குடியரசு தின விடுமுறை எதிரொலி.. ஒரே நாளில் ரூ.220 கோடிக்கு மது விற்பனை!

220 Crore Rupees Liquor Sold On January 25, 2026 | குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 26, 2026 அன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், ஜனவரி 25, 2026 அன்றே டாஸ்மாக் கடைகளில் குவிந்த மது பிரியர்கள் ரூ.220 கோடிக்கு மது வாங்கியுள்ளனர்.

குடியரசு தின விடுமுறை எதிரொலி.. ஒரே நாளில் ரூ.220 கோடிக்கு மது விற்பனை!

கோப்பு புகைப்படம்

Updated On: 

27 Jan 2026 07:32 AM

 IST

சென்னை, ஜனவரி 27 : 2026 ஆம் ஆண்டின் குடியரசு தின (Republic Day) விடுமுறையை முன்னிட்டு அதற்கு முந்தைய நாள் டாஸ்மாக்கில் வியாபாரம் களைக்கட்டியது. அதாவது ஜனவரி 25, 2026 அன்று மட்டும் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரூ.220 கோடியே 75 லட்சத்துக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக பொங்கல், தீபாவளி பண்டிகைகளின் போது டாஸ்மாக் வியாபாரம் களைக்கட்டும். ஆனால், தற்போது குடியரசு தின விடுமுறை முன்னிட்டு அமோக விற்பனை நடைபெற்றுள்ளது.

குடியரசு தினத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

சில முக்கிய அரசு விடுமுறைகள் மற்றும் மத பண்டிகைகளின் போது டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். அந்த வகையில், ஜனவரி 26, 2026 இந்தியா தனது 77வது குடியரசு தின விழாவை கொண்டாடிய நிலையில், அன்றைய தினம் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதன் காரணமாக மது பிரியர்கள் ஒரு நாளுக்கு முன்னதாகவே டாஸ்மாக் கடைகளை சூழ ஆரம்பித்துவிட்டனர்.

இதையும் படிங்கா : ரஃபேல், மிக்-29, எஸ்யூ-30 விமானங்களுடன் விமானப்படையின் ‘சிந்தூர் அணிவகுப்பு’.. வீடியோ!

ஒரே நாளில் ரூ.220 கோடியே 75 லட்சத்துக்கு மது விற்பனை

குடியரசு தின விடுமுறையை முன்னிட்டு ஜனவரி 25, 2026 அன்றே டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்களின் கூட்டம் அலைமோதிய நிலையில், அன்றைய தினம் மட்டும் சுமார் ரூ.220 கோடியே 75 லட்சத்துக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதில் மனமகிழ் மன்றங்கள் மூலம் சுமார் ரூ.5 கோடியே 43 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : இந்தியாவில் என்ஜீனியர்களுக்கு குறைந்த சம்பளம்…மகேஷ்வர் பெரி விடுத்த எச்சரிக்கை!

பொங்கல் பண்டிகையின் போது ரூ.839 கோடிக்கு மது விற்பனை

இதேபோல இந்த ஆண்டில் அதிகபட்சமாக பொங்கல் பண்டிகையின் போது டாஸ்மாக் வியாபாரம் களைக்கட்டியது. பொங்கலின் போது சுமார் ரூ.839 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து ஜனவரி 25, 2026 அன்று அதிகப்படியாக ரூ.220 கோடியே 75 லட்சத்துக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

லாபத்தை ஈட்டிய சிவகார்த்திகேயனின் பராசக்தி.. எவ்வளவு கோடி தெரியுமா?
மணாலி மற்றும் சிம்லா பகுதிகளில் கடும் பனிப்பொழிவு - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
குடியரசு தின விழா - ஏஐ கண்ணாடிகளை பயன்படுத்தும் டெல்லி காவல்துறை
இந்தியாவில் சர்க்கரை நோயால் உடல்நலம் மட்டுமல்ல பொருளாதார பாதிப்பு