Rain Alert: தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது..
Heavy Rain: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதன் காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை நேற்று முன்தினம் இரவில் பல இடங்களில் நல்ல மழை பெய்தது. புறநகர் பகுதிகளில் நேற்று பல இடங்களில் நல்ல மழை பெய்தது.

கோப்புப்படம்
சென்னை, நவம்பர் 23: தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த நவ.17ம் தேதி வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் காரணமாக, தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதோடு, மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன் காரணமாக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. இந்நிலையில், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் (நவ.22) நேற்று அந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : டிசம்பர் மாத இறுதிக்குள் சென்னையில் குடிநீர் மீட்டர் பொருத்தம்.. இதன் பயன்பாடும் முக்கிய அம்சங்களும் என்ன?
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும்:
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகிற நவ.24 அன்று தென்கிழக்கு வங்கக்கடலில் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தற்கடுத்த 48 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாகவும் வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:
அதன்படி, தமிழத்தில் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, அரியலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
11 மாட்டவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு:
தொடர்ந்து, நாளையும் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதையும் படிக்க : எய்ம்ஸ் வராது… மெட்ரோவையும் வரவிட மாட்டோம்…. மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
அதிகபட்ச மழை பொழிவு:
கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்தில் 12 செ.மீ மழை பெய்துள்ளது. நாலுமுக்கு 11 செ.மீ, காக்காச்சி, மாஞ்சோலை தலா 9, கன்னியாகுமரி மாவட்டம் மைலாடி 7 செ.மீ மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
நவ.25 மற்றும் 26ம் தேதி தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் 24ம் தேதிக்குள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.