கிட்னிகள் ஜாக்கிரதை.. சட்டசபைக்கு பேட்ஜ் அணிந்து வந்த அதிமுக எம்.எல்.ஏக்கள்..
Tamil Nadu Assembly: அக்டோபர் 16, 2025 அன்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள், நாமக்கல் மாவட்டம் கிட்னி திருடப்பட்ட விவகாரம் தொடர்பாக விவாதிக்கத் கிட்னிகள் ஜாக்கிரதை பேட்ஜ்களை அணிந்து வந்தனர். மேலும் கிட்னி திருட்டு புகார் தொடர்பாக சட்டசபையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றையும் கொண்டு வந்தது.

சென்னை, அக்டோபர் 16, 2025: தமிழக சட்டசபை கூட்டத் தொடர் நேற்று முன்தினம், அதாவது அக்டோபர் 14, 2025 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. நான்கு நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத் தொடரில், அக்டோபர் 16, 2025 என்ற இன்று சட்டசபை கூட்டத்தொடருக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் “கிட்னிகள் ஜாக்கிரதை” வாசகங்கள் இடம் பெற்றிருந்த பேட்ஜ்களை அணிந்து வந்தனர். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. நாமக்கல் மாவட்டத்தில் சிறுநீரகம் (கிட்னி) திருடப்பட்டு விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தை கண்டிக்கும் வகையில் இதனை மேற்கொண்டுள்ளனர். அக்டோபர் 15, 2025 என்ற நேற்று சட்டசபை கூட்டத் தொடரில், அதிமுக தரப்பில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விவாதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. மேலும் அவர்கள் அதனை அமல்படுத்த முயன்றனர்.
அதனை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக பேசினார். அப்போது பேசிய அவர், “கரூர் கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணம் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தாமதமாக வந்ததுதான்,” என குறிப்பிட்டார். அதேபோல் பிற கட்சிகள் கடைபிடிக்கும் சில விதிமுறைகள் தமிழக வெற்றி கழகத்தால் கடைபிடிக்கப்படவில்லை என்றும், எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அனைத்து அரசியல் கட்சிகளும் உறுதி அளிக்க வேண்டும் என்றும் கூறினார்.
மேலும் படிக்க: நெருங்கும் தீபாவளி பண்டிகை.. சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முழு விவரம்..
கிட்னி ஜாக்கிரதை பேட்ஜ் அணிந்து வங்த அதிமுக எம்.எல்.ஏக்கள்:
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் ஆணைக்கிணங்க, சட்டப்பேரவைக்கு கிட்னிகள் ஜாக்கிரதை என்ற வாசகத்துடன் கூடிய பேட்ஜ் அணிந்து வந்த @AIADMKOfficial சட்டமன்ற உறுப்பினர்கள்.#கிட்னிகள்_ஜாக்கிரதை #ADMK_TRY pic.twitter.com/QCib5mX9fF
— srini11-Epsfor2026 (@SRINI__11) October 16, 2025
அதனை தொடர்ந்து அக்டோபர் 16, 2025 அன்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள், நாமக்கல் மாவட்டம் கிட்னி திருடப்பட்ட விவகாரம் தொடர்பாக விவாதிக்கத் கிட்னிகள் ஜாக்கிரதை பேட்ஜ்களை அணிந்து வந்தனர். மேலும் கிட்னி திருட்டு புகார் தொடர்பாக சட்டசபையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றையும் கொண்டு வந்தது.
மேலும் படிக்க: கனமழை எதிரொலி.. 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!
அத்தீர்மானத்துக்கு பதில் அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது: “கிட்னி விற்பனை இப்போது மட்டும் அல்ல, முந்தைய காலங்களிலும் நடந்துள்ளது. நாமக்கல்லில் கிட்னி திருட்டு புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்:
மத்தியஸ்தர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு வழங்கிய சான்றிதழும் ரத்து செய்யப்பட்டுள்ளது. உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படும். உடல் உறுப்புகளை விற்பனை செய்வது தவறானது என்பதைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இந்த விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் பாகுபாடின்றி நடவடிக்கை எடுக்கப்படும்,” என குறிப்பிட்டார்.