சுட்டெரிக்கும் வெயில்.. வாகன ஓட்டிகளுக்காக சென்னையில் 40 சிக்னல்களில் பசுமை பந்தல்கள்!

Heat Green Pavilions at 40 Signals in Chennai | கோடையை முன்னிட்டு சென்னையில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக உள்ளது. இந்த நிலையில், வாகன ஓட்டிகளை வெப்பத்தில் இருந்து பாதுகாக்க பல இடங்களில் பசுமை பந்தல்களை அமைக்கும் பணிகளை மாநகராட்சி கையில் எடுத்துள்ளது.

சுட்டெரிக்கும் வெயில்.. வாகன ஓட்டிகளுக்காக சென்னையில் 40 சிக்னல்களில் பசுமை பந்தல்கள்!

கோப்பு புகைப்படம்

Published: 

18 Mar 2026 08:10 AM

 IST

சென்னை, மார்ச் 18 : தமிழகத்தில் (Tamil Nadu) விரைவில் கோடைக்காலம் தொடங்க உள்ளது. இந்த நிலையில், தற்போது முதலே வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாக, சென்னையில் (Chennai) வெயிலின் தாக்கத்தால் வாகன ஓட்டிகள் கடும் சிரமங்களை எதிர்க்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், வாகன ஓட்டிகளின் நலன் கருதி சென்னையில் சுமார் 40 இடங்களில் பசுமை பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சென்னையில் 40 இடங்களில் பசுமை பந்தல்கள் அமைப்பு

தற்போதைய சூழலில் சென்னையில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக உள்ளது. இந்த நிலையில், சென்னையில் வாகன ஓட்டிகள் கடும் சவால்களை எதிர்க்கொண்டு வருகின்றனர். மதிய நேரங்களில் சில நிமிடங்கள் கூட வெயிலில் இருக்க முடியாத நிலை உள்ளது. இத்தகைய சூழலில் வாகன ஓட்டிகள் சிக்னலில் நிற்கும்போது அதிக வெப்பத்தை தாங்க கூடிய நிலை உள்ளது. இதன் காரணமாக சென்னை மாநகராட்சி பசுமை பந்தல்களை அமைத்துள்ளது.

இதையும் படிங்க : வாக்குப்பதிவு நாளில் ஒரு நற்செய்தி… விடுமுறையும் உண்டு.. ஊதியமும் உண்டு… தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

2024  ஆம் ஆண்டு தொடங்கிய பசுமை பந்தல்

சென்னை மாநகராட்சி முதன் முதலாக 2024 ஆம் ஆண்டு கோடையின்போது பசுமை பந்தல்களை அமைத்தது. அது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அதனை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக 2025 ஆம் ஆண்டு 18 போக்குவரத்து சிக்னல்களில் மாநகராட்சி பசுமை பந்தல்களை அமைத்தது. அதனை தொடர்ந்து தற்போது பசுமை பந்தல்கள் அமைக்கும் பணிகளை கையில் எடுத்துள்ளது.

இதையும் படிங்க : திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்.. தனிநீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை

தீவிரமாக மேற்கொள்ளப்படும் பணிகள்

இந்த நிலையில்  2026 ஆம் ஆண்டுக்கான பசுமை பந்தல்கள் அமைக்கும் பணிகளை சென்னை மாநகராட்சி கையில் எடுத்துள்ளது. தற்போது வரை 8 இடங்களில் பசுமை பந்தல்கள் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. 22 இடங்களில் பசுமை பந்தல்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் 10 இடங்களில் பசுமை பந்தல்கள் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது என சென்னை மாநகராட்சி சார்பில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us
Related Stories
Tamil Nadu Assembly Election: இனி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க முடியாது! விவரம் உள்ளே!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு… தொகுதியை குறைக்க காரணம் இதுதான்… மு.வீரபாண்டியன் விளக்கம்!
எரிந்த காரில் 4 சடலம் மீட்கப்பட்ட சம்பவம்.. சென்னையை சேர்ந்தவர்கள் நெல்லையில் தற்கொலை செய்தது ஏன்? பரபரப்பு தகவல்கள்!
ரஜினிகாந்த் குறித்து பரபரப்பு கருத்து… பகிரங்க மன்னிப்பு கேட்ட ஆதவ் அர்ஜூனா!
தவெகவுக்கு கூட்டணி தூது விட்ட பாஜக தலைமை? க்ரீன் சிக்னல் காட்டவிருந்த விஜய்… திடீரென பின்வாங்க காரணம் என்ன!
தொடர் பலி வாங்கும் தொப்பூர் சாலை… பரிதாபமாக பறிபோன இரு உயிர்கள்.. கோயிலுக்கு சென்று திரும்பிய போது சோகம்!
வங்கி லாக்கரில் வைக்கப்படும் நகைகளுக்கு பாதுகாப்பு இல்லையா? உண்மை என்ன?
ஹார்முஸ் கடல் பகுதியில் சிக்கிய இந்திய கேப்டன் பயணித்த கப்பல் - குடும்பத்தினர் கவலை
போர் பதற்றம் - வெறிச்சோடி காணப்படும் துபாய் நகரங்கள்
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு என்பது உண்மையா? மத்திய அரசு விளக்கம்