கரூர் வழக்கு – சிசிடிவி வீடியோ ஆதாரங்களை சிபிஐயிடம் ஒப்படைத்த தவெக

Karur Stampede Case : கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக தவெக தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக விஜய் பயணித்த வாகனத்தின் சிசிடிவி காட்சிகளை தவெக தற்போது சிபிஐக்கு விசாரணைக்காக வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

கரூர் வழக்கு - சிசிடிவி வீடியோ ஆதாரங்களை சிபிஐயிடம் ஒப்படைத்த தவெக

விஜய்

Published: 

08 Nov 2025 16:31 PM

 IST

சென்னை, நவம்பர் 8 :  கரூரில் (Karur) நடந்த கூட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சிசிடிவி வீடியோ ஆதாரங்கள் சிபிஐ (CBI) அதிகாரிகளிடம் ஒப்படைத்தகா தகவல் வெளியாகியுள்ளது.  முன்னதாக, இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள், சம்பவம் நடந்த இடம், விஜய் பயணித்த வாகனம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த சிசிடிவி பதிவுகளை வழங்குமாறு தவெக நிர்வாகத்துக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். கரூர் சம்பவத்துக்கு காரணங்களை வெளிக்கொணர்வதில் சிசிடிவி காட்சிகள் முக்கிய ஆதாரமாக இருக்கும் என கருதப்படுகிறது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

சிபிஐயிடம் சிசிடிவி வீடியோக்களை கொடுத்த தவெக

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சிபிஐ தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விஜய் பயணித்த வாகனத்தின் டிரைவர், கட்சி நிர்வாகிகள், விஜய்க்கு பாதுகாப்பு அளித்த பவுன்சர்கள் உள்ளிட்டோரிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதையும் படிக்க : எத்தனை முதலமைச்சர்கள் வந்தாலும் அதிமுக – பாஜக கூட்டணியை பிரிக்க முடியாது – நயினார் நாகேந்திரன்

அதன் ஒரு பகுதியாக விஜய் பயணித்த வாகனத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தவற்காக சிபிஐ தரப்பில் தவெக நிர்வாகத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக சிசிடிவி காட்சிகளை தவெக நிர்வாகம் சிபிஐக்கு வழங்கியுள்ளது.  மேலும் தவெக பரப்புரையின்போது ஆம்புலன்ஸ்கள் வந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது அது தொடர்பாகவும் சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். குறிப்பாக கரூரில் ஆம்புலன்ஸ் டிரைவர்களிடமும் இரண்டு நாட்களுக்கு மேலாக விசாரணை நடைபெற்றது.

தொண்டர் படையை உருவாக்கிய விஜய்

மற்றொரு பக்கம் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்து ஒரு மாதம் கட்சி செயல்பாடுகள் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது கட்சி தனது செயல்பாடுகளை தீவிரமாக்கியிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக இனி தேர்தல் பரப்புரையின் போது கூட்டத்தை கட்டுப்படுத்த தொகுதி தோறும் தொண்டர் படையை விஜய் உருவாக்கியிருக்கிறார்.

இதையும் படிக்க : ஜெயலலிதாவிடம் பொய் சொன்னார்… 2011-ல் செய்த தவறுக்காக இப்போது அனுபவிக்கிறார்… ஓபிஎஸ் மீது வைகோ குற்றச்சாட்டு

இந்த படையில் ஒரு ஆண், ஒரு பெண் என ஒவ்வொரு தொகுதியிலும் இரண்டு பேர் கள நிலவரம் குறித்து கட்சியின் நிர்வாகத்துக்கு தகவல் அளிப்பர். அதன் பிறகே பரப்புரை திட்டமிடப்படும் என கூறப்பட்டுள்ளது.  இந்நிலையில், மீனவர்கள் பிரச்னையில் நிரந்தர தீர்வுகாண வலியுறுத்தியும், இந்த விவகாரத்தில் மத்திய, மாநில
அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கண்டித்தும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நாகப்பட்டினத்தில் தவெக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.