சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி.. யார் இந்த எம்.எம்.ஶ்ரீவஸ்தவா?
Chennai High Court Chief Justice: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஶ்ரீராம் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில், புதிய தலைமை நீதிபதியாக மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட உயர் நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றி உள்ளார்.

சென்னை, ஜூலை 14, 2025: ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஶ்ரீவஸ்தவா எனும் மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா சென்னை உயர் நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஶ்ரீராம் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர் மகாதேவன் பதவி வகித்த வந்த நிலையில், அவர் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார்.
தலைமை நீதிபதியாக இருந்த கே.ஆர் ஸ்ரீராம்:
இதனைத் தொடர்ந்து அந்த இடம் காலியாக இருந்தது. இதற்கிடையில் அந்த பதவிக்கு மும்பை உயர் நீதிமன்றம் மூத்த நீதிபதி கே ஆர் ஸ்ரீராமை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்தது. அதன் பெயரில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே ஆர் ஸ்ரீராமை நியமனம் செய்து இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் படிக்க: போராட்டத்தின்போது சாலையின் தடுப்புகள் சேதம் – சரிசெய்ய அனுமதி கேட்டு தவெக கடிதம்!
அதனைத் தொடர்ந்து அவர் செப்டம்பர் 27, 2024 ஆம் ஆண்டு பதவியேற்றார். இந்நிலையில் அவர் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கான பரிந்துரை 2025 மே 26 ஆம் தேதி உச்சநீதிமன்றம் கொலீஜியம் வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் வருகின்ற செப்டம்பர் 28ஆம் தேதியுடன் அவரது பதவிக்காலம் முடிவடைந்து ஓய்வு பெறுகிறார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி:
இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதியாக மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட உயர் நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றி உள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை இவர் சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றினார்.
மேலும் படிக்க: திருப்பத்தூர் ரயில் வழக்கில் அதிரடி தீர்ப்பு: கர்ப்பிணி பெண்ணை கீழே தள்ளிய குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை!
பின்னர் பொறுப்பு தலைமை நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். தற்போது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கே.ஆர்.ஶ்ரீராம் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதியாக மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.