அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி தொடக்கம்…இறுதி கட்டத்தில் பணிகள்…கார்,டிராக்டர் உள்ளிட்ட பரிசுகள்!

Madurai Jallikattu Competition: மதுரை மாவட்டத்தில் அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து, அலங்காநல்லூர், பாலமேட்டில் ஜல்லிக் கட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற உள்ளது. இந்த போட்டிகளுக்கான முன்னேற்பாடுகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. போட்டியில் வெற்றி பெறுவோருக்கு கார், டிராக்டர் பரிசாக வழங்கப்பட உள்ளது.

அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி தொடக்கம்...இறுதி கட்டத்தில் பணிகள்...கார்,டிராக்டர் உள்ளிட்ட பரிசுகள்!

மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகள்

Published: 

14 Jan 2026 13:52 PM

 IST

2026 பொங்கல் பண்டிகையையொட்டி, மதுரை மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற உள்ளன. அதன்படி, இந்த போட்டிகளுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில், அவனியாபுரத்தில் நாளை வியாழக்கிழமை ( ஜனவரி 15) ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குகிறது. இதே போல, பாலமேட்டில் வெள்ளிக்கிழமையும் ( ஜனவரி 16), அலங்காநல்லூரில் சனிக்கிழமை ( ஜனவரி 17) ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்க உள்ளன. இந்த போட்டிகளை, முதல்வர் மு. க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தொடங்கி வைக்க உள்ளனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கான இறுதி கட்டப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

ரூ.67 லட்சத்தில் ஜல்லிக்கட்டு பணிகள்

அதன்படி, மதுரை மாநகராட்சி சார்பில் ரூ. 67 லட்சத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான விழா மேடைகள், ஜல்லிக்கட்டு காளைகளை வரிசைப்படுத்துவதற்கான தடுப்பு வேலி, ஜல்லிக்கட்டு காளைகள் பரிசோதனை செய்யும் இடம், போட்டியில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் காயம் அடையாமல் இருப்பதற்காக தேங்காய் நார் பரப்பும் பணி, அவனியாபுரம், திருப்பரங்குன்றம் சாலையில் இருபுறங்களிலும் இரும்பு தடுப்புகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.

மேலும் படிக்க: உலக புகழ்பெற்ற மதுரை ஜல்லிக்கட்டு போட்டி… 15,047 காளைகள்-5,234 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு

சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவ குழுக்கள்

இதே போல, போட்டியில் பங்கேற்கும் காளைகளை பிடிக்கும் பகுதி அமைத்தல், அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை, போட்டியில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் காயம் அடைந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவ குழுக்கள், ஜல்லிக்கட்டு போட்டிகளை காண வரும் பார்வையாளர்கள் அமர்வதற்கான இடம், காளைகளை அவிழ்த்து விடும் வாடிவாசல் உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் 90 சதவீதம் அளவுக்கு முடிவடைந்து விட்டன.

பாதுகாப்பு பணியில் போலீசார்

மேலும், எஞ்சிய 10 சதவீத பணிகளான வர்ணம் தீட்டும் பணி, தென்னை நார்கள் பரப்பும் பணி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அலங்காநல்லூர் மற்றும் பாலமேட்டில் முதல்வர் மு. க. ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்க உள்ளதால், அந்தப் பகுதியில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், பாதுகாப்பு பணியில் காவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

கார்-டிராக்டர், பைக் உள்ளிட்ட பரிசுகள்

இந்த போட்டியில் பங்கேற்று வெற்றி பெறும் வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.8 லட்சம் மதிப்பிலான கார்கள், டாக்டர்கள், பைக், கட்டில், பாத்திர பொருட்கள், ரொக்க பணம் ஆகியவை பரிசாக வழங்கப்பட உள்ளது. இந்த பொருட்கள் அனைத்தும் வாடிவாசல் பகுதியில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. இதனால், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் பகுதிகள் விழாக் கோலம் பூண்டு காணப்படுகிறது.

மேலும் படிக்க: மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகள்…தடபுடலாக தயாராகும் வாடிவாசல்…களம் காணும் காளைகள்-காளையர்கள்!

திருடப்பட்ட செல்போனை தொழில்நுட்ப உதவியுடன் கண்டறிந்த இளம்பெண்
ஜூன் மாதம் முதல் ரீச்சார்ஜ் திட்டங்களின் விலை உயர்வு?.. எந்தெந்த நெட்வொர்க் இதில் அடங்கும்?
உலகின் முதல் குளோன் ஹைபிரிட் அரிசி வகையை உருவாக்கிய சீனா
மக்களின் துயரத்தை துடைக்கும் போன் பூத்