தன் மகளை விட அதிக மதிப்பெண்…. எலி பேஸ்ட் வைத்து சிறுவனை கொலை செய்த தாய்க்கு ஆயுள் தண்டனை
Court Verdict: தன் மகளை விட அதிக மதிப்பெண் பெற்ற சிறுவனை கொலை செய்த தாயின் செயல் தமிழகத்தையே உலுக்கியது. கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் காரைக்கால் முதன்மை நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

கைதான சகாயராணி
காரைக்கால், அக்டோபர் 23 : தன் மகள் தான் முதல் மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று ஒரு தாய், சிறுவனை எலிபேஸ்ட் வைத்து கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவம் கடந்த 2022 அன்று நடைபெற்றது. தன் மகள் தான் முதல் மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற ஒரு தாயின் எண்ணம், பொறாமையாக மாறி, ஒரு சிறுவனின் உயிரை பறிக்கும் அளவுக்கு சென்றிருக்கிறது. யூனியன் பிரதேசமான புதுச்சேரியின் (Puducherry) காரைக்காலில் நடந்த இந்த சம்பவத்தில், கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்றம் (Court) தீர்ப்பு வழங்கியுள்ளது. சிறுவனை கொலை செய்த சகாயராணிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
சம்பவத்தின் பின்னணி
காரைக்காலில் நேரு நகரில் ஹௌசிங் போர்டு பகுதியில் வசித்து வந்தவர் ராஜேந்திரன். அவர் ஒரு ரேஷன் கடையில் பணியாற்றி வந்துள்ளார். அவரது மனைவி மாலதி. இவர்களுக்கு பாலமணிகண்டன் என்ற மகன் உள்ளார். அவர், காரைக்காலில் உள்ள பாரதி சாலை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தார். பால மணிகண்டன் படிப்பிலும், கலை நிகழ்ச்சிகளிலும் சிறப்பாக பங்கேற்று வந்தார்.
இதையும் படிக்க : பெரும் கடன்.. மனைவி, மகன்கள் கொலை.. தொழிலதிபர் தற்கொலை
இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு பள்ளியில் நடந்த ஆண்டு விழாவுக்கான பயிற்சியில் கலந்துகொண்டு பாலமணிகண்டன் வீடு திரும்பியிருக்கிறார். திடீரென அவர் வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், உடனடியாக அவரை காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கின்றனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேேயே பாலமணிகண்டனின் உயிர் பிரிந்தது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சிசிடிவி மூலம் வெளியான உண்மை
பாலமணிகண்டனின் திடீர் மரணம் சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில், உறவினர்கள் பள்ளிக்கு சென்று விசாரித்தனர். அப்போது சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சகாயராணி என்பவர், பாலமணிகண்டனுக்கு பொருள் ஒன்றை கொடுப்பது பதிவாகியுள்ளது. இதனையடுத்து சந்தேகத்தின் பெயரில் சகாயராணியை காவல்துறையினர் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், சகாயராணி ஆரம்பத்தில் வலிநிவாரண மாத்திரை கொடுத்தேன் என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில் மருத்துவ அறிக்கை வெளியான நிலையில் அவரது உடலில் எலி மருந்து கொடுக்கப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.
இதையும் படிக்க : தலை தீபாவளி முடிந்து வேலைக்கு சென்ற கணவன்.. மனைவி தற்கொலை
இதனையடுத்து சகாயராணி உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறார். அதில், தனது மகள் அருள்மேரியை விட பாலமணிகண்டன் அனைத்து பாடங்களிலும் முதல் மதிப்பெண் பெற்றிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த சகாயராணி, கடையில் இருந்து எலிமருந்து வாங்கி அதை கூல்டிரிங்க்ஸில் கலந்து பாலமணிகண்டனுக்கு கொடுத்திருக்கிறார். தன் மகளை விட அதிக மதிப்பெண் பெற்ற சிறுவனை கொலை செய்த தாயின் செயல் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சகாயராணிக்கு ஆயுள் தண்டனை
இந்த வழக்கு காரைக்கால் முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நடைபெற்று வந்த நிலையில், அக்டோபர் 23, 2025 அன்று விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு சாட்சியங்கள், காவல்துறை சமர்பித்த ஆதாரங்களை ஆய்வு செய்த பிறகு சகாயராணி குற்றம் செய்தது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது. இதனையடுத்து சகாயராணிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.20,000 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.