Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆகஸ்ட் 4-ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு!

High Court Orders: பணி நீக்கத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த 16 ஊழியர்களுக்கு 1996ல் பணி வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக அரசு இதை செயல்படுத்தாததைத் தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதற்காக 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆகஸ்ட் 4ல் நேரில் ஆஜராக உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆகஸ்ட் 4-ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு!
உயர்நீதிமன்றம் Image Source: x
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 14 Jul 2025 21:26 PM

சென்னை ஜூலை 14: 1991ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census) பணிக்காக நியமிக்கப்பட்ட ஊழியர்கள் பின்பு பணி நீக்கம் செய்யப்பட்டனர். பின்னர் நிர்வாக தீர்ப்பாய உத்தரவில் மாற்றுப் பணியில்இணைக்கப்பட்டு, வணிக வரித்துறையில் இளநிலை உதவியாளராக (Junior Assistant) நியமனம் செய்யப்பட்டனர். 2004ல் பணியின் தொடக்க தேதி நிர்ணயிக்கப்பட்டதால், பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்படாமல், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். இதை எதிர்த்து 16 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர, 1996 முதல் பணி எண்ணப்படும் வகையில் 2024ல் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் தமிழக அரசு இதுவரை உத்தரவை அமல்படுத்தவில்லை. எனவே நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் (6 IAS officers) 2025 ஆகஸ்ட் 4ல் ஆஜராக உத்தரவு பெற்றுள்ளனர்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நேரில் ஆஜராகும்படி உத்தரவு

தமிழக அரசால் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக, உயர்நீதிமன்ற உத்தரவை செயலில் அமல்படுத்தாததால், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நேரில் ஆஜராகும்படி சென்னை உயர்நீதிமன்றம் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது.

தொகை கணக்கெடுப்பு பணிக்காக 1991-ம் ஆண்டு தமிழக அரசு பலரை பணியில் அமர்த்தியதைக் குறித்த வழக்கில், பின்னர் அவர்களை பணிநீக்கம் செய்தது. இதை எதிர்த்து ஊழியர்கள் நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர, அவர்களுக்கு மாற்றுப் பணி வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இத்தீர்ப்பு, உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தாலும் உறுதி செய்யப்பட்டது.

அந்த அடிப்படையில், சேக் அப்துல் காதர், எல். அழகேசன், பி. சர்மிளா பேகம் உள்ளிட்ட 16 பேருக்கு வணிக வரித்துறையில் இளநிலை உதவியாளர் பணிகள் வழங்கப்பட்டன. இவர்கள் பணிக்குவித்திய தேதி 2004 என நிர்ணயம் செய்யப்பட்டதால், பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்படாமல், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்கப்பட்டனர்.

Also Read: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி.. யார் இந்த எம்.எம்.ஶ்ரீவஸ்தவா?

இதை எதிர்த்து, 16 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தங்களது பணி ஏப்ரல் 8, 1996 முதல் கணக்கிடப்பட வேண்டும் எனவும், பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். இதை ஏற்று, 2024-ம் ஆண்டு பிப்ரவரியில் நீதிமன்றம் அதற்கான உத்தரவு வழங்கியது.

அந்த உத்தரவை தமிழக அரசு இன்னும் அமல்படுத்தாததால், ஊழியர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தனர். இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி பட்டு தேவானந்த், அதிகாரிகளை நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.

ஆஜராக வேண்டிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்

சி. சமயமூர்த்தி – முதன்மை செயலாளர், பணியாளர் மற்றும் நிர்வாகத்துறை

டி. உதயச்சந்திரன் – நிதித்துறை செயலாளர்

ராஜேஷ் லக்கானி – வருவாய் நிர்வாகத்துறை ஆணையர்

எஸ். கண்ணப்பன் – இயக்குநர், பள்ளிக்கல்வித் துறை

டி. ஜெகன்நாதன் – கமிஷனர், வணிகவரித்துறை

கிருஷ்ணன் உன்னி – கமிஷனர், கருவூலம் மற்றும் கணக்குத்துறை

இவர்கள் 2025 ஆகஸ்ட் 4ஆம் தேதி, நேரில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பும் வகையில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.