தவெக தேர்தல் அறிக்கை குழு லிஸ்டில் பெயர் மிஸ்ஸிங்.. விஜய் மீது செங்கோட்டையன் அப்செட்?.. வெளியான விளக்கம்!!
TVK Sengottaiyan Explanation: தவெக சார்பில் 12 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை விஜய் உருவாக்கியிருந்தார். இதில், சமீபத்தில் தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர் கூட அந்த குழுவில் உள்ளார். ஆனால் மிகுந்த அனுபவம் பெற்ற செங்கோட்டையன் இடம்பெறாதது பரபரப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தியது.

கோப்புப் புகைப்படம்
சென்னை, ஜனவரி 20: தவெக தேர்தல் அறிக்கை குழு லிஸ்டில் செங்கோட்டையன் இடம் பெறாதது பல்வேறு சர்ச்சைகளுக்கு வழிவகுத்துள்ளது. மூத்த தலைவரான அவரை தவிர்த்து, தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் இடம்பெற்றது. 50 வருடத்திற்கு மேலாக அரசியல் அனுபவம் கொண்ட செங்கோட்டையனை தவிர்த்து, எந்த அரசியல் அனுபவமும் இல்லாதவர்கள் இந்த குழுவில் இடம்பெற்றிருந்தனர். இதனை குறிப்பிட்டு இணையத்தில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்த விமர்சனத்திற்கு பதிலளிக்கும் வகையில், செங்கோட்டையன் ஒரு விளக்கத்தையும் வெளியிட்டுள்ளார். அவர் என்ன கூறினார் என்பது குறித்து இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.
மேலும் படிக்க: யூடியூப் வீடியோவால் வந்த வினை…உடல் எடையை குறைப்பதற்காக நாட்டு மருந்து சாப்பிட்ட மாணவி…அடுத்து நடந்த விபரீதம்!
தமிழகத்தில் பரபரக்கும் தேர்தல் களம்:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. மக்கள் சந்திப்பு, கூட்டணி பேச்சுவார்த்தை, வேட்பாளர்கள் தேர்வு, மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என பரபரப்பாக இயங்கி வருகின்றன. தற்போது வரை அதிமுக – பாஜக கூட்டணியில் பாமக மட்டுமே கூட்டணியை இறுதி செய்துள்ளது. வேறு எந்த கட்சிகளும் கூட்டணியை இறுதி செய்ததாக தெரியவில்லை. தொடர்ந்து, கூட்டணி இறுதி செய்யப்பட்டால் கூட, தொகுதிப் பங்கீடு உடன்பாடு எட்டப்படுமா? அல்லது அதற்காக மீண்டும் கூட்டணியில் குழப்பம் நிலவுமா என பல எதிர்ப்புகளுடன் தேர்தல் களம் பரபரப்பாக இயங்கி வருகிறது. குறிப்பாக இம்முறை காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணியை தொடருமா என்பது பெரும் குழுப்பமாக நீடித்து வருகிறது.
செங்கோட்டையன் பெயர் மிஸ்ஸிங்:
இதனிடையே, திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை உருவாக்கியுள்ளனர். தவெக சார்பில் 12 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை விஜய் உருவாக்கியிருந்தார். இதில் அந்தக் கட்சியின் கொள்கை பிரிவு பொதுச்செயலாளர் அருண்ராஜ், ராஜ்மோகன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். சமீபத்தில் தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர் கூட அந்த குழுவில் உள்ளார். ஆனால் மிகுந்த அனுபவம் பெற்ற தவெக தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், தவெக தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் இடம்பெறவில்லை. இது பரபரப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தியிருந்தது. தேர்தல் அறிக்கை குழுவினரின் முதல் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இது பல்வேறு விமர்சனங்களுக்கு வழிவகுத்தது.
பிரச்சார பணி குழுவில் செங்கோட்டையன்:
அதேசமயம், தவெக தேர்தல் பிரச்சார பணிகளை மேற்கொள்வதற்காக 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்த குழுவில், தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, மாநில நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன், ஏ.பார்த்திபன், பி.ராஜ்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர்.
செங்கோட்டையன் விளக்கம்:
புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் வந்தவன் நான். சோதனை ஏற்பட்ட போது என்னை கரம் பிடித்து அரசியலில் ஒரு வரலாறு படைகின்ற அளவிற்கு இன்று என்னை உருவாக்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தளபதி அவர்கள் என்றும் என் நெஞ்சத்தில் நீங்கா இடம் பெற்றவர். அவர் 2026 இல்…
— K.A Sengottaiyan (@KASengottaiyan) January 20, 2026
இதுகுறித்து செங்கோட்டையன் தனது எக்ஸ் பதிவில், புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் வந்தவன் நான். சோதனை ஏற்பட்ட போது என்னை கரம் பிடித்து அரசியலில் ஒரு வரலாறு படைகின்ற அளவிற்கு இன்று என்னை உருவாக்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தளபதி அவர்கள் என்றும் என் நெஞ்சத்தில் நீங்கா இடம் பெற்றவர். அவர் 2026ல் தமிழ்நாடு முதலமைச்சர் ஆகும் வரை நாங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து மக்கள் செல்வாக்கோடு அவரை ஆட்சி கட்டிலில் அமர வைப்போம்.
மேலும் படிக்க: மதுரை எல்ஐசி அலுவலக தீ விபத்து சம்பவம்…மேலாளர் உயிரிழப்பில் திடீர் திருப்பம்…உதவி மேலாளரின் கொடூர செயல்!
அவருடைய தியாகத்தையும், மனித நேயத்தையும் எவராலும் ஒப்பிட இயலாது. மக்கள் நெஞ்சங்களில் நிறைந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார். எங்கள் வாழ்வும், தமிழகத்தின் எதிர்காலமும், அவருடைய தலைமையில் அமையப் போகின்றது. அதற்காகத்தான் நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றி வருகிறோம். நாளிதழில் உண்மைக்கு மாறான செய்தி வெளியாகி இருப்பது வேதனை அளிக்கிறது. நடு நிலை என்று சொல்லிக்கொண்டு இதுபோன்ற தவறான செய்திகளை வெளியிடுவது பத்திரிகை தர்மத்திற்கு உகந்ததல்ல. இந்த செய்தியை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.