என சொல்லப்படுகிறது.