அனைத்து ரேஷன் கடைகளிலும் இணைய இணைப்பு கட்டாயம்.. அரசு அதிரடி உத்தரவு!!

Ration shops: ரேஷன் கடைகளுக்கு தமிழ்நாடு ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க் நிறுவனம் மூலம் இணைய இணைப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது வரை தமிழ்நாடு ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க் நிறுவனம் மூலம் 28 ரேஷன் கடைகளுக்கு இணைய இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து ரேஷன் கடைகளிலும் இணைய இணைப்பு கட்டாயம்.. அரசு அதிரடி உத்தரவு!!

கோப்புப் புகைப்படம்

Updated On: 

14 Feb 2026 12:17 PM

 IST

சென்னை, பிப்ரவரி 14: தமிழ்நாட்டில் இதுவரை இணைய வசதி இல்லாத ரேஷன் கடைகளுக்கு இணைய இணைப்பு வழங்க உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரி அவசர உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழ்நாட்டில், 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லம் தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் தாயுமானவர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது மக்களுக்கு மிகவும் பயனுள்ள திட்டமாக இருந்து வருகிறது. இருந்தபோதிலும், இத்திட்டத்தை செயல்படுத்துவதில் ரேஷன் கடை பணியாளர்கள் பல்வேறு சிரமங்களை அடைந்து வருகின்றனர்.

மேலும் படிக்க: உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. அதிகாலையில் கொட்டும் பனி.. இன்னும் எத்தனை நாட்களுக்கு இருக்கும்?

ரேஷன் கடை ஊழியர்களின் கோரிக்கை:

இதனால், 50 வயதுக்கு மேற்பட்ட பெண் பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள், உடல் நலக்குறைவுடன் காணப்படும் பணியாளர்களுக்கு தாயுமானவர் திட்ட விநியோகத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். தாயுமானவர் திட்டம் செயல்படும் நாட்களுக்கு மட்டும் ‘புளூடூத்’ முறையை ரத்து செய்யவேண்டும். ரேஷன்கடை பணியாளர்களின் செல்போன் ‘ஹாட் ஸ்பாட்’ மூலம் விற்பனை முனைய கருவி (POS) இயக்கப்படுவதால், ‘ஓயசீஸ்’ நிறுவனத்தின் தரவுகளை மேம்படுத்திட தக்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அளித்திருந்தனர்.

ரேஷன் கடைகளுக்கு இணைய இணைப்பு:

இதன் பலனாக, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இயக்குனர் சஜானா, இணைய வசதி இல்லாத ரேஷன் கடைகளுக்கு இணைய இணைப்பு வழங்க நிதி நடவடிக்கை எடுத்துள்ளார். இதுகுறித்து கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், சிவகாசி, சேலம், தேனி, திருச்சி, திருவண்ணாமலை, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருப்பூர், வேலூர், விருதுநகர் உள்ளிட்ட மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்களுக்கு இயக்குனர் சஜானா அவசர உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

34,877 ரேஷன் கடைகள்:

தமிழகம் முழுவதும் இயங்கி வரும் 34,877 ரேஷன் கடைகளில் 369 ரேஷன் கடைகள் இணைய இணைப்பு இல்லாத ரேஷன் கடைகளாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த ரேஷன் கடைகளுக்கு தமிழ்நாடு ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க் நிறுவனம் மூலம் இணைய இணைப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது வரை தமிழ்நாடு ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க் நிறுவனம் மூலம் 28 ரேஷன் கடைகளுக்கு இணைய இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: காதலர் தினம்.. எல்லை மீறினால் கடும் நடவடிக்கை.. காதலர்களுக்கு போலீசார் எச்சரிக்கை!!

எனவே, தங்கள் மாவட்டத்தில் இணைய இணைப்பு கிடைக்கப்பெறாத ரேஷன் கடைகளுக்கு தமிழ்நாடு ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க் நிறுவனம் மூலம் இணைய இணைப்பு வழங்கப்படுவதை கண்காணிப்பதோடு, ரேஷன் கடைகளுக்கு இணைய இணைப்பு வழங்கப்பெற்ற உடன் அந்த தகவலை இயக்குனர் அலுவலகத்துக்கு உடனடியாக தெரியப்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இறந்த மாணவியின் குடும்பத்துக்கு 29 மில்லியன் டாலர் இழப்பீடு
நடிகர் ரன்வீர் சிங்கிற்கு வாட்ஸ்அப் மூலம் பணம் கேட்டு மிரட்டல்..
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் காணப்படும் கண்ணாடி பாட்டில்கள் - அதன் அர்த்தம் என்ன தெரியுமா?
பாகிஸ்தானை டாய்லெட் பேப்பரை விட மோசமாக நடத்திய அமெரிக்கா - பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் அதிர்ச்சி தகவல்