Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தற்கொலைக்கு முயன்ற இன்ஸ்டா காதலி…. காப்பாற்ற முயன்று உயிரை விட்ட இளைஞர் – திருவாரூர் நடந்த சோகம்

Insta love tragedy: திருவாரூர் அருகே இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய காதலி தற்கொலைக்கு முயல, அவரை காப்பாற்ற குளத்தில் குதித்த இளைஞர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது அந்த பெண்ணை உயிருடன் மீட்ட காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தற்கொலைக்கு முயன்ற இன்ஸ்டா காதலி…. காப்பாற்ற முயன்று உயிரை விட்ட இளைஞர் – திருவாரூர் நடந்த சோகம்
உயிரிழந்த பிரவீன் குமார்
Karthikeyan S
Karthikeyan S | Published: 23 Oct 2025 21:01 PM IST

இன்ஸ்டாகிராம் (Instagram) மூலம் பழகிய பெண்ணை இளைஞர் ஒருவர் காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் ஒரு பிரச்னையில் அந்தப் பெண் குளத்தில் விழுந்து தற்கொலை செய்ய முயற்சித்திருக்கிறார். அவரை காப்பாற்றும் முயற்சியில் இளைஞரும் கிணற்றில் குதித்திருக்கிறார். இந்த நிலையில் எதிர்பாராத விதமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனையடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர்,  அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் (Police),  இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தற்போது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இன்ஸ்டா காதலிக்காக உயிரை விட்ட இளைஞர்

திருவாரூர் மாவட்டம் திருக்கண்மங்கை பகுதியை சேர்ந்தவர் பிரவீன் குமார். இவர் இன்ஸ்டாகிராமில் பழகிய பெண்ணுடன் காதலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் பிரச்னையில் அந்த பெண் திருக்கண்ணமங்கை அருகே குளத்தில் குதித்து விபரீத முடிவெடுத்துள்ளார். இந்த நிலையில் அவரைக் காப்பாற்ற நினைத்து பிரவீன் குமாரும் குளத்தில் குதித்துள்ளார். இந்த நிலையில் நீரில் மூழ்கி பிரவீன் குமார் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இளம்பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க : தலை தீபாவளி முடிந்து வேலைக்கு சென்ற கணவன்.. மனைவி தற்கொலை

இன்ஸ்டாகிராம் காதலியை காப்பாற்ற முயன்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அந்த பெண் தற்கொலைக்கு முயன்றதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். விசாரித்து வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் பழகிய பெண்ணுக்காக ஒரு இளைஞர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இன்ஸ்டாகிராம் காதலர் பேசாததால் தற்கொலை செய்துகொண்ட பெண்

இதே போல கடந்த 2024 ஆம் ஆண்டு திருச்சி பாலக்கரை அருகே 16 வயது பெண் ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் காஞ்சிபுரத்தை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் திடீரென் அந்த இளைஞர், பெண்ணிடம் பேசுவதை நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட பெண்  வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, அந்த இளைஞருக்கு இன்ஸ்டாகிராமில் மெசேஜ் அனுப்பி விட்டு,   தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர்.

இதையும் படிக்க : தனிமையில் இருந்ததை வீடியோ எடுத்து மிரட்டல்.. இளம்பெண் தற்கொலை!

சமூக வலைதளங்கள் குறித்து இன்றைய இளைஞர்களுக்கு போதிய புரிதல் இல்லாததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் இருப்பதையே நிஜ வாழ்க்கையாக கருதுவதால் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.  சமூக வலைதளங்கள் குறித்து பள்ளிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக இருக்கிறது.