கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்.. புது ட்ரோன் காட்சி.. ஜனநாயகன் பட சீனுக்காக பிளானா?
karur stempede new drone scenes: சிபிஐ அதிகாரிகளின் முதற்கட்ட விசாரணையில், பேரணியின் போது விஜய்யின் வாகனம் காவல்துறையினரால் ஒதுக்கப்பட்ட இறுதி நிறுத்தப் புள்ளியை தாண்டி முன்னேறிச் சென்றது கண்டறியப்பட்டுள்ளது. திட்டமிடப்பட்ட வரைபடத்தின்படி, வாகனம் கூட்டத்திற்கு குறைந்தது 20 மீட்டர் முன்பாகவே நிறுத்தப்பட்டிருக்க வேண்டும்.

கரூரில் விஜய் பிரசாரம் (கோப்புப் புகைப்படம்)
சென்னை, மார்ச் 19: கடந்த செப்.27 2025ல் கரூரில் நடந்த துயரச் சம்பவத்தில் குழந்தைகள் உட்பட 41 அப்பாவி உயிர்கள் பறிபோனது ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியது. விஜய்யின் அரசியல் வருகை தமிழக அரசியலில் பெரும் எழுச்சியாகப் பார்க்கப்பட்ட சமயத்தில், முறையான திட்டமிடல் இல்லாததால் அவரது கரூர் சுற்றுப்பயணம் மரணக் களமாக மாறியது. தற்போது இந்த விவகாரத்தில் சிபிஐ (CBI) விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், “ஜனநாயகன்” படப்பிடிப்புக்காக விதிகள் மீறப்பட்டதாகவும், ஆதாரங்கள் மறைக்கப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதோடு, சில ட்ரோன் காட்சிகளும் வெளியாகி இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள மர்மத்தை அதிகப்படுத்தியுள்ளன.
இதையும் படிக்க: Tamil Nadu Election: தமிழகத்தில் உறுதியானது நான்கு முனை போட்டி.. சூடுபிடிக்கும் அரசியல் களம்!!
3வது முறையாக விஜய்யிடம் சிபிஐ விசாரணை:
கரூர் கூட்டநெரிசல் விவகாரம் தொடர்பாக விஜய்யிடம் ஏற்கனவே 2 முறை சிபிஐ விசாரணை நடத்திய நிலையில் 3வது முறையாக கடந்த 15ம் தேதி விஜய் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். 7 மணிநேரம் வரை விஜயிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது கரூர் பிரசார கூட்டம் திட்டமிடப்பட்டது எப்படி? தாமதமாக வந்தது? உள்பட பல்வேறு விஷயங்கள் பற்றி சிபிஐ அதிகாரிகள் கேள்விகள் எழுப்பினர். இந்நிலையில் தான் கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சிபிஐ முக்கிய விஷயம் பற்றிய விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது.
எல்லையைத் தாண்டிய வாகனம்:
அந்த வகையில் தற்போது கரூர் பிரசார கூட்டத்தில் விஜய் தனது பிரசார வாகனத்தை அனுமதிக்கப்பட்ட இடத்தில் நிறுத்தவில்லை என்று தெரியவந்துள்ளது. பொதுவாக பெரிய பெரிய பிரபலங்கள் பிரசாரங்கள் செய்யும்போது எந்த இடத்தில் பிரசார வாகனங்கள் நிறுத்த வேண்டும். எப்படி நிறுத்த வேண்டும் என்பது போன்ற விஷயங்கள் போலீசாரால் வழங்கப்படும். ஆனால் கரூரில் போலீசார் குறித்த இடத்தை தாண்டி விஜயின் பிரசார வாகனம் கடந்து சென்று நின்றுள்ளது. இதனை தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
திடீர் நெரிசலுக்கு முக்கியக் காரணம்:
பாக்கவே கொடூரமா இருக்கு 💔 pic.twitter.com/6lqcFSDhYJ
— Dr.Aravind Raja (@AravindRajaOff) March 18, 2026
சிபிஐ அதிகாரிகளின் முதற்கட்ட விசாரணையில், பேரணியின் போது விஜய்யின் வாகனம் காவல்துறையினரால் ஒதுக்கப்பட்ட இறுதி நிறுத்தப் புள்ளியை (Designated Stopping Point) தாண்டி முன்னேறிச் சென்றது கண்டறியப்பட்டுள்ளது. திட்டமிடப்பட்ட வரைபடத்தின்படி, வாகனம் கூட்டத்திற்கு குறைந்தது 20 மீட்டர் முன்பாகவே நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அந்த எல்லையை மீறி வாகனம் கூட்டத்தின் மையப்பகுதிக்குள் நுழைந்ததே, அங்கு நிலவிய தள்ளுமுள்ளு மற்றும் திடீர் நெரிசலுக்கு முக்கியக் காரணமாக இருந்ததாக சிபிஐ சந்தேகிக்கிறது.
ட்ரோன் காட்சிகளை அழிக்க முயிற்சி?:
கரூர் சம்பவத்தின் போது விஜய்யின் கட்சி சார்பில் ட்ரோன் மூலம் எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகளை அழிக்க முயற்சிகள் நடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலான அந்த வீடியோ பதிவுகள் மற்றும் விஜய்யின் வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமரா பதிவுகளை அழிக்க முயற்சி நடந்துள்ளது. எனினும், சிபிஐ அதிகாரிகள் அந்த முக்கிய வீடியோ ஆதாரங்களை தற்போது மீட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
விஜய்க்கு தெரிந்தே நடந்ததா?:
கூட்ட நெரிசல் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று விஜய் கூறி வந்த நிலையில், மீட்கப்பட்ட வீடியோ பதிவுகள் அதற்கு மாறான உண்மையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவர் வாகனத்தின் மேலே நின்று கூட்டத்தைப் பார்த்த போதே, அங்குள்ள நிலைமை மற்றும் நெரிசலின் தீவிரம் அவருக்கு நன்கு தெரிந்திருப்பது வீடியோவில் உறுதியாகியுள்ளது. இதனால், விஜய்யின் விளக்கத்தை ஏற்க சிபிஐ மறுத்துவிட்டது.
இதையும் படிக்க: சட்டமன்ற தேர்தல் 2026: திரள் நிதி மூலம் உதவ வேண்டும் – சீமான் வெளியிட்ட வீடியோ
‘ஜனநாயகன்’ படப்பிடிப்பு பின்னணி:
இந்த விசாரணையில் மற்றொரு முக்கிய தகவலாக, நாமக்கல் மற்றும் கரூர் பகுதிகளில் “ஜனநாயகன்” திரைப்படத்திற்காக விஜய்யின் குழுவினர் காட்சிகளைப் படமாக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த படப்பிடிப்புக்காகவே நிர்ணயிக்கப்பட்ட எல்லையைத் தாண்டி வாகனம் இயக்கப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தமிழக அரசியல் மற்றும் திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.