வண்டலூர் பூங்காவில் சிங்கம் மாயம்.. 2 நாளாக தேடி அலையும் ஊழியர்கள். எங்கே சென்றது?
Lion Missing In Vandalur Zoo : வண்டலூர் பூங்காவில் சிங்கம் மாயமாகி உள்ளது. லயன் சபாரிக்காக காட்டிற்குள் விடப்பட்ட சிங்கம் காணாமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, வனத்துறை அதிகாரிகள் சிங்கத்தை தேடி வருகின்றனர். சிங்கம் காட்டிற்குள் தான் இருப்பதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

வண்டலூர் பூங்கா
சென்னை, அக்டோபர் 05 : வண்டலூர் பூங்காவில் ஆண் சிங்கம் திடீரென மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக பூங்கா ஊழியர்கள் தேடி அலைந்தும் சிங்கம் கிடைக்கவில்லை. இதனால் சிங்கத்தை தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சென்னை அடுத்த வண்டலூரில் உயிரியல் பூங்கா ஏங்கி வருகிறது. தெற்காசியாவில் மிகப்பெரிய பூங்காக்களில் ஒன்றாக வண்டலூர் பூங்கா உள்ளது. வண்டலூர் பூங்காவில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் விலங்குகள் உள்ளன. வண்டலூர் பூங்காவில் உள்ள விலங்குகள் பறவைகளை அங்குள்ள ஊழியர்கள் பராமரித்து வருகின்றனர். வண்டலூர் பூங்காவை காண தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். சென்னையின் சுற்றுலா தளங்களில் ஒன்றாகவும் வண்டலூர் பூங்கா இருப்பதால் தினமும் மக்களின் கூட்டம் அதிகமாகவே காணப்படும்.
குறிப்பாக வார இறுதி நாட்கள், பண்டிகை காலங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இதற்காக மக்களுக்காக பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றுதான் லயன் சபாரி வசதி. மக்களை ஜீப் அல்லது வேன்களில் அழைத்துச் சென்ற காடுகளில் உலாவும் சிங்கம் போன்ற விலங்குகளை மக்கள் நேரடியாக பார்க்க முடியும். லயன் சவாரியில் மொத்தம் ஆறு சிங்கங்கள் இருக்கின்றன. அதை சுழற்சி முறையில் இரண்டு சிங்கங்கள் மட்டுமே காட்டிற்குள் விட அனுமதிக்கப்படுகிறது. மீதி இரண்டு சிங்கங்களும் கூண்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும்.
Also Read : இனி 40 வயது வரை கல்லூரிகளில் சேரலாம்.. ரூல்ஸை மாற்றிய தமிழக அரசு
வண்டலூர் பூங்காவில் சிங்கம் மாயம்
லயன் சபாரிக்காக நேற்று புதிதாக வந்த ஆண் சிங்கம் ஒன்று காட்டுப் பகுதிக்குள் விடப்பட்டது. பொதுவாகவே காட்டிற்குள் விடப்படும் சிங்கம் தாமாகவே கூண்டிற்குள் வந்துவிடுமாம். ஆனால் இந்த சிங்கம் மட்டும் இரவு நேரம் ஆகும் வரையும் கூண்டிற்குள் வராமல் இருந்துள்ளதாக தெரிகிறது. அந்த சிங்கம் புதிதாக கொண்டுவரப்பட்டது என்பதால் அது கூண்டிற்கு வராமல் இருந்துள்ளது. இதனை எடுத்து சிங்கம் மாயமானது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து லயன் சபாரி முழுவதும் வனத்துறை அதிகாரிகள் சிங்கத்தை தேடி வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாகவே வனத்துறை அதிகாரிகள் சிங்கத்தை தேடி வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக மாய்மான சங்கத்தை தேடி வந்த நிலையில் தற்போதைய இருப்பிடத்தை அதிகாரிக்கு கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Also Read : லீவு முடிந்து சென்னை போறீங்களா? சிறப்பு ரயில்கள் இயக்கம்.. மிஸ் பண்ணாதீங்க
மாயமான சிங்கம் லயன் சபாரி பகுதிக்குள் தான் இருப்பதாகவும் வெளியே எங்கும் செலவிலே என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால் விரைவில் சிங்கத்தை கண்டுபிடித்து கூண்டில் அடைப்போம் என்று கூறுகின்றனர். சிங்கம் மாயமானதால் நேற்றைய தினம் சபாரி திறக்கப்படவில்லை. வண்டலூர் பூங்காவிற்கு வந்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.