ரூ.9.5 கோடியில் உயர் ரக கஞ்சா.. அசந்துபோன அதிகாரிகள்.. சென்னை ஏர்போர்ட்டில் பரபர!
Chennai Airport Ganja Seized : சென்னை விமான நிலையத்தில் தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.9.5 கோடி மதிப்பில் உயர் ரக கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இரண்டு பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயர் ரக கஞ்சா பறிமுதல்
சென்னை, அக்டோபர் 10 : சென்னை விமான நிலையத்தில் ரூ.9.5 கோடி மதிப்பில் உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிக அளவில் பதப்படுத்தப்பட்ட ஹைட்ரோபோனிக் கஞ்சா தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்டது தெரியவந்துள்ளது. சென்னை விமான நிலையம் எப்போதுமே பரபரப்பாகவே காணப்படும். விமான நிலையத்தில் தீவிர சோதனைகளும் இருந்து வருகிறது. இருப்பினும், வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு உயர் ரக கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் கடத்தி வரப்பட்டு வருகிறது. நூத முறையில் பலரும் போதைப் பொருட்களை கடத்தி வருகின்றனர். இதனை தடுக்க பல நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும், தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதனையும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில், தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது.
அதாவது தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு ரூ.9.5 கோடி மதிப்பில் உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு வெளிநாடுகளில் இருந்து உயர் ரக கஞ்சா கடத்தி வரப்படுவதாகவும் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால், சுங்கத்துறை அதிகாரிகள் சென்னை விமான நிலையத்துக்கு வரும் பயணிகளை தீவிரமாக கண்காணித்து இருந்தனர். இந்த நிலையில், தாய்லாந்தில் இருந்து விமானம் ஒன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணித்தபோது, வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது.
Also Read : மூலிகை சிகிச்சை.. அழகு நிலையம் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. பறிபோன காது!
ரூ.9.5 கோடியில் உயர் ரக கஞ்சா
இதனை அடுத்து, அவரை மறித்து விசாரணை மேற்கொண்டனர். அவரது ஆவணங்களை சரிபார்த்தபோது, அவர் அவர் சுற்றுலா விசாவில் தாய்லாந்துக்குச் சென்றிருப்பது கண்டறியப்பட்டது. தாய்லாந்தில் இருந்து சென்னை வந்தது ஏன் என அந்த பயணியிடம் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் முன்னுக்குபின் முரணாக பேசினார். இதனை அடுத்து, அவரது பைகளை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது, அதில் ஹைட்ரோபோனிக் கஞ்சா இருப்பதைக் கண்டறிந்தனர். ரூ.7.5 கோடி மதிப்புள்ள 7.5 கிலோ கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதற்கிடையில், தாய்லாந்திலிருந்து வேறொரு விமானத்தில் வந்த பயணிகளைக் கண்காணித்து வந்த அதிகாரிகள் குழு, கஞ்சா கடத்துவதாக சந்தேகத்தின் பேரில், ஒரு பயணிகளை வழிமறித்து சோதனையிட்டனர்.
Also Read : குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு? – மதுரை அருகே அதிர்ச்சி சம்பவம்!
அவரது பைகளை சோதனையிட்டதில் ரூ.2 கோடி மதிப்பிலான 2 கிலோ உயர் ரக கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. இதனை அடுத்து இரண்டு பேரையும் அதிகாரிகள் கைது செய்தனர். இந்த கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய மற்றவர்களைப் பிடிக்க சுங்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.