இடைக்கால பட்ஜெட் 2026 – தூய்மை பணியாளர்களுக்கு 33,000 வீடுகள்… ஐடி பார்க்.. பட்ஜெட்டில் ஸ்பெஷல் அறிவிப்புகள் எவை?
Tamil Nadu Interim Budget : தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு (Thangam Thennarasu) பிப்ரவரி 17, 2026 அன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது இடைக்கால பட்ஜெட்டிற்கான திட்டங்கள் விவாதிக்கப்பட்டன. அதில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் - தங்கம் தென்னரசு
சென்னை, பிப்ரவரி 17 : தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு (Thangam Thennarasu) பிப்ரவரி 17, 2026 அன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது இடைக்கால பட்ஜெட்டிற்கான திட்டங்கள் விவாதிக்கப்பட்டன. அதில் விளையாட்டுத்துறை, இளைஞர் நலன், நதிக்கரை மேம்பாடு, தொழிலாளர் நலன், கூட்டு குடிநீர் திட்டம், உயர் கல்வித் திட்டம், மருத்துவம் மற்றும் காப்பீட்டு திட்டம், காலை உணவு திட்டம், உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் பயன்பாடுகள் குறித்தும் அவற்றுக்காக ஒதுக்ப்படும் நிதி குறித்தும் தங்கம் தென்னரசு பேசினார். அதுகுறித்து வரிவாக பார்க்கலாம்.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு நிதி
சட்டமன்றத்தில் பேசிய தங்கம் தென்னரசு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு ரூ.3,934 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் உயர்கல்வி திட்டத்தின் கீழ் 385 மாணவர்கள் பயனைடந்துள்ளனர். சிறுபாண்மையின மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்காக ரூ.16 கோடி ஒதுக்கீடு செய்யப்ப்டடுள்ளது என்றார்.
தூய்மை பணியாளர்களுக்கு வீடுகள்
தூய்மை பணியாளர்களுக்கு கூடுதலாக 30,000 வீடுகள் கட்டித்தரப்படும் என தங்கம் தென்னரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2025 ஆம் ஆண்டு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து தூய்மை பணியாளர்கள் சென்னை ரிப்பன் பில்டிங் வாசலில் போராட்டம் நடத்திய நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க : கிராமங்களுக்கு இன்டர்நெட்.. தகவல் தொழில்நுட்பத்தில் அசத்தல் அறிவிப்புகள்…
ஐடி பார்க்
தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காகவும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்குவதற்காககவும் பல மாவட்டங்களில் ஐடி பூங்காக்கள் மற்றும் மினி ஐடி பூங்காக்கள் உருவாக்கப்படவிருக்கின்றன. திருச்சி, மதுரை, ஓசூர் ஆகிய இடங்களில் 1070 கோடி மதிப்பில் டைட்டில் பூங்காவும், நாமக்கல், திருவண்ணாமலை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, நாகப்பட்டினம், கரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய இடங்களில் 388 கோடியில் மினி டைட்டல் பூங்காவும் நிறுவப்படவுள்ளன.
மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் தொற்றா நோய்களைக் கண்டறிய வீடுகளுக்கு நேரடியாக சென்று பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன என்றும் இதன் காரணமாக 2.55 கோடி பயனாளிகள் முதன்முறையாகவும், 4.75 கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகள் தொடர் மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதையும் படிக்க : பெண்களுக்கு தனி நல வாரியம்… தங்கம் தென்னரசு கொடுத்த சூப்பர் அறிவிப்பு!
தூத்துக்குடியில் புதிய கப்பல் கட்டும் தளம்
தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் சிப்காட் நிறுவனம் மற்றும் வ.உ.சி சிதம்பரனார் துறைமுக ஆணையத்துடன் இணைந்து ரூ.5200 கோடி மதிப்பீட்டில் ஒரு புதிய கப்பல் கட்டும் தொகுப்பை நிறுவி வருகிறது. மேலும் முன்னணி கப்பல் கட்டும் நிறுவனங்களுடன் இணைந்து சுமார் 30 ஆயிரம் கோடி மதிப்பில் முதலீடுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
புதிய அருங்காட்சியகங்கள்
தமிழ்நாட்டில் கீழடி மற்றும் பொருநை அருங்காட்சியகங்களை தொடர்ந்து தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் சோழர் அருங்காட்சியகம், கங்கை கொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம், ஈரோட்டில் நொய்யல் அருங்காட்சியகம், ராமநாதபுரத்தில் நாவாய் அருங்காட்சியகம் என ரூ.285 கோடி மதிப்பில் புதிய அருங்காட்சியகங்கள் அமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.